astrology_symbol-satyam1
(24.02.16 முதல் 01.03.2016 வரை… மாசிமாதம் 12ம்தேதி புதன்கிழமை முதல் மாசிமாதம் 18ம்தேதி வரை])

தங்கள் பலன் அறிய உங்கள் ராசியின் பெயர் மீது கிளிக் செய்க !

மேசம் ராசி நேயர்களே
கோச்சாரத்தில் சந்திரன் ஐந்தாம் இடமான சிம்மத்தில் இருந்து தொடங்குகிறது  குருவும்,ராகுவும் இனைந்தும் ஐந்தாம் இடத்தில் இருக்கிறார்கள்.  ராசியாதிபதி செவ்வாய் ஏழில்வீற்றிருக்கிறார். ஆகவே,  இந்த வாரம் தொழில் மற்றும்  பொருளாதார ரீதியாக உயர்வுகள் கிடைக்கும்.
ஆனால், அஷ்டமச்சனியும் , செவ்வாய் ஏழில் இருப்பது  ஏதாவது ஒரு விசயத்தில் மனசஞ்சலத்தை ஏற்படுத்தும். குடும்பத்தில் சிலருக்கு மருத்துவ செலவுகள் கொடுக்கும் முறையாகசனிப்பரிகாரம் செய்து பாதுகாத்து கொள்ளுங்கள்.
கூட்டு தொழில் வேண்டம்.   வாகனம் சம்பந்தப்பட்ட தொழில் செயவோர் மிக கவனமாக இருக்கவேண்டிய காலகட்டம் இது.
சிலருக்குஉதவப்போய் நீங்கள் பிரச்சனைகளுக்கு ஆளாகலாம் எனவே உதவிகள் கூட யோசித்து செய்யுங்கள்.
உங்கள் ராசிக்கு பத்தாம் இடத்தில் புதன்,சுக்கிரன் இணைந்து இருக்கிறார்.  இது எதிர்பாராத அயல்நாட்டு பிரயானங்களை கொடுக்கும்  ஜாதகத்தில் ராகுதிசை,கேதுதிசைஇல்லையென்றால் அந்த பிரயாணங்கள் நன்றாக இருக்கும் .   பதினோன்றாம் இட்தில் ஐந்துக்குடையவரோடு கேது சேர்க்கை  இவ்வேளையில் குலதெய்வ வழிபாடு சிறப்பை தரும்.!
இந்த வாரம் ராசியான நிறம் மஞ்சள்.  ராசியான கிழமை வியாழன்.  வழிபட வேண்டிய கடவுள் தட்சிணாமூர்த்தி.!
ரிஷப ராசி நேயர்களே…!
இந்த வாரம் சந்திரன் நான்கில் கேந்திரம் பெற்று அதனுடன் குருவும் ,ராகுவும் இணைந்து காணப்படுகிறது.   ஒன்பதில் புதன்,சுக்கிரன் இனைவும், பத்தில் சூரியன் கேது இனைவும் உங்கள்ராசிக்கி ஒரு திக்பலத்தை உண்டுபன்னும்
தொழிலில் வரவுகள் அதிகரிக்கும் புதிய பொருள்வாங்குவீர்கள். பொருளாதார விசயத்தில் இந்தவாரம் நன்றாகத்தான் இருக்கும்.
தொழில் ரீதியாக எடுத்து கொண்டால்  உங்கள் நம்பிக்கைகுரியவர் ஒருவர் உங்களை விட்டுசெல்லும் வாய்ப்பு ஏற்படலாம். பின் அவரே உங்களுக்கு தொழில் போட்டயாளராக உருவாககூடும் எனவே கவனமாக இருந்தால் இதை தவிர்க்கமுடியும்.!
உங்கள் ராசிக்க்கு ஆறாம் இடத்தில் செவ்வாய் பகவான் இருப்பதால்  கவனமுடன் இருந்தால் எதிலும்,யாரையும் எளிதில் வெற்றி கொள்ளலாம்
கண்டச்சணி நடக்கிறது சனிப்பீரித்தி  செய்யுங்கள். உறவுகளிடம் விட்டு கொடுத்து செல்வது நல்லது.
