12003384_763302673813945_8353150264179076657_n

 

சென்னை:

மின்சார தட்டுப்பாடு ஒருபுறம், மின் கட்டண ஏற்றம் மறுபுறம் என்று பொதுமக்கள் அல்லல் படுகிறார்கள் என்று குற்றம் சாட்டும் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சார்பிலான கூட்டத்துக்காக அவரது மின் உருவம் பெரும் மின் திருட்டில் மின்னிக்கொண்டிருக்கிறது.

 

12009755_763302287147317_1563327148997446470_n

சென்னை மடிப்பாக்கம் பேருந்து நிலையம் அருகே திமுக சார்பாக, “முடியட்டும்.. விடியட்டும்” பேரணி விளக்க பொதுக்கூட்டம் நடக்கிறது. இதற்காக கைவேலி பகுதியில் இருந்து மடிப்பாக்கம் வரை, மின் கம்பங்களில் இருந்து மின்சாரம் திருடப்பட்டு கருணாநிதியின் மின் பொம்மை ஒளிர்கிறது. இது அப்பகுதி மக்களிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

புள்ளி விபரங்களோடு அறிக்கை விடுக்கும் கருணாநிதி, கடந்த ஜூலை மாதம், மத்திய அரசின் புதிய மின்சார திட்டம் பற்றி வெளியிட்ட அறிக்கை குறிப்பிடத்தக்கது.

அந்த அறிக்கையில் கருணாநிதி, “|135 கோடி மக்கள் தொகை கொண்ட சீன நாடு, ஆண்டுக்கு 12 லட்சம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்து, உலக அளவில் முதல் இடத்தில் உள்ளது. 31 கோடி மக்கள் தொகை கொண்ட அமெரிக்கா ஆண்டுக்கு 11 லட்சம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்து, இரண்டாவது இடத்தில் உள்ளது. 13 கோடி மக்கள் தொகை கொண்ட ஜப்பான் நாடு, 3 லட்சம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்து மூன்றாவது இடத்தில் உள்ளது. ஆனால் இந்தியாவிலோ மக்கள் தொகை 123 கோடி; மின் உற்பத்தியோ 2.6 லட்சம் மெகாவாட் தான்.

சீனா போன்ற நாடுகளில் அனைத்து மக்களும் மின்சாரத்தின் பலன்களை முழுமையாக அனுபவித்து வரும் நிலையில், நமது இந்திய நாட்டில் விடுதலை பெற்ற 68 ஆண்டுகளுக்கு பின்னரும், மொத்த மக்கள் தொகையில் சுமார் 30 கோடி மக்கள் மின்சாரம் என்றால் என்ன என்றே தெரியாத நிலை இருப்பது பெரிதும் வருந்தத்தக்கதாகும்” என்று  வருத்தத்துடன் கூறியிருக்கிறார்.

ஆனால் அவரது மிகப்பெரிய மின் உருவ பொம்மைகள் மற்றும்  சீரியல் விளக்குள்,  குழல் விளக்குள் பொது மின்கம்பத்தில் இருந்து மின்சாரம் திருடப்பட்டு ஒளிர்கிறது.

12004017_763302340480645_3932210764037322334_n

இது குறித்து  மடிப்பாக்கம் பகுதி மின் துறை அலுவலகத்துக்கு தொடர்ந்து போன் செய்தும் எடுக்கப்படவில்லை.

இந்த பகுதி சென்னை மாநகராட்சி 188வது வார்டில் வருகிறது. இந்த வார்டில் அதிமுக சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள  கவுன்சிலர் பொன்னுசாமியை தொடர்புகொள்ளவும் தொடர்ந்து முயற்சித்தோம். அவர் அழைப்பை ஏற்கவில்லை.

இது பற்றி கருத்து கூறிய சமூக ஆர்வலர்கள், “ தமிழகத்தின் ஏதோ ஒரு பகுதியில் ஏதோ ஒரு நாள்  சில கிலோவாட்  மின்சாரம் இப்படி திருடப்படுகிறது என்று இருக்கக்கூடாது. தமிழகத்தின் அனைத்து பகுதியிலும் பல்வேறு கட்சிகள் தினமும் கூட்டங்கள் நடத்துகின்றன. அவர்றில் பெரும்பாலானவை இப்படி மக்களின் மின்சாரத்தைத் திருடித்தான் நடத்தப்படுகின்றன. அவை தடுக்கப்பட வேண்டும்.

ஆளும் அதிமுகவினர் இதை கண்டுகொள்ளாததும் ஒரு முக்கிய விசயத்தை உணர்த்துகிறது. எதிர்க்கட்சி சாராய ஆலைக்கும் ஆர்டர் கொடுப்பது ஆளும் கட்சியினரின் வழக்கம். அப்போதுதான் இவர்கள் எதிர்க்கட்சியாக இருக்கும் போதும், இவர்களது சராய ஆலையில் ஆளும் அரசு கொள்முதல் செய்யும்.   அது போலவே இந்த மின்திருட்டிலும் ஆளும் எதிர்க்கட்சிகள் பங்குதாரர்களாக இருக்கிறார்கள்” என்கிறார்கள்.