a
நாம்தமிழர் கட்சி, வெளிநாட்டு தமிழர்களிடம் தேர்தல் நிதி வசூலிப்பதாக  “மலையக குருவி” என்ற இணையதள இதழ்  தெரிவித்துள்ளது.
அந்த இதழ் வெளியிட்டுள்ள செய்தியாவது:
“தமிழக தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி புலம்பெயர் தமிழர்களிடம் பணம் வசூலிக்கும் வேலைத் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பிரத்தியேகமாக கையடக்கத் தொலைபேசிகளுக்கு இந்தத் தகவல் நண்பர்கள் மூலம் பகிரப்படுவதாக புலம்பெயர் தமிழர் ஒருவர் எமது இணையத்திற்குத் தெரிவித்தார்.
தமிழக அரசியலில் தமிழர், தமிழீழ விடுதலைப் புலிகள் போன்ற பதங்களை பெருவாரியாக பயன்படுத்தும் நாம் தமிழர் கட்சி, தமிழர்களே தமிழகத்தை ஆழவேண்டும் என்ற கோசத்தை முன்வைத்து தமது பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறது.
இதனை மையப்படுத்தியே, தமிழகத்தில் தமது தேர்தல் பணிகளுக்காக புலம்பெயர் தமிழரிடம் இவ்வாறு நிதி சேகரிக்க ஆரம்பித்துள்ளதாக எமக்குத் தகவலளித்த புலம்பெயர் இலங்கைத் தமிழர் தெரிவித்தார்.
தனது கையடக்கத் தொலைபேசிக்கு இந்த தகவல் பிரத்தியேகமாக அனுப்பப்ட்டுள்ளதாகவும், இதனையடுத்து தான் பல நண்பர்களிடம் விசாரித்தபோது, பல நண்பர்களுக்கும் இந்த தகவல் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தகவலளித்தார்.
இந்த நிதி சேகரிக்கும் திட்டத்திற்கமைய நாம் தமிழர் கட்சிக்கு புலம்பெயர் தமிழர்கள் ஏற்கனவே பெருமளவிலான நிதியை அனுப்ப ஆரம்பித்துள்ளதாகவும் எமக்குத் தந்தவர் குறிப்பிட்டார்.
அத்துடன், தனது கையடக்கத் தொலைபேசிக்கு வந்த தகவலையும் எமது இணையத்தளத்திற்கு அவர் அனுப்பிவைத்தார்.
நன்கொடை வழங்க – நாம் தமிழர் கட்சி
Account Name: Naam Thamizhar Katche Bank Name: Indian Overseas Bank
Account Number: 168702000000150 ISFC code – IOBA0001687
Branch – Rajaji
Bhavan, Besant Nagar, Chennai
www.naamtamilar.org
எவ்வாறாயினும், இதுகுறித்து புலம்பெயர் தமிழர்களிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, நாம் தமிழர் கட்சி விடுதலைப் புலிகளையும், புலிகளின் தலைவரையும் விற்பனைப் பொருளாக பயன்படுத்த ஆரம்பித்துள்ளதாக சிலர் விமர்சனங்களையும் முன்வைக்க ஆரம்பித்துள்ளனர்.” –  இவ்வாறு மலையக குருவி என்ற இணைய இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
மேற்கண்ட செய்தியின் தொடுப்பு: http://www.malayagakuruvi.com/2016/03/blog-post_501.html?m=1