இந்த வாரம் உங்களுக்கு ராசியான நிறம் இளம் சிவப்பு. ராசியான கிழமை செவ்வாய். . வழிபட வேண்டிய கடவுள் முருகன்.
மிதுன ராசி நேயர்களே..!
சந்திரன் மூன்றாம் இடத்தில் இருந்து இந்த வாரம் தொடங்குகிறது  தனஸ்தானதிபதி மூன்றாம் இடத்தில் இருப்பதால்  வரவுகளை விட செலவுகளே மேலோங்கி நிற்கும் ஆனால் அது சுபசெலவாக இருக்கும்.
மூன்றில் இருக்கும் குரு,ராகு சேர்க்கை முரட்டு தைரியம் கொடுக்கும் எனவே அவசரப்பட்டு தொழில்,உறவுகள் போன்றவற்றில் முக்கிய முடிவுகள் எடுக்காதீர்கள். அது மோசமான பின்விளைவுகளை கொடுக்கும்  எனவே முடிவுகளை ஒத்திப் போடுவது நல்லது.
ஆறாம் இடத்து செவ்வாய் ஐந்தாம் இடத்தில் இருப்பது உகந்தது அல்ல குழந்தைகள் விசயத்தில் கவனம் தேவை.  ஆறில் சனி பகவான்இருப்பது எதையும் எதிர் கொள்ளும் ஆற்றலைகொடுக்கும்
எட்டாம் இடத்தில் புதன் , சுக்கிரன் சேர்க்கை ஆடம்பர பொருட்களில் வீண் செலவுகள் செய்வீர்கள் செய்துவிட்டு யோசிப்பீர்கள் குறைத்து கொள்வது நல்லது
ஒன்பதில் சூரியன் ,கேதுசேர்க்கை காலத்தில் பித்ரு தர்ப்பனம் செய்வதற்கு உகந்த காலம்.
இந்த வாரத்தில் ராசியான கிழமை ஞாயிறு.  ராசியான நிறம் வெள்ளை. வழிபட வேண்டிய கடவுள் சூர்யபகவான்.!
கடக ராசி நேயர்களே…!
உங்கள் ராசியதிபதியும்,சந்திரனும் இரண்டாம் ஸ்தானத்தில் உள்ளநிலையில் இந்த வாரம் தொடங்குகிறது.  இது அற்புதமான அமைப்பு.
இரண்டாம் இடத்தில் குரு,ராகு இனைந்து காணப்படுகிறார்கள்  எதிர்பாராத உதவிகள்,பணவரவுகளை இது  ஏற்படுத்தும்.
யோகாதிபதி செவ்வாய் நான்கில் கேந்திரம் பெற்று இருப்பதால் தாய்வழி மூலமாக தாராள பணஉதவியும், பூமி சம்பந்தப்பட்ட விசயத்தில் பணவரவும் அளிக்கும்.  அஷ்டமாதிபதிசெவ்வாய் ஐந்தில் கோணம் பெற்றிருக்கிறார் இது பூர்விக சொத்து ஒன்றை விற்கலாமா வேண்டாமா எனயோசிப்பீர்கள்  ஆனால் விற்பது நல்லது.
ஏழில் புதன்,சுக்கிரன் சேர்க்கை அமைப்பு நன்மை மாணவர்கள் உயர்கல்விகள் படிக்க தடங்கள்கல் விலகும்  இல்லத்துனையாளுக்கு இக்காலகட்டத்தில் வேலை கிடைக்கும்.
எட்டாம் இட சூரியன் கேது  தகப்பனாருக்கு சிறு சிறு மருத்துவ செலவுகள் கொடுக்கும் உங்களுக்கும் உஷ்ண சம்பந்தமாக தோல் வியாதிகள் வரலாம்  சூரியனுக்கு உரியதாணியமானகோதுமையை அண்ணதானம் செய்வது நல்லது.
இந்த வாரம் ராசியான கிழமை புதன்.  ராசியான நிறம் கருநீலம். வழிபட வேண்டிய கடவுள் சக்கரத்தாழ்வார்.!
சிம்ம ராசி நேயர்களே….!
