a

ஜமுகாசுரன் என்ற அசுரன், பிரம்ம தேவனிடம் , “ஆண், பெண் தொடர்பின்றி பிறந்த ஒருவனாலேயே எனக்கு அழிவு வரவேண்டும்” என்று ஒரு வரம் பெற்றான்.

“ஆண், பெண் தொடர்பின்றி குழந்தை பிறப்பு சாத்தியம் இல்லை. ஆகவே என்னை அழிக்க யாராலும் முடியாது” என்ற கர்வத்துடன் சர்வலோகங்களையும் தன் ஆளுகையின் கீழ் கொண்டு வந்தான். தேவர்களை துன்புறுத்தினான். துன்பம் தாளாத அவர்கள், லோகமாதாவான பார்வதிதேவியிடம் முறையிட்டனர்.

தேவர்களின் துயரத்தைத் தீர்க்க பார்வதி தேவி முடிவு செய்தாள். ஆனால், ஆண் – பெண் தொடர்பின்றி பிறக்கும் குழந்தையால்தானே அன்த கஜமுகாசுரனை வதம் செய்ய முடியும்?

பார்வதி தேவி, தன் மேனியில் பூசியிருந்த மஞ்சளை வழித்தெடுத்து உருண்டையாக்கினாள். அந்த உருண்டைக்கு உறுப்புகளையும், உயிரையும் கொடுத்தாள். அந்தக் குழந்தைக்கு, பிள்ளையார் என பெயர் சூட்டினாள்.    அந்தப்பிள்ளை தன் அன்னையின் அந்தப்புர காவலனாக இருந்தான்.

இதற்கிடையே கஜமுகாசுரனால் தேவர்கள் படும் இன்னல்களை போக்க சிவபெருமான் தீர்மானித்தார். அதற்காக ஒரு திருவிளையாடலை அரங்கேற்றினார்.

பார்வதி தேவியின் அந்தப்புரத்துக்கு வந்தார் சிவபெருமான். அங்கே பிள்ளையார் காவல் புரிந்துகொண்டிருந்தார். “என் தேவியின் அந்தப்புரத்தில் இரு்ககும் நீ யாரடா” என்று கேட்டு பிள்ளையாரின் கழுத்தை வெட்டிவிட்டார்.

அதே நேரத்தில், வடக்கு நோக்கி ஒரு யானை படுத்திருந்தது. வடக்கு நோக்கி யார் படுத்தாலும், உலக நலனுக்கு ஆகாது என்பது சாஸ்திரம்.

அந்த நேரத்தில் அங்கு வந்த பார்வதி, தான் உருவாக்கிய பிள்ளைக்கு மீண்டும் உயிர் வேண்டும் என்று சிவபெருமானை வற்புறுத்தினார்.

சிவபெருமானும், வடக்கு நோக்கி படுத்து, உலக நலனுக்கு எதிர்விளைவைத் தந்து கொண்டிருந்த யானையின் தலையை வெட்டி, பிள்ளையாருக்கு பொருத்தி, மீண்டும் உயிர் கொடுத்தார்.

தாய், தந்தை கலப்பின்றி பிறந்த அந்தக் குழந்தை, கஜமுகாசுரனை வென்று தேவர்களைப் பாதுகாத்தான்.

இதுதான் பிள்ளையாருக்கு யானை தலை வந்த விதம்