syria
சிரியாவை விட்டு ரஷ்ய ராணுவம் வெளியேறும்

சிரியாவில் உள்நாட்டுப் போர் ஐந்து வருடங்களுக்கும் மேலாக நீடித்து வருகின்றது. இதனால் ஆயிரக் கணக்கில் மக்கள் கொல்லப்பட்டும் லட்சக் கணக்கானோர் இடம் பெயர்ந்தும் குறிப்பாக பலர் ஐரோப்பாவில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர் .
இந்நிலையில், தங்களின் ராணுவ உதவியுடன் சிரியா ராணுவத்தினர் தீவிரவாதத்தை மட்டுப்படுத்தி உள்ளனர். இனி அமைதியை ஏற்படுத்தும் விதமாக, சிரியாவில் இருந்து தம்முடைய ரஷ்ய ராணுவத்தை வெளியேறத் துவங்குமாறுத் ரஷ்ய அதிபர் விளாடிமர் புடின் திங்கட் கிழமையன்றுஅறிவித்தார்.
சிரிய அதிபர் பாஷர் அல் அசாத் அவர்களுக்கு சிரியாவின் உள்நாட்டு கழகத்தினை எதிர்கொள்ள உதவும்பொருட்டு ரஷ்யாவின் ராணுவம் சிரியாவில் தாக்குதல் நடத்தத் துவங்கி நீண்ட நாட்களுக்கு பிறகு பிறகு இத்தகைய அறிவிப்பினை புடின் வெளியிட்டுள்ளார் . ரஷ்ய பாதுகாப்புத் துறைக்கும் ராணுவத்திற்கும் கொடுக்கப் பட்ட பணியினை முழுவதும் நிறைவேற்றப் பட்டு விட்டமையா, இந்த முடிவினை எடுத்துள்ளதாக புடின் அறிவித்துள்ளார். சிரியாவில் அமைதியை ஏற்படுத்த ரஷ்யாவின் இராஜதந்திர முயற்சிகள் செம்மைப்படுத்த படும் என்றும் புடின் அறிவித்துள்ளார்.
கிரெம்ளினில் பாதுகாப்புத்துறை அமைச்சர் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர்களுடன் நடத்திய கூட்டத்திற்கு பிறகு இம்முடிவினை அவர் அறிவித்துள்ளார்.
புடின் தொலைபேசி வாயிலாக இந்த முடிவினை ஆசாத்திடம் தெரியபடுத்தியதாக கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறினார்.
சிரியாவில் போரிடும் இருதரப்பினரிடையே அமைதிப் பேச்சுவார்த்தையை ஐ நா சபை ஜெனிவாவில் துவங்கிய நாளில் இந்த அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.
ஆனால் இது வெறும் கண்துடைப்பு அறிவிப்பு என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஏனெனில் மாஸ்கோவில் தம்முடைய ராணுவம் நிலைக்கொண்டிருக்கும் என்பதை அவர் சூசகமாகத் தெரிவித்துள்ளார் . மேலும் அவர் ராணுவம் வெளியேறுவது குறித்து எந்தக் காலக்கெடுவையும் அறிவிக்கவில்லை.
சிரியாவில் உள்ள லடாக்கியா மாநிலத்தில் உள்ள ஹிமேமின் விமானத்தளத்தையும் டர்டௌஷ் துறைமுகத்திலும் உள்ள தம்முடைய ராணுவ முகாம் செயல்படும் என்றும் அறிவித்துள்ளார்.
ஆனால் இந்த்ச இரண்டு தளங்களில் இருந்து தான் பெரும்பான்மையான ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தப் பட்டது என்பது குறிப்பிடத் தக்கது .
இதன் மூலம் புடினின் அறிவிப்பு எந்த அளவுக்கு நடைமுறையில் சாத்தியப் படுத்தப் படும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
சிரியாவில் நடைபெற்றுவரும் போரில் தங்களின் போர் மூலம் , ரசியா உலகளவில் தம்முடைய செல்வாக்கினை அமெரிக்காவிற்கு இணையானதாக நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.
அதே வேளையில் சிரியாவில் இனியும் பீரங்கிகள் முழங்குமேயானால் அது பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும் எனவும், சிரியா முழுவதும் மீண்டும் அசாத்தின் ஆட்சியை ஏற்படுத்துவது இனி இயலாத காரியம் எனவும் பேச்சுவார்த்தையொன்றெ தீர்வு என்றும் கருத்து நிலவுகின்றது.
சிரியாவில் உள்ள முஸ்லிம் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி வருவதாக ரஷ்யா கூறினாலும் உண்மையில் சிரியா அதிபர் ஆசாத்தின் எதிரிகள் கலையெடுப்பதில் தான் கவனம் செலுத்தி தாக்குதல் நடத்தி வந்ததாக எதிர்க் கட்சிகள் குற்றம்சாட்டி வந்தது.
ரஷ்யாவின் இந்த அறிவிப்பு அமெரிக்கா உடனான கசப்புணர்வை போக்க உதவும் என்று நம்புவதாக ரஷ்ய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.
சிரியாவின் உள்நாட்டுப் போரில் ரஷ்யாவின் பங்கு குறித்து அமெரிக்கா , “ரஷ்யாவின் குறுகிய நோக்கங்களுக்காக , சிரியாவின் போரை ரஷ்யா நடத்தி வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டிவந்தது குறிப்பிடத்தக்கது.