Karunanidhi_wheelchair650

 

சென்னை:  மழை வெள்ள  சேதத்தை நேரடியாக  நாளை பார்வையிடப்போவதாக தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தி.மு.க.தலைவர் கருணாநிதி. தனது பேஸ்புக் பக்கத்தில், “நாளை (9.12.2015) 11 மணியளவில் சென்னை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கின்றேன்” என்று பதிவிட்டுள்ளார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீது, “கடலூர் வெள்ள சேதத்தை பார்வையிடவில்லை, சென்னை வெள்ள சேதத்தையும் விமானத்தில் பார்வையிட்டார்.  சமீபத்தில் தனது தொகுதியான ஆர்.கே. நகர் உட்பட சில இடங்களை மின்னல் வேகத்தில் காரில் பார்வையிட்டுச் சென்றுவிட்டார்” என்று விமர்சனம் வைக்கப்படுகிறது.

இந்த நிலையில் அவரைவிட முதியவரான கருணாநிதி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக நாளை சந்திக்கவிருப்பதாக அறிவித்திருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மேலும், தமிழக முதல்வர் ஜெயலலிதா மீது, “வெள்ளம் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை சரியாக எடுக்கவில்லை, வெள்ள நிவாரணம் முறையாக செய்யப்படவில்லை, நிவார பொருட்கள் மீது ஜெயலலிதா படத்தை ஒட்டுவதில்தான் ஆளும் தரப்பு கவனமாக இருக்கிறது,  தற்போது அரசு அறிவித்துள்ள நிவாரண தொகை போதுமானதாக இல்லை” என்றெல்லாம் பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.

இந்த நிலையில் மக்களை நேரடியாக சந்திப்பது என்கிற அஸ்திரத்தை  கருணாநிதி எடுத்திருப்பது முக்கியத்துவம் பெருகிறது.