111

மும்பை:

பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் ஆதேஷ் ஸ்ரீவத்சவா, புற்று நோய் காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 49.

பாலிவுட் திரையுலகில் 90களில் பாடகராக அறிமுகமான ஆதேஷ் ஸ்ரீவத்சவா, தன்னுடைய இசை திறமையால்,  படிப்படியாக முன்னேறி நூற்றுக்கும் மேற்பட்ட இந்தித் திரைப்படங்களுக்கு இசையமைத்தார்.

ஷகிரா, ஏகான் உட்பட பல்வேறு உலக அளவில் புகழ்பெற்ற  நட்சத்திரங்களுடனும் பணிபுரிந்தவர்   இவரது இசையமைப்பில் சல்தே சல்தே, பாக்பன் மற்றும் கபி குஷி கபி கம் போன்ற படங்கள்  பெரும் வெற்றி அடைந்தன.  இவரது இசையமைப்பான ‘வெல்கம் பேக்’ படம் ஆதேஷின் பிறந்தநாளான நேற்று வெளிவந்து ரசிகர்களால் மிகவும் பாராட்டப்பட்டு வருகிறது.

இவர், குழந்தைகள் பற்றிய குறும்படத்தையும் இயக்கியுள்ளார்.

இவருக்கு புற்று நோய் இருப்பது கடந்த 2010 ஆம் தெரியவந்தது. . இதைத் தொடர்ந்து‘கீமோ தெரபி’ சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து குணமடைந்தார்.

இந்த நிலையில், கடந்த ஒன்றரை மாதத்துக்கு முன்பு ண்டும் அவர் புற்றுநோயின் பாதிப்பு  அதிகமானது.  இதையடுத்து மும்பையின் அந்தேரி பகுதியில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

ஆனாலும், சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று நள்ளிரவு சுமார் 12.30 மணியளவில் ஆதேஷ் ஸ்ரீவத்சவா உயிர் பிரிந்தது. ஆதேஷ் ஸ்ரீவத்சவா மரணம், அவரது குடும்பத்தினரை மட்டுமின்றி, திரையுலகினர் மற்றும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தி விட்டது.