floodc_1447149870

ழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னையில், பல்வேறு இடங்களில் இருந்து வரும்  நிவாரணப் பொருட்கள் குவிந்து கொண்டே இருக்கிறது.

ஆனால் கடலூர் மாவட்டத்தில் இந்த அளவுக்கு நிவாரண உதவிகள் கிடைக்கவில்லை.  இங்கு வரும் நிவாரண பொருட்களும் நகர்ப்புற பகுதிகளிலேயே அளிக்கப்படுகிறது. ஆகவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட கிராமப்புற மக்கள் தொடர்ந்து நிவாரணம் கிடைக்காமல் தவிக்கிறார்கள்.

கடந்த மாதம் 9ம் தேதி கனமழை பெய்த போதே சிதம்பரம், பண்ருட்டி, காட்டு மன்னார்கோவில், குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி, வடலூர் பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டு கடுமையாக பாதிக்கப்பட்டன.  இந்த நிலையில், கடந்த வாரம் முதல் பெய்துவரும் பலத்த மழையால் மீண்டும் மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. சனிக்கிழமை இரவு மாவட்டம் முழுவதும்  கன மழை பெய்தது.   ஞாயிறன்று காலையில் இருந்து மாலை வரை விட்டுவிட்டு கனமழை பெய்து கொண்டே இருந்தது. தொடரந்து  திங்கட்கிழமையன்று பலத்த மழை பெய்தது.

இதனால் கடலூர், பண்ருட்டி, வடலூர், குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், புவனகிரி, பரங்கிப்பேட்டை உட்பட  மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் ம் வெள்ளநீர் சூழ்ந்திருக்கிறது.

இதனால் கடந்த ஒருமாத காலமாகவே பல்லாயிரக்கணக்கான மக்கள்  தங்கள் வீடுகளை இழந்து முகாம்களில் அடைக்கலமாகியிருக்கிறார்கள்.

இன்னும்கூட, நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு நிவாரணப்பொருட்கள் சென்று சேரவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.  இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் நிவாரண உதவிகள் கிடைக்காமல் உள்ள கிராமங்கள் பட்டியலிட்டு அறிவிக்கப்பட்டுள்ளன. நிவாரண உதவிகளை செய்வோர் இந்த கிராமங்களுக்கும்  உதவலாம்  என்று கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.

ஆதிநாராயணபுரம், ஆடுரகரம், அடூர் குப்பம், அகாட்டிம்மபுரம், அழகியநாதம், ஆலப்பாக்கம், அம்பலவானம்பேட்டை, ஆண்டர்முள்ளிப்பள்ளம், அன்னவள்ளி,அனுக்கம்பட்டு, அரங்கமங்கலம், அரிசிப்பெரியங்குப்பம், ஆயிக்குப்பம், புட்டாம்படி, செல்லஞ்சேரி,சென்னப்பநாயக்கன்பாளையம், சின்ன கங்கணங்குப்பம், கடலூர் போர்ட், கங்கம நாயக்கன் குப்பம், குண்டுப்பாலவாடி  ஆகிய ககிராமங்களில் வெள்ளம் சூழ்ந்திருக்கிறது.
குருவப்பன்பேட்டை, இடங்கொண்டாம்பேட்டை, இரண்டாயிரவிலகம், காளையூர்,கம்பளிமேடு, காஞ்சமண்டன்பேட்டை,கன்னடி காரைக்காடு,காரைமேடு, கரையேராவிட்டாகுப்பம், காரமணிக்குப்பம், கரணப்பட்டு,கருங்குளி, கருப்படித்துண்டு, கருவேப்பம்பட்டி, காயல்பட்டு,கேசவ நாராயணபுரம் ,கீழ்அழிஞ்சிப்பட்டு, கிழிஞ்சிக்குப்பம்,கீழ் குமாரமங்கலம், கோதண்டராமபுரம், கோலக்குடி,கோணமங்கலம், கொண்டூர்,கோதவாச்சேரி, கிருஷ்ணன் குப்பம்,குடிக்காடு, குமாரபேட்டை, குண்டியமல்லூர், குறிஞ்சிப்பாடி,மடல்பட்டு, மலைப்பெருமால் அகரம்,மருடு, மருவாய்,மாவடிப்பாளையம் மேலகுப்பம், மேலலிஞ்சிப்பட்டு, மேலப் புதுப்பேட்டை ,நடுவீரப்பட்டு, நாகப்பனூர், நல்லதூர், நட்டப்பட்டு ஆகிய கிராமங்களுக்கும் நிவாரண உதவிகள் இதுவரை கிடைக்கவில்லை என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நயிணாக்குப்பம், ஓட்டேரி, பச்சயங்குப்பம், பள்ளிப்பட்டு, பெட்டுநாயக்கன் குப்பம், பெரியகங்கணாங்குப்பம் ,பிள்ளலி, பொன்னயங்குப்பம்,  புதுக்கடை,  புவனிக்குப்பம், ராஜகுப்பம், ராமபுரம்,  ரங்கநாதபுரம், சீதாபாளையம், செம்பங்குப்பம் சிங்கிரிக்குடி,  சிறுப்பாளையூர்,  சுப உப்பளவாடி, தம்பிப்பேட்டை,  தணூர், தயில்குணம்பட்டினம், தேனம்பாக்கம்,  தம்பிப்பாளையம் ஆகிய வெள்ளம் சூழ்ந்த கிராமங்களுக்கும் இதுவரை எவ்வித நிவாரண உதவிகளும் கிடைக்கவில்லை.

துக்கணாம்பாக்கம், திம்மருவதம் பாக்கம், தீர்த்தங்கரை, திருச்சேபுரம், திருமணிக்குழி, திருப்பணாம்பாக்கம், திருவண்டிபுரம், தியாகவெள்ளி, தொண்டமானதம், தோப்புக்கொல்லை, தொட்டப்பட்டு, உச்சிமேடு, உடலப்பட்டு, உள்ளேரிப்பட்டு, வடபுரம், கீழ்பாடி, வலுடம்படு, வானமாதேவி, வராகல்பட்டு, வெளிச்சமண்டலம், வெள்ளக்கரை, வெள்ளப்பாக்கம், வெட்டுக்குளம், விலங்கல்பட்டு, விருப்பாச்சி ஆகிய கிராமங்களும் உதவிகள் கிடைக்கப்பெறாமல் தவிக்கின்றன.

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால்  கடலூர் மாவட்டத்தில் 350க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

ஆகவே, நிவாரண உதவி செய்பவர்கள் இந்தத் தகவலை அறிந்து, உதவி செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.