1
 
அமெரிக்காவல் கிளம்பிய சர்ச்சை தங்கள் மத வழக்கப்படி தலைப்பாகை அணிந்திருந்த சீக்கியரை, மெக்ஸிகோ நாட்டு விமானத்தில் ஏற அனுமதி மறுக்கப்பட்டுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பொதுமக்கள் முன்னிலையில் தனது தலைப்பாகையை கழற்றும்படி கூறப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், ஏரோமெக்ஸிகோவின் விமானத்தில் பயணிக்க முடியாமல் தடுக்கப்பட்டதாகவும் கூறுகிறார்.
சீக்கிய வம்சாவளியை சேர்ந்த வாரிஸ் அலுவாலியா அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவர். கிராண்ட் புடாபெஸ்ட் ஹோட்டல் எனும் படத்தில் நடித்துள்ள வாரீஸ், அமெரிக்க ஆடை நிறுவனமாக GAPன் விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.
அவர், மெக்ஸிகோ சிட்டியிலிருந்து நியூ யார்க் செல்ல விமான நிலையம் வந்தார்.
விமான நிலையத்தில், வழக்கமான பாதுகாப்பு சோதனைகள் நடந்தன. பிறகு, அவரது தலைப்பாகையை கழற்றும்படி அதிகாரிகள் கூறினார்கள்.
இதற்கு வாரிஸ் எதிர்ப்பு தெரிவித்தார். வழக்கமான அனைத்து பாதுகாப்புச் சோதனைகளையும் தான் ஏற்றுக் கொள்வதாகவும், அதே நேரம் பொதுமக்கள் முன்னிலையை தலைப்பாகையை கழற்றச் சொல்லுவது, அனைவர் முன்னிலையில் ஆடைகளை அவிழ்ப்பதற்கு சமமான ஒன்று என்றும் கூறி எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அவர விமானத்தில் பயணிக்க அனுமதி மறுக்கப்பட்டது.
வாரிஸ் அலுவாலியா தனது பயணச்சீட்டை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில் இரண்டாவது பாதுகாப்பு பரிசோதனைக்குச் செல்லவேண்டும் என்பதை அடையாளப்படுத்தும் வகையில் ஆங்கிலத்தில் “SSSS” என முத்திரைக் குத்தப்பட்டுள்ளது தெரிகிறது.
அப்படியான முத்திரை குத்தப்பட்டிருந்தால், அதற்குரிய பயணி கூடுதலான பாதுகாப்பு பரிசோதனைகளுக்கு உட்படுத்துவார்கள்.
இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. “தலைப்பாகையும், தாடியும் வைத்திருந்தால், கூடுதலான பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்துவார்களா” என்று பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
“யாரை கூடுதலான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனபது தங்களது உரிமை” என்று விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.