சந்திரன் உங்கள் ராசியில் இருக்கின்ற சூழ்நிலையில் இந்தவாரம் தொடங்குகிறது ஜென்மத்தில் குருவும்,ராகுவும் இனைந்தேஇருக்கிறது.  இக்காலகட்டத்தில் மிக மிக கவனமாக இருக்கவேண்டிய காலகட்டம்
முக்கிய முடிவுகளை ஒத்தி போடுவது நல்லது யார் நமக்கான ஆள்,யார் எதிரி என கண்டுபிடிக்க முடியாது இக்காலகட்டங்களில் எனவே அனைவரிடமும் அனுசரித்து செல்வது நல்லது.
மூன்றில் இருக்கும் செவ்வாய் முன்கோபத்தை அதிகரிக்கும் பொறுமை நிதானமாக செல்வது நல்லது   நான்கில் இருக்கும் சனி  தாய்வழி உறவுகளுடன் பகையை ஏற்படுத்தும்  விட்டுக்கொடுத்து செல்வது நல்லது,
ஆறில்,புதன்சுக்கிரன்சேர்க்கை  தொழில்சார்ந்த அலைச்சலை அதிகரிக்கும்  அதையும் உற்சாகத்துடன் செய்தீர்களானால் தொழில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும்
ஏழில் சூரியன் கேது சேர்க்கை இதுவும் உகந்தது அல்ல குடும்ப உறவுகளில் யாருக்கேனும் மருத்துவ செலவுகள் கொடுக்கும் குடும்பத்துடன் ராமேஷ்வரம் சென்று வருவது நல்லது….
இந்த வாரம் ராசியான கிழமை திங்கள்.  ராசியானநிறம் மஞ்சள்.  வழிபட வேண்டிய கடவுள் சிவன்.!
கன்னிராசி நேயர்களே…!
சந்திரன் விரயஸ்தானத்தில் இருக்கிற நிலையில் இந்த வாரம் தொடங்குகிறது  விரயஸ்தானத்தில் மூன்று கிரகங்கள் உள்ளன  வருமானங்கள் வரும். அதைத் தொடர்ந்து செலவுகளும்வரும் காலகட்டம் இது.
அஷ்மாதிபதி செவ்வாய் இரண்டில் இருக்கிறது பேச்சில் கவனம் நிதானம் தேவை நீங்கள் நன்மைக்காக அடுத்தவர்களுக்கு சொல்கின்ற வார்த்தை கூட தவறாக போகும் எனவே மிகயோசித்து பேசுவது நல்லது.
மூன்றில் சனிபகவான் இருப்பது நன்மையே தைரியமும், தொழில் வளர்ச்சியும் கொடுக்கும் ஐந்தில் புதன் சுக்கிரன் சேர்க்கை
புதிதாக தொழில் தொடங்க எடுத்தமுயற்சிகளில் வெற்றிகிட்டும்.ஆறில் சூரியன் கேது விரயாதிபதி ஆறில் இருப்பது நன்மையே  விரயங்கள் மூலமாக லாபங்களைபெற்றுதரும் அமைப்புஇது
இந்த வாரம் ராசியான கிழமை. சனி.  ராசியான நிறம் கரு நீலம்  வழிபட வேண்டிய கடவுள் சனபகவான்.!
துலாம் ராசி நேயர்களே..!
சந்திரன் உங்கள்ராசிக்கி லாபஸ்தானத்தில் இருக்கின்ற நிலையில் இந்த வாரம் தொடங்குகிறது  சந்திரனுடன் ,குரு,ராகு சேர்க்கையும் இனைந்து இருப்பதால்
தொழில் ரீதியாக லாபங்களைகொடுக்கும்.  அந்த லாபங்களை அடைய கடுமையாகபோராட வேண்டியது இருக்கும்..  ராசியலயே செவ்வாய் இருக்கிறது எல்லோரும் எதிரிகளாகதெரிவார்கள்  அது உண்மயும் கூட எல்லோரிடத்திலும் மிககவனமாக இருக்க வேண்டிய காலகட்டம். பொறுமையாக நிதானமாக இருப்பது நல்லது.
