s-11-e1447225713525

ரியாத்:

லாத்காரப்படுத்தப்பட்ட இளம் பெண்ணுக்கு சிறைத் தண்டனையும், 200 சவுக்கடிகளையும் வழங்கி சவுதி அதிர்ச்சிகர தீர்ப்பை வழங்கி உள்ளது.

மனித உரிமை மீறல்களின் உச்சத்தில் இருப்பது சவுதி அரேபியா என்றால் அது மிகையாகாது. இதில் குறிப்பாக பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதியை இந்த உலகமே அறியும். தற்போது மீண்டும் ஒரு சம்பவம்.

சியா பிரிவை சேர்ந்த 19 வயது பெண் தனது மாணவ நண்பருடன் காரில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த காரில் ஏறிய இருவர், அவர்களை மிரட்டி ஒரு ஒதுக்குபுறமான பகுதிக்கு காரை ஓட்டச் செய்தனர். அங்கு சென்றவுடன் ஏழு பேர் சேர்ந்து அந்த பெண்ணை வன்புணர்வு செய்துள்ளனர்.

 

MIDEAST-GAZA-

பின்னர் இந்த விஷயம் வெளியில் தெரிந்து, 7 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை மட்டுமே விதி க்கப்பட்டது. கற்பழிப்புக்கு இவ்வளவு குறைவான தண்டனை வழங்கியிருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்ப டுத்தியது.

இந்த ஆச்சியம் அடங்குவதற்குள் இன்னொரு அதிசயத்தை சவுதி நீதிமன்றம அறிவித்தது. வன்புணர்வு செய்யப்பட்ட பெண்ணுக்கு 90 சவுக்கடி வழங்க உத்தரவிட்டது. “ஒரு குடும்ப பெண், குடும்பத்தில் உள்ள ஒரு பெண்ணின் துணையின்றி பொது இடங்களுக்கு வரக்கூடாது. அதை மீறியதோடு காரில் உறவினர் அல்லாத ஒரு நபருடன் இருந்ததற்காக இந்த தண்டனை அந்த பெண்ணுக்கு விதிக்கப்படுகிறது” என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதை எதிர்த்து அந்த பெண்ணின் வக்கீல் அப்துல் ரஹ்மான் அல் லஹீம், சவுதி பொது நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். தண்டனையை ஆய்வு செய்த நீதிமன்றம் தண்டனையை இன்னும் உயர்த்தியது. அதாவது, அந்த பெண்ணுக்கு 200 சவுக்கடியும், 6 மாத சிறைத் தண்டையும் விதித்தது.

தண்டனை விதிக்கப்பட்டதே தவறு என்கிறபோது, பிறகு தண்டனையை உயர்த்தியது உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் பொது (மேல்) நீதிமன்றம் இதற்கு ஒரு விளக்கத்தை அளித்துள்ளது. அதாவது, “விதிக்கப்பட்ட தண்டனை குறித்து ஆட்சேபம் இருந்தால் அதை மீடியாக்களிடம் பகிராமல் மேல் முறையீடு செய்ய வேண்டும். இதுதான் சவுதி நாட்டின் சட்ட விதி. இதை மீறி அந்த பெண் மீடியாவிடம் பேசியிருக்கிறார். அதனால்தான் கூடுதல் தண்டனை” என்று மேல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது

அதோடு அந்த பெண்ணுக்காக ஆஜரான, வக்கீலின் உரிமத்தை ரத்து செய்ததோடு, அவர் இந்த வழக்கில் ஆஜராக தடை விதித்தும், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தண்டனைக்கு உலகளவில் பல தன்னார்வலர்கள், மனித உரிமை அமைப்புகள், ஊடகங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.

கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பரில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை குழு புதிய தலைவராக சவுதி அரேபியா தூதர் ஃபைசல் ட்ரடாஸ் தேர்வு செய்யப்பட்டார். மனித உரிமை மீறல் அதிகம் நடக்கும் சவுதியை சேர்ந்தவரின் இந்த நியமனத்துக் அப்போதே அமெரிக்காவுக்கு எதிராகன எதிர்ப்பு இருந்தது குறிப்படத்தக்கது.