சென்னை:  தமிழகம் முழுவதும் கடந்த 24மணி நேரத்தில்  ஏற்பட்ட கொரோனா பாதிப்பு குறித்து தமிழ்நாடு சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் இன்று மேலும் 681  பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதிக பட்சமாக சென்னையில் 120 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

தமிழக சுகாதாரத்துறை இன்று இரவு 7.45 மணி அளவில் வெளியிட்டுள்ள தகவலின்படி, மாநிலம் முழுவதும் இன்று 1,02,414 கொரோனா சோதனைகள் செய்யப்பட்டு உள்ளது. இன்று மேலும் 681 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 27,34,715, ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களில் சிகிச்சை பலனின்றி 13 பேர் பலியான நிலையில், இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 36,599 ஆக அதிகரித்துள்ளது.

அதே வேளையில் இன்று மேலும் 719 பேர் சிகிச்சையில் இருந்து குணமடைந்துள்ளதால், குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 26,90,346 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது மாநிலம் முழுவதும் 7,770 பேர் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்று பாதிப்பில்  இன்று மேலும் 120 பேர் பாதிப்புடன் சென்னை முதலிடத்தில் தொடர்கிறது. கோவையில் 108 பேருக்கும், ஈரோட்டில் 54 பேருக்கும், செங்கல்பட்டில் 50 பேருக்கும் திருப்பூரில் 48 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

சென்னையில் கொரோனா பாதிப்பு:

தலைநகர் சென்னையில் இன்று 120  பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 55,93,59 ஆக உயர்ந்து உள்ளது. இன்று மேலும் 2 பேர் பலியாகி உள்ளதுடன் மொத்த உயிரிழப்பு 8,627 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 102 பேர் குணமடைந்துள்ள னர். இதன்மூலம் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 54,94,25  தற்போது சென்னையில் மட்டும்  1307 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்:

அரியலூர் 1
செங்கல்பட்டு 50
சென்னை 120
கோவை 108
கடலூர் 6
தர்மபுரி 4
திண்டுக்கல் 4
ஈரோடு 54
கள்ளக்குறிச்சி 0
காஞ்சிபுரம் 16
கன்னியாகுமரி 13
கரூர் 14
கிருஷ்ணகிரி 17
மதுரை 5
மயிலாடுதுறை 2
நாகப்பட்டினம் 5
நாமக்கல் 49
நீலகிரி 19
பெரம்பலூர் 0
புதுக்கோட்டை 4
ராமநாதபுரம் 1
ராணிப்பேட்டை 4
சேலம் 43
சிவகங்கை 3
தென்காசி 1
தஞ்சாவூர் 13
தேனி 0
திருப்பத்தூர் 3
திருவள்ளூர் 22
திருவண்ணாமலை 7
திருவாரூர் 8
தூத்துக்குடி 2
திருநெல்வேலி 5
திருப்பூர் 48
திருச்சி 18
வேலூர் 9
விழுப்புரம் 2
விருதுநகர் 1