ராசியின் இரண்டில் சனிபகவான் ராசிக்கி யோகாதிபதியால் நன்மைகளே செய்வார். நான்கில் புதன் சுக்கிரன் சேர்க்கை  காலி மனை,புதிய வீடு வாங்ககூடிய காரியத்தில் இறங்குவீர்கள்முடிந்துவிடும்.
ஐந்தில் சூரியன் கேதுசேர்க்கை  இது உடல் ரீதியில் சில பிரச்சனைகளை கொடுக்கும் முக்கியமாக உணவு விசயத்தில் கவனம் தேவை
ராகு,கேது திசைகள்மட்டும் ஜாதகத்தில் நடக்காமல் இருந்தால் கோச்சார பலன்கள் பெரிதாக பாதிக்காது  அப்படி நடந்தால் ராகு,கேது பீரித்தி செய்துவிடவும்…
இந்த வாரம் ராசியான நிறம் பச்சை. ராசியான கிழமை புதன். வழிபட வேண்டிய கடவுள் பைரவர்.
விருட்சக ராசி நேயர்களே..!
சந்திரன் பத்தாம் இடத்திலும் அதனுடன் குரு,ராகு இனைந்திருக்கும் நிலையில் இந்த வாரம் தொடங்குகிறது தொழில் நன்றாக இருக்கும், குழந்கைள்படிப்பில் சிறந்த விளங்குவார்கள்  ஏழரை நாட்டுசனி முதல் சுற்று நடப்பவர்கள் மட்டும்  கொஞ்சம் கவனமுடன் இருக்க வேண்டும்.
மாணவர்களை முடிந்தால் விடுதியில் படிக்க வைப்பதுதகப்பனாருக்கு நல்லது. செவ்வாய் பண்னிரன்டாம் இடத்தில் இருக்கிறார்  செவ்வாய் மறைவது பாதிப்பு இல்லை. ராசியலயே சனி நிற்கிறார் எதிலும் பொறுமையாக,நிதானமாக செயல்படுவது நல்லது
மூன்றில் புதன் சுக்கிரன் சேர்க்கை  மாணவர்கள் விளையாட்டுதுறையில் சிறந்து விளங்குவார்கள் ஏதேனும் புதிய சாதனை நிகழ்த்த கூடும் .. நான்கில் சூரியன் கேது
சேர்க்கை தாய்வழியில் உள்ளவர்கள் யாரேனுக்கும் சில இழப்புகளை கொடுக்கும்
இந்த வாரம் ராசியான கிழமை  திங்கள். . ராசியான நிறம் ஆரஞ்ச். வழிபடவேண்டிய கடவுள்  தட்சிணாமூர்த்தி.!
தனுசு ராசி நேயர்களே…!
சந்திரன் ஒன்பதில் கோணம்பெற்றும், குரு,ராகு இணைந்து இருப்பதால் நன்மையே. தொழில் சிறந்து விளங்கும்   ஒன்றுக் மேற்பட்ட தொழில் செய்து லாபங்களை ஈட்டுவீர்கள். அரசுசம்பந்தப்பட்ட உதவிகள் இந்த வாரம் வந்து சேரும் ..
இரண்டில் புதன்,சுக்கிரன் சேர்க்கை அற்புதஅமைப்பாகும் கலை சம்பந்தப்பட்ட  துறைகளில் உள்வர்களுக்கு பொன்னான வாரம்
மூன்றில் சூரியன் கேது அஷ்டலஷ்மியோகத்தை கொடுக்கும். எதை எடுத்தாலும் வெற்றி என்ற நிலையாகும்   லாபஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பது தீடிர் பணவரவுகளைகொடுக்கும்.  பூமி சம்பந்தப்பட்ட தொழில் செய்வோர் நல்ல லாபங்களை ஈட்டலாம்
இந்த வாரம் ராசியான நிறம் மஞ்சள். ராசியானநிறம் நீலம் வழிபட வேண்டிய கடவுள் மகாலஷ்மி.
மகர ராசி நேயர்களே…!
