malai

 

யற்கை மழை ஆய்வாளரான “மழை” ராஜூ, தொடர்ந்து வானிலை முன்னறிவுப்பு செய்திவருகிறார். அவர் குறிப்பிட்டது போலவே இதுவரை மழை பெய்துவருகிறது.

இந்த நிலையில், மழை ராஜூ தனது முகநூல் பக்கத்தில், “டிசம்பர் ஒன்றாம் தேதி வரை மழை தொடரும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இது குறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

மழை ராஜூ
மழை ராஜூ

“முகநூல் நண்பர்களுக்கு இனிய காலை வணக்கம். – உங்களுடன் மூன்று செய்திகளை பகிர்ந்துகொள்கிறேன்.

  1. முகநூல் பக்கத்தில் நவம்பர் 19 ஆம் தேதி, தென் தமிழகத்தில் நவம்பர் 21 முதல் மழை வாய்ப்புள்ளது எனவும் 23,24 தேதிகளில் தென் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்ததுபோல், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்துள்ளது.
  2. நவம்பர் 19 ஆம் தேதி முகநூல் பக்கத்திலும், நவம்பர் 24 ஆம் தேதி வாரமிருமுறை இதழ் ஒன்றிலும் குறிப்பிட்டபடி, நவம்பர் 27 முதல் 29 வரை தமிழகத்தில் பலத்த மழை பெய்யும் என தெரிவிதுள்ளதுபோல், தற்போது மழை பெய்வதற்கான சூழ்நிலை உருவாகி உள்ளது.
  3. வங்க கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மத்திய தமிழகத்தை நோக்கி நகர்கிறது. அது இரண்டு கிளைகளாக பிரிந்து ஒன்று தென் தமிழகத்தை நோக்கியும், மற்றொன்று வட தமிழகத்தை நோக்கியும் நகரும் வாய்ப்புள்ளது. தென் தமிழகத்தில் அதன் தாக்கம் அதிகம் காணப்படுவதால் ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, திண்டுக்கல் உள்பட தென் தமிழகத்தில் கன மழை பெய்வதற்கான சூழ்நிலை உருவாகி உள்ளது. அதே நேரம் தமிழக கடலோர மாவட்டங்களிலும் பலத்த மழைக்கான வாய்ப்புள்ளது. மத்திய தமிழகத்தில் நவம்பர் 29 க்கு பிறகு மழை குறைந்தாலும், தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தில் டிசம்பர் 1 வரை மழைக்கான வாய்ப்புள்ளது. – இயற்கை ஆய்வாளர் மழைராஜு, பெரம்பலூர்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.