சென்னை: பள்ளிகளில், 1, 2ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப் பாடம் தரக் கூடாது என அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. ஏற்கனவே இதுதொடர்பான  உயர்நீதிமன்ற உத்தரவை சரியாக கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.

should not be given homework to1st and 2nd class students! School Education Orderகல்வித்துறை தொடர்பான வழக்கின் விசாரணையின்போது,  ஏற்கனவே உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளபடி, 1, 2ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப் பாடம் தரக் கூடாது என்பதால், இதை உறுதி செய்ய, பிரத்யேக குழு அமைத்து, பள்ளிகளில் ஆய்வு செய்ய, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு ஏற்கெனவே உத்தரவிடப்பட்டு உள்ளது. ஆனால், சில தனியார் பள்ளிகள், மாணவர்களின் வயது, கற்றல் திறனுக்கு அதிகமாக வீட்டுப்பாடம் அளிப்பதாக புகார் எழுந்தது

இதையடுத்து, தற்போது பள்ளிக்கல்வித்தறை, அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளிளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில், நீதிமன்ற உத்தரவுபடி 1, 2ம் வகுப்பு மாணவர்க ளுக்கு வீட்டுப் பாடம் தரக் கூடாது என்றும், எண்ணும் எழுத்தும் திட்டம் செயல்படுவதால், வகுப்பறைகளிலே செயல்திட்டங்கள் மேற்கொள்ளப்படு கின்றன.  மேலும்,  பள்ளிகளை பார்வையிட வட்டார கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது .’நடப்பு கல்வியாண்டு துவங்கியதில் இருந்து, ஆய்வு மேற்கொள்ளப்பட்ட பள்ளிகள் விபரம், மாணவர்களுக்கான கற்றல், கற்பித்தல் நிலை, வீட்டுப்பாடம் வழங்கப்படுகிறதா என ஆய்வு செய்யப்பட்டுள்ளது.  இதை தொகுப்பறிக்கையாக உருவாக்கி இயக்குனரகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.  மேலும், இந்த ஆய்வு தொடர்ச்சியாக, இனிவரும் காலங்களில் நடத்தப்படும்’ என தெரிவிக்கப்பட்டு உள்ளது.