இந்த வாரம் சந்திரன் எட்டாம் இடத்தில் இருக்கிற நிலையில் தொடங்குகிறது   எட்டில் சந்திரன் சந்திராஷ்டமம் உடன் குரு,ராகுவும் இணைந் இருக்கிறது.  இந்த வாரம் எச்சரிக்கையாககடக்கவேண்டியகாலகட்டமாகும்.   புது முயற்சிகளை ஒத்தி போடுங்கள்  ராகு பீரித்தியும், ஜாதகத்தில் திசாபுத்திகளுக்கு ஏற்ப அர்ச்சனை செய்து கொள்ளுங்கள்
லக்கனத்தில் புதன்சுக்கிரன் சேர்க்கை பணம் வரவை தாராளமாக்கும்  அதை நாம் னுபவிக்கமுடியாது விரயங்கள் ஆகும்   அதை சுப விரயமாக மாற்ற முயற்ச்சி செய்து கொள்ளுங்கள்.
இரண்டில் சூரியன் கேது இணைவது நல்லது அல்ல. சூரியனின் தானியமான கோதுமையை தானம் செய்யவும். தந்தையுடனும்,தந்தைவழி உறவுகளுடனும் பொறுமையாக போவதுநல்லது.!
லாபஸ்தானத்தில்சனிபகவான் இருக்கிறார்.   ஜாதகத்தை தூக்கிநிறுத்துவதே இந்த சனிபகவான்தான்.. அதனால் எந்த வித சூழ்நிலையையும் சமாளிப்பிர்கள்
இந்த வாரம் ராசியானகிழமை புதன்.  ராசியான நிறம் பச்சை,கருநீலம் வழிபட வேண்டிய கடவுள்  துர்க்கை அம்மன். !
கும்ப ராசி நேயர்களே..!
சந்திரன் இந்தவாரம் ஏழாமிடத்திலும் குரு,ராகு உடன் இணைந்திருக்கின்ற வேளையில் இந்த வாரம் தொடங்குகிறது.   ஒன்பதில் செவ்வாய், பத்தில் சனி இருப்பது நன்மைதான்  தொழில் நன்றாகநடக்கும்
தொழிலை.விரிவுபடுத்த வேண்டி அலுவலகத்தையோ, தொழில் சார்ந்த நிறுவனத்தையோ இட மாற்றுவீர்கள்
புதன் ,சுக்கிரன் மறைவு மிக நன்மையே பயக்கும். குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.  அரசு தேர்வில் வெற்றி பெறுவார்கள்
ராசியில் சூரியன் ,கேது சேர்க்கை  எவ்விதத்திலும் பாதிப்பு இல்லை சூர்யபகவானுக்குமட்டும் அர்சனைகள்செய்யவும்.
வெள்ளி,சனி கிழமகளில் சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாக இருக்கவும்
இந்த வாரம் ராசியான கிழமை ஞாயிறு.  ராசியான நிறம் மஞ்சள்.
வழிபடவேண்டிய கடவுள் சூர்ய பகவான்.!
மீனராசி நேயர்களே..!
சந்திரன் ஆறாம் இடத்திலும் அதனுடன் குரு,ராகு இனைந்து இருக்கின்ற நிலையில் இந்த வாரம் தொடங்குகிறது  இது நல்ல அமைப்புதான்  பதினொன்றில் இருககும் புதன்,சுக்கிரன்சேர்க்கையால் தொழில் நன்றாக நடக்கும்
எட்டாம் இட செவ்வாய். சில வரவுகளை அலைச்சல் மேல் கொடுக்க செய்வார்.
ஒன்பதில் சனிபகவான் புதிய புதிய ஆட்களை வேலையில் அமர்த்துவீர்கள் நன்றியுள்ளவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்குவீர்கள்
ஆறாமிடத்து சூரியன் பண்ணிரன்டில் அமைவது  பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது. அரசாங்க ரீதியான சில பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.  ஞாயிறு ,திங்கள் கிழமைகளில்சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாக இருக்கவும்.!
இந்த வாரம் ராசியான கிழமை புதன்.  ராசியான நிறம் இளம் சிவப்பு. வழிபடவேண்டிய கடவுள் காளியம்மன்.!!

Goto Top