a

சிரியாவில் நடக்கும் உள்நாட்டு போர் காரணமாக அந்நாட்டு மக்கள் பலர் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம்புகுந்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த வாரம் அகதிகள் படகு ஒன்று கவிழ்ந்து துருக்கி கடற்கரையில் அயலான்  என்ற 3 வயது சிறுவனின்உடல் கரை ஒதுங்கியது. இந்த சம்பவம் உலகத்தையே உலுக்கி எடுத்து வருகிறது.

இந்நிலையில் உலக நாடுகள் பல எங்கள் நாடுகளில் சிரிய அதகதிகள் தாரளாமாக வரலாம். அவர்களுக்கு இங்குவாழ்வுரிமை அளிக்கப்படும் என்று சொல்லி வருகின்றனர்.

ஆனால் பொருளாதரத்தில் மேலோங்கிய கல்ப் வளைகுடா நாடுகள் சிரிய அகதிகளுக்கு வேண்டிய உதவிகளையோஅல்லது புகலிடமோ தருவதற்கு தயாராக இல்லை என்பது உலக அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இத்தனைக்கும் சிரியா,  வளைகுடா நாடுகளின் எல்லையை  ஒட்டியிருக்கிறது.  மேலும் இந்த இரு நாடுகளிலும்முஸ்லிம் இன மக்கள் தான் வாழ்கின்றனர். அப்படி  இருந்தும்  வளைகுடா நாடுகள் சிரிய மக்களை  ஏற்க மறுக்கின்றன.  அதே நேரம், ஐரோப்பிய நாடுகள் சிரிய மக்களுக்கு தஞ்சம்  கொடுக்க வேண்டும் என பலமாக குரல் எழுப்புகிறார்கள்.

இந்த நிலையில் சிரிய அகதிகள் எல்லாரையும் தங்களால் ஏற்க்க முடியாது குறைவான எண்ணிக்கை அகதிகளைமட்டுமே தங்களால் ஏற்க இயலும் என்று பிரித்தானிய பிரதமர் டேவிட் கேமரூன் தெரிவித்து இருந்தார்.

இதனை  தொடர்ந்து பல நாடுகள் பிரித்தானியாவிற்கு கண்டனம் தெரிவித்திருந்தது.

இது தொடர்பாக ஜேர்மனி ஜனாதிபதி ஏஞ்சலா மெர்கலின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் மாயர் கூறியதாவது, அகதிகள்விஷயத்தில்  தனக்கு சம்பந்தம் இல்லாதது போல் பிரித்தானியா செயல்படுவது சரியல்ல.

இவ்வாறு அவர்கள் செயல்பட்டால் ஐரோப்பிய ஒன்றியத்தில் சீர்திருத்தம் மேற்கொள்ளவேண்டும் என்றபிரித்தானியாவின் எண்ணத்தில் பின்னடைவு ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல் ஆஸ்திரியாவின் ஜனாதிபதி வெர்னர் ஃபெமெனன் கூறுகையில், பிரித்தானியாவுக்கு என்று தனிப்பட்டஅட்டவணை இருந்தால் நாங்கள் ஏன் அவர்களுக்காக கஷ்டப்பட வேண்டும். பொறுப்பு என்பது ஒருவருக்கு மட்டும்சொந்தமானதல்ல என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் எகிப்து நாட்டை சேர்ந்த நாகுப் சவிரிஸ்  என்ற பெரும் அரேபிய பணக்காரர், ஆசிய மற்றும் மத்திய கிழக்குஆசிய நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்து வரும் மக்களுக்காக ஒரு தீவையே விலைக்கு வாங்கும் முயற்சியில் இருக்கிறார்.

அந்தத் தீவில் மக்களுக்கு தேவையான எல்லா வசதிகளும் செய்து தருவதாகவும் இது தொடர்பாக கிரீஸ் மற்றும்இத்தாலி அரசாங்கத்திடம் கேட்டுள்ளதாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வாடிகனின் செயிண்ட் பீட்டர் சதுக்கத்தில் உரையாற்றிய போப் பிரான்சிஸ், “ஐரோப்பியாவில் உள்ளஒவ்வொரு திருச்சபை, மத சமூகம் ஆகியவை  அகதிகளாக வரும் குடும்பங்களில் ஒன்றை ஏற்றுக்கொள்ளவேண்டும்”என்று வேண்டுகொள் வைத்துள்ளார்.    இதற்கு முன்னுதாரணமாக வாடிகனில் உள்ள இரண்டு திருச்சபைகள் இரண்டுகுடும்பங்களை ஏற்றுகொள்ளும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து ஐரோப்பிய நாடுகள் மட்டுமின்று ஆஸ்திரேலியா, அர்ஜெண்டினா போன்று நாடுகளும் அவர்களுக்குஅடைக்கலம் தர முடிவு செய்துள்ளன.

b

இந்நிலையில் பிரித்தானிய பிரதமர் கேமரூன் இரு தினங்களுக்கு முன் வெளிட்ட அறிக்கையில் புலம்பெயர்ந்து வரும்அகதிகளை அதிக அளவில் பிரித்தானியா ஏற்று கொள்ளும் என்றும் இந்தாண்டு ஜூன்  மாத இறுதி வரை 25,771 பேர்குடியமர்வு கோரி விண்ணப்பம் செய்துள்ளதாகவும், இவர்களில் 11,600 நபர்களுக்கு குடியேற்ற அனுமதி அரசுவழங்கியுள்ளதாகவும் கேமரூன் தெரிவித்தார்.

மேலும் பல நாடுகளிருந்தும் அகதிகளுக்கு உதவிகள் குவிந்து  வரும் நிலையில். முஸ்லிம் நாடு மற்றும் அண்டைநாடுகளான கல்ப் வளைகுடா நாடுகளிடமிருந்து எவ்வித உதவியும் வராமல் இருப்பது உலக நாடுகளுக்கிடையேஅதிருப்த்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனாலும், “முஸ்லிம் நாடுகள் முஸ்லிம் அகதிகளை புறக்கணிப்பது ஏன்?” என்ற கேள்வி அப்படியேதான் இருக்கின்றது.