index

“படம் பார்த்து கெட்டுப்போயிட்டாங்க” என்ற குரல் இங்கு மட்டுமல்ல.. உலகம் முழுதும் ஒலிக்கத்தான் செய்கிறது.

படங்களை பார்த்து திருட கத்துக்கிட்டான், பொண்ணுங்களை டீஸ் பண்ணான் என்று குற்றச்சாட்டுக்கள் நம்ம ஊர் படங்கள் மீது சுமத்துவது வழக்கம். . ஆனால் ஆங்கில படங்களைப் பார்த்துத்தான் பயங்கரவாதிகளே கொடூர தாக்குதல்களை நடத்துகிறார்கள் என்று பகீர் குற்றச்சாட்டு ஹாலிவுட் படங்கள் மீது வைக்கப்படுகின்றது.

இப்போது அதே போல, பயங்கரவாதிகளுக்கு ஸ்கெட்ச் போட்டுக்கொடுக்கும் ஒரு ஆங்கி திரைப்படம் அடுத்த வருடம் மார்ச் 16ம் தேதி வரப்போகிறது. அதற்கு இப்போதே எதிர்ப்பும் எதிர்பார்ப்பும் கிளம்பிவிட்டது.

பாபக் நஜாப்
பாபக் நஜாப்

அந்தத் திரைப்படத்தின் பெயர் “லண்டன் ஹாஸ் ஃபாலன்” (London Has Fallen). அதன் கதை என்ன தெரியுமா?

பிரிட்டிஷ் பிரதமர் மர்மான முறையில் இறந்து விடுகிறார். அவரது இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள உலக நாடுகளின் தலைவர்கள் அனைவரும் வருகிறார்கள். அவர்கள் அனைவரையும் கொல்வதற்கு தயாராகிறது ஒரு பயங்கரவாதக்குழு. அவர்களது நோக்கம், தற்போதைய தலைவர்கள் அனைவரையும் கொன்றுவிட்டு புதிய அதிகார மையத்தை உருவாக்குவதுதான்.

அந்த பயங்கரவாத குழுவிடமிருந்து தலைவர்களைக் காக்க போராடுகிறார் சி.ஐ.ஏ. உளவாளியான மைக் பானிங்.

சரி… இது வழக்கமான ஆக்ஷன் படம்தானே..இதற்கு ஏன் பதறவேண்டும் என்கறீர்களா?

இந்த படத்தில் இங்கிலந்து பிரதமரின் மாளிகை, அதற்கு செல்லும் வழி, வெளிநாட்டு தலைவர்கள் தங்கும் இடங்கள், அவர்களது பாதுகாப்பு ஏற்பாடுகள் எல்லாவற்றையும் தத்ரூபமாக எடுத்திருக்கிறார்கள்.

தலைவர்களைப் போட்டுத்தள்ள நினைக்கும் பயங்கரவாத குழு, இந்தப் படத்தைப் பார்த்தாலே போதும். திட்டம் ரெடி!

அட.. அதெப்படி சாத்தியம் என்கிறீர்களா?

ஏற்கெனவே இப்படி நடந்திருக்கிறது.

உலகையே உலுக்கிய அமெரிக்க இரட்டை கோபுரத் தாக்குதலை, “ட்ரு லைஸ்” என்கிற ஆங்கிலத் திரைபடத்தைப் பார்த்துத்தான் பயங்கரவாதிகள் திட்டமிட்டார்கள் என்ற தகவல் விசாரணையில் தெரியவந்தது நினைவிருக்கிறது அல்லவா?

வரவிருக்கும் “லண்டன் ஹாஸ் ஃபாலன்” படத்தின் இயக்குநர் பாபக் நஜாப் அதே டீம், கடந்த 2013இல் “ஒலிம்பஸ் ஹாஸ் ஃபாலென் (Olimpus Has Fallen) என்கிற படத்தை இயக்கினார்.

அதைப் பார்த்த அமெரிக்க உயரதிகாரிகள் ஆடிப்போய்விட்டார்கள். “அய்யோ… வெள்ளை மாளிகையை தாக்க நினைக்கும் பயங்கரவாதிகள் இந்தப்படத்தைப் பார்த்தாலே போதுமே! அத்தனை துல்லியமாக எடுத்திருக்கிறார்கள்” என்று பதறினார்கள்.

ஆனால் மேற்கத்திய நாடுகளில் படைப்பாளிகளுக்கு கிடைக்கும் சுதந்திரம் அந்த படத்தைதடை செய்யவிடாமல் தடுத்துவிட்டது.

இப்போது அதே இயக்குநர் அதே படக்குழு, லண்டர் பிரதமரையும், உலகத்தலைவர்களையும் குறிவைத்திருக்கிறது.. படத்தில்தான் என்றாலும் பயங்கரவாதிகளுக்கு இது பாடமாகவே இருக்கும் என்ற கவலை பலருக்கும் வந்துவிட்டது!

என்னமோ போங்க..ஹாலிவுட்காரங்க ஸ்கெட்ச் போட்டுக்கொடுக்க.. பயங்கரவாதிகள் அதைப் பார்த்துட்டு குண்டு வைக்க.. சம்பந்தமே இல்லாம நாங்கதான் பெட்ரோலுக்கு காசு கூடக் கொடுக்கணும்.

 

  • மூவி பாண்டா