Gethu-Poster
சென்னை:
‘கெத்து‘ தமிழ் வார்த்தை என்பதால், அந்த படத்துக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ‘கெத்து’ திரைப்படத்துக்கு வரி விலக்கு அளிக்க தமிழக அரசு மறுத்துவிட்டது. கெத்து தமிழ் பெயர் இல்லை என்று கூறி மறுத்திருந்தது. தமிழக அரசின் இந்த உத்தரவை எதிர்த்து கெத்து தயாரிப்பாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
ரெட் ஜெயின்ட் மூவீஸ் மூத்த வக்கீல் ஒருவர் கூறுகையில்,‘ தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டள்ள ஒரு அகராதியிலேயே கெத்து தமிழ் வார்த்தை என குறிப்பிடப்பட்டுள்ளது. படத்துக்கு யு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் படத்தில் எவ்வித வன்முறை காட்சியும் இடம்பெறவில்லை’’ என்றார்.
வழக்கை விசாரித்த நீதிபதி துரைசாமி தனது தீர்ப்பில் ,‘‘ கெத்து தமிழ் வார்த்தை என்பது தமிழ் அகராதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படி இருக்கையில் 6 பேர் கொண்ட குழு எப்படி கெத்து தமிழ் வார்த்தை இல்லை என்ற முடிவுக்கு வந்தனர். கெத்து தமிழ் வார்த்தை என்பதால் இந்த படம் வெளியான ஜனவரி 14ம் தேதி முதல் வரி விலக்கு அளிக்க வேண்டும்’’ என தெரிவித்தார்.