tiger

மீபத்தில் வெளியான இளைய தளபதியின் “விலங்கு” படம் லீஸாகும் முதல் நாள், அந்த ஹீரோ உட்பட  பலரது வீட்டில் வருமானவரி ரெய்டு நடந்தது.  ஆகவே, லேப்க்கு கட்ட வேண்டிய பாக்கி தொகையை கட்ட முடியாமல் போக, ரிலீஸ் தாமதமானது. ஆகவே முதல் இரண்டு காட்சிகள் ரத்தானது.  இது எல்லோருக்கும் தெரிந்த விசயம். தெரியாத பெரும் புலம்பல் ஒன்று இருக்கிறது.

ரத்தான இரண்டும் ரசிகர் மன்ற காட்சிகள்.  அதாவது தியேட்டரில் நிர்ணயித்த கட்டணத்தைவிட பல மடங்கு அதிகமாகவைத்து விற்கப்படுபவை.

இந்த காட்சிகள் ரத்தானதால் ரசிகர்கள் சோர்வடைந்தனர். அதன் பிறகு திரையிடப்பட்ட வழக்கமான காட்சிகளுக்கு ஏற்கெனவே டிக்கெட்டுகள் ரிசர்வ் ஆகிவிட்டதால், அதிலும் இவர்கள் படம் பார்க்க முடியவில்லை.

இந்த நிலையில், தாங்கள் கட்டிய கூடுதல் தொகையை திரும்பத் தர, தியேட்டர் ஓனர்களை நாடினர் ரசிகர்கள்.

“அதிக விலை கொடுத்து வாங்கினோம். ஆனால் ரிசல்ட் சரியில்லை. தவிர தாமதத்துக்கும் நாங்கள் காரணம் அல்ல. இப்போது ரசிகர்கள் பணத்தைத் திரும்ப கேட்கிறார்கள். என்ன செய்வது” என்று “விலங்கு” பட தயாரிப்பாளரும்  சின்ன தளபதியின் மேனேஜருமானவரிடம் புலம்பியிருக்கிறார்கள் தியேட்டர் அதிபர்கள்.

அவர், “நிலைமை இப்படியே போனால் புலியை அதிக விலைகொடுத்து வாங்கிய திரையரங்க உரிமையாளர்கள்  விஜய்யிடம் நஷ்ட ஈடுகேட்டுவிடுவார்களோ” என்று பதறியிருக்கிறார்.

ஆகவே  “ரசிகர்களுக்கு பணத்தைத் திருப்பித்தர வேண்டாம். ரசிகர்மன்ற  காட்சிகளை திரையிட்டது போல கணக்கு காண்பித்துவிடுங்கள்” என்று சொல்லியிருக்கிறார்.

இதனால் மகிழ்ந்த திரையரங்க உரிமையாளர்கள், பணத்தைத் திருப்பிக்கேட்ட சின்ன தளபதி ரசிகர்களிடம் “பணம் வாபஸ் கிடையாது” என்று சொல்லிவிட்டார்கள்.

தங்கள் “தலைவரின்” படமாச்சே.. என்று போனால் போகுது என்று  ரசிகர்களும் வாய்மூடிக் கிடக்கிறார்கள்.

“அப்பாவி ரசிகர்களை இப்படி ஏமாற்றலாமா” என்ற ஆதங்கக் குரல் மட்டும் முணுமுணுப்பாக ஒலிக்கிறது!

படம்:  சிரிக்கும் இந்திய தேசிய விலங்கு புலி… ஹி ஹி