leaders (1)

ரெங்கும் இதே பேச்சு என்று கடை விளம்பரங்களில் ஒரு வாசகம் வரும். அப்படித்தான் இப்போது சமூகவலைதளங்கள் எங்கும் எம்.கே.நாராயணன்  செருப்படி பேச்சுத்தான்! 

ஜார்ஜ் புஷ் 

பொதுமக்களிடம் செருப்படி வாங்கிய முதல் நபர் என்றால் அமெரிக்க  முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷைத்தான் சொல்ல வேண்டும்.  தன் ஆட்சிகாலத்தில் பொருளாதார தடை எனும் பெயரில் 6 இலட்சம் ஈராக்கிய குழந்தைகளை கொன்றுவிட்டார் என்று இவர் மீது விமர்சனம் இருந்தது.    அந்த சமயத்தில்.. தனது ஆட்சி கால முடிவு நேரத்தில்..  டிசம்பர் 2008 ல் ஈராக் வந்தார்.

அங்கு பத்திரிகையாளர்களிடம் பேசி கொண்டிருந்த போது புஷ்ஷின்  ஈராக்கிய கொள்கைகளால் பாதிக்கப்பட்டிருந்த முந்ததர் அல் ஜைதி என்ற  பத்திரிகையாளர் புஷ்ஷை நாய் என்று திட்டியதோடு தன் 10 அளவு ஷூவை புஷ்ஷை நோக்கி வீசினார். குறி தவறிவிட்டது. ஆனாலும் புஷ் சந்திப்புகள் நேரடி ஒளிபரப்பு ஆகும் என்பதால்,  இந்த  ஜைதியின் வீச்சை உலகமே பார்த்தது. 

.சிதம்பரம் 

உலக அளவில் புஷ் முதல் நபர் என்றால், இந்திய அளவில் ப.சிதம்பரத்தைச் சொல்லலாம். இது நடந்ததும் பத்திரிகையாளர் சந்திப்பில்தான்.  பத்திரிகையாளர்கள், “1984 ல் சீக்கியர்களுக்கு எதிராக நடந்த  கலவரத்தில் ஜெகதீஷ் டைட்லருக்கு எப்பங்குமில்லை என்று சிபிஐ நற்சான்றிதழ் கொடுத்துவிட்டதே” என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, பதிலளிக்க மறுத்தார் ப.சிதம்பரம்.  உடனே ஆவேசமான ஜர்னைல் சிங் எனும் பத்திரிகையாளர் தன் பாதணிகளை சிதம்பரத்தை நோக்கி வீசினார் 

மன்மோகன் சிங் 

அகமதாபாத்தில் ஏப்ரல் 2009 தேர்தல் பிரசார கூட்டத்தில்  அப்போதைய பிரதமர்  மன்மோகன் சிங் பேசிக்கொண்டிருந்தார். அப்போது 21 வயது கணிப்பொறி இஞ்சினியரிங் படிக்கும் மாணவன் ஒருவன் தனது ஷூவை மன்மோகனை நோக்கி வீசினான். ஆனால் சாந்த சொரூபியான மன்மோகன்,   அந்த மாணவன் மீது எந்தவித  நடவடிக்கையும் எடுக்க வேண்டாம்” என்று கூறிவிட்டார். 

பி.எஸ்.எடியூரப்பா 

ஏப்ரல் 2009ல் கர்நாடக மாநிலத்தில் உள்ள  ஹசன் எனும் இடத்தில் அம்மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பா தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது  அவரை நோக்கி  34 வயது நபர்  செருப்பை வீசினார். செருப்பு குறி தவறி  எடியூரப்பா அருகில் விழுந்தது. . செருப்பு வீசிய கைது செய்யப்பட்டார்.   

எல். கே. அத்வானி 

அதே ஏப்ரல் 2009, அதே பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான  அத்வானி மீது செருப்பு வீச்சு நடந்தது.  மத்திய பிரதேசத்தில் ஒரு பொது கூட்டத்தில் அத்வானி மீது செருப்பு வீசப்பட்டது. ஆச்சரியமான விசயம் என்னவென்றால், வீசியவர் பாஜககரார்!  கட்சியின் முன்னாள் நிர்வாகியும் கூட!

அத்வானி ஒரு போலி இரும்பு மனிதர் என்றும் பிரதமர் பதவிக்கு லாயக்கற்றவர் என்று கத்தியபடியே செருப்பை வீசினார். (அப்பவே உள்குத்து ஆரம்பிச்சிருக்கு!)

 ஒமர் அப்துல்லா 

2010 ம் வருட சுதந்திர தின கொடியேற்றத்தின் போது காஷ்மீரில் முதல்வர் ஒமர் அப்துல்லா உரையாற்றிக்கொண்டிருந்தார்.  பணி நீக்கம் செய்யப்பட்ட காவல் துறையை சார்ந்த ஒருவர் அப்போது, தன்னுடைய ஷூவை ஒமர் அப்துல்லாவை நோக்கி வீசினார்.  விசாரணையில்   அவர் மன நிலை சரியில்லாதவர் என்று தெரியவந்தது.

 சுரேஷ் கல்மாடி 

காமென்வெல்த் ஊழல் புகாரில் சிக்கிய சுரேஷ் கல்மாடி தில்லியில் உள்ள சிபிஜ கோர்ட்டுக்கு அழைத்து வந்தபோது ஷூவால் தாக்கப்பட்டார். தாக்கிய நபர்  இரும்பு கம்பியை கொண்டு கல்மாடியை தாக்க திட்டமிட்டார் என்பது பின்னர் விசாரணையில் தெரியவந்தது.  கம்பியாக வரவேண்டியது, ஷூவோடு போயிற்று.. கல்மாடியின் நல்ல நேரம்!

 பிரசாந்த் பூஷன் 

காஷ்மீரின் நிலை குறித்து முடிவெடுக்க காஷ்மீரிகளுக்கே உரிமை உண்டு என்று கருத்து தெரிவித்தார்  பிரசாந்த் பூஷன். ஆகவே  இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்தவர்களால் தாக்கப்பட்டார். 

 அர்விந்த் கேஜ்ரிவால் 

பிரசாந்த் பூஷன் தாக்குதலுக்கு பின் சில நாட்கள் கழித்து அர்விந்த் கேஜ்ரிவால்  தாக்கப்பட்டார்.  லக்னோவில் பொதுக்கூட்டம் ஒன்றில் அவர்  உரை நிகழ்த்தும் போது ஊழல் விவகாரத்தில் மக்களை தவறாக திசை திருப்புகிறார். என்று  குரல் கொடுத்தபடி ஒருவர் செருப்பை வீசினார்.

சுக்ராம், சரத்பவார்

எனும் வாலிபர் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் சுக்ராம் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆகியோரை ஹர்விந்தர் சிங் என்ற இளைஞர் தாக்கினார். “இவர்கள் ஊழல்வாதிகள். அதனால்தான் தாக்கினேன்” என்று பிறகு சொன்னார்.

தமிழ் இனியா