images (18)

‘வை-ஃபை’யை விட 100 மடங்கு வேகம் கொண்ட புதிய இன்டர்நெட் தொழில்நுட்பம் ‘லை-ஃபை’’ விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
தற்போது இன்டர்நெட் யுகத்தில் இருக்கும் ‘வை-ஃபை’ என்ற தொழில்நுட்பத்துக்கு மாற்றாக ‘லை&ஃபை’ என்ற தொழில்நுட்பம் விரைவில் வருகிறது. ‘வை-ஃபை’யை விட நூறு மடங்கு அதிக வேகம் கொண்டதாக இது இருக்கும். ஆய்வக சோதனையில் ஒரு நொடிக்கு 224 ஜிபி வேகத்தில் செயல்படுகிறது. இந்த வேகம் என்பது கண்ணை மூடி திறப்பதற்குள் 18 திரைப்படங்களை டவுன்லோடு செய்துவிடுவதற்கு சமம்.
தலினில் அலுவலக ரீதியிலான பரிசோதனையில் இந்த தொழில்நுட்பம் உள்ளது. 56கே வகை இன்டர்நெட் மோடங்களை பயன்படுத்தியவர்களுக்கு ‘வை-ஃபை’யிவ் வரவு வரப்பிரசாதமாக அமைந்தது. இந்த தொழில்நுட்பம் ரேடியோ அலைகள் மூலம் டேட்டாக்களை பரிமாற்றம் செய்யும். ஆனால் பரிமாற்றத்திற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும்.
வரும் 2019ம் ஆண்டில் உலகம் முழுவதும் ஒவ்வொரு மாதத்துக்கும் தோராயமாக 35 குவின்டில்லியன் பைட்ஸ் தகவல்களை பரிமாற்றம் செய்ய வேண்டியிருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. ‘வை-ஃபை’யால் இது சாத்தியமாகாது. அதனால் ரேடியோ அலைகளை போல், விளக்கு வெளிச்சமும் மின்காந்த ஸ்பெக்டரத்தின் ஒரு பகுதியாகும். இது ரேடியோ அலைகளை விட 10 ஆயிரம் மடங்கு பெரிது. அதனால் ‘லை-ஃபை’க்கு கொள்ளளவு தன்மை அதிகமாக இருக்கும்.
எல்இடி பல்புகளின் வெளிச்சம் ‘லை&ஃபை’ வேலை செய்யும். வேகத்திற்கு ஏற்ப விளக்கு அணைந்து, பின்னர் இயங்கும். வெளிச்சம் அதிவேகமாக பாய்வதால் நம் கண்ணுக்கு அது தெரியாது. ஒவ்வொரு கம்ப்யூட்டருக்கும் ஒரு சிப் பொருத்திவிட்டால் மேலே எரியும் விளக்கு வெளிச்சத்தில் இருந்து கம்பி இல்லா ‘லை-ஃபை’ இணைப்பு கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. லை-ஃபை வந்துவிட்டால் வை-ஃபைக்கு முடிவு ஏற்பட்டுவிடாது. விளக்கின் வெளிச்சம் ரேடியோ அலைகளை போல் திட பொருட்களினுள் ஊடுறுவாது. அறையை விட்டு வெளியே சென்றுவிட்டால் இணைப்பு கிடைக்காது என்பதால் தகவல்கள் முழு பாதுகாப்பாக இருக்கும்.