கோவில்களில் பாடுவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
சென்னையில் 2013ம் ஆண்டு சிவராத்திரி விழாவில் எனது முதல் நிகழ்ச்சி மத்திய கைலாஷில் நடந்தது. எனக்கு பிடித்தவற்றில் கோவில்களில் பாடுவதும் ஒன்று. அடுத்து கடந்த டிசம்பரில் விருகம்பாக்கத்தில் நிகழ்ச்சி நடத்தினேன். இதெல்லாம் எனக்கு பிடித்த இடங்கள். கடந்த ஜனவரியில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் தெய்வத்தின் முன்பு உட்கார்ந்து பாடினேன்.
நான் ஒரு இளம் பாடகி. தற்போது தான் இந்த துறையில் நுழைந்துள்ளேன். அனைத்து சூழ்நிலைகளிலும் பாட சற்று தயக்கமாக தான் இருக்கும். ஆனால் கோவில்களில் பாடும்போது அது இயற்கையாகவும், சுதந்திரமாக இருப்பது போலவும் உணர்கிறேன். ஆடிட்டோரியத்தில் பாடுவதை விட கோவில்களில் பாடும்போது நான் வேற்று கலாச்சாரத்தை, நாட்டை சேர்ந்தவர் என்ற உணர்வு எனக்கு ஏற்படுவது கிடையாது.