trajendar749

 

ஆபாசமான பீப் பாடல் பாடிய சிம்புவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்திருக்கிறது. ஆரம்பத்தில் அவரது டி.ராஜேந்தர், “இது சிம்பு பாடிய பாடலே இல்லை..” என்றார். பிறகு, “சிம்புவுக்கு தெரியாமல் யாரோ இணையத்தில் பதிவேற்றிவிட்டார்கள்” என்றார்.
இந்த நிலையில் பத்திரிகையாளர்கள், அவரது தரப்பை அறிய தொடர்ந்து முயற்சித்தார்கள். நாமும் நேற்று தொடர்புகொண்டு பேசினோம்.
இந்த நிலையில் அவரது குறள் வெப் டி.வியில் தன்னிலை விளக்கம் கொடுத்திருக்கிறார் டி.ராஜேந்தர்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
“சிம்பு பாடிய பீப் பாடல் இப்போ பெரிய சர்ச்சை ஆகியிருக்கு. முதல்ல பீப் பாடல்னா என்னன்னு தெரிஞ்சிக்கணும். ஒரு வார்த்தையை வார்த்தையை மூடி மறைக்க டெக்னாலஜிபடி பீப் ஒலியை பயன்படுத்துவதுதான் பீப் பாடல்.
இன்னொரு முக்கியமான விசயம்.
அடிப்படையில் இந்த பாடல் திரைப்படத்திலோ, தனிப்பட்ட ஆல்பமாகவோ வரலை. முழுமை பெற்ற பாடலும் இல்லை.
இந்த பாடலுக்கு சிம்பு சிம்பு குரல் கொடுத்தா சொல்றீங்க.. தொலைக்காட்சியிலோ, ரேடியோவிலோ, அரங்கத்திலோ, மேடை கச்சேரியிலோ தெருவோரத்துலோ சிம்பு இந்த பாடலை பாடலை. இது ஒலிப்பதிவு கூடத்தில கூட பதிவு பண்ணலை.
தனிப்பட்ட முறையில் அறையில் சில டம்மி வார்த்தைகளை போட்டு பாடி.. பிறகு அதுகூட வேண்டாம் என மூடி மறைத்துவிட்ட பாட்டு.
ஒரு கட்டத்தில வேண்டாம் என மூடி… தூக்கி வீசப்பட்ட பாடல்.

வேண்டத்தகாத விசக்கிருமிகள் இந்த பாடலை எடுத்துச்சென்றுசிம்புவுக்கு பெண்களிடம் கெட்ட பெயரை ஏற்படுத்த சதி செய்து இணையதளத்தில் பதிவேற்றிட்டாங்க. இதுதான் உண்மை. இது சத்தியம்.

நான் எதையும் நியாயப்படுத்தி பேசலை. சட்டப்படி கேட்கிறேன். கோவையில் கமிசனர் ஆபீசில் சில அமைப்பினர் கொடுத்த புகார் மனுவில் பாடலில் ஆபாச வார்த்தை இருந்ததாக சொல்கிறார்கள். இந்த பாடல் இணையதளத்தில் வெளியாகி இருப்பதாகவும் சொல்கிறார்கள்.ஆனால் சிம்புதான் இணையத்தில் வெளியிட்டார் என்று இவர்களால் நிரூபிக்க முடியமா…” என்று பேசியிருக்கிறார் டி.ராஜேந்தர்.

முழு பேட்டியை காண….