download
 
தென்னிந்திய  திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தல் நாளை நடக்கிறது.  பாடலாசிரியரர்கள் திரைக்கதை வசனகர்த்தார்கள் கதாசிரியர்கள் ஆகியோர் உறுப்பினராக உள்ள முக்கியமான சங்கம் இது. இதுவும் பெப்சி கூட்டமைப்பில் ஒரு அங்கமாகும். இந்த சங்கத்தில்தான் திரைப்படத்தின் கதையை பதிவு செய்துகொள்ள வேண்டும்.
இந்த சங்கத்துக்கு நாளை தேர்தல் நடக்க இருக்கிறது.  விசுவின் ஆதரவு பெற்ற அணி சார்பாக தலைவர் பதவிக்கு மோகன் காந்திராமனும், செயலாளருக்கு பிறைசூடனும் போட்டியிருகிறார்கள்.
எதிராக களம் இறங்கியிருக்கும் புது வசந்தம் அணி சார்பாக, தலைவர் பதவிக்கு   விக்கிரமனும், செயலாளர் பதவிக்கு  வி.சி. குகநாதனும்  போட்டியிடுகிறார்கள்.  ரமேஷ்கண்ணா பொருளாளராக போட்டியிடுகிறார். (இவரை எதிர்த்து யாரும் போட்டியிட வில்லை என்பதால் இவர் மட்டும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார்.)
தலைவர், செயலாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கு நாளை  நாளை தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் பிரச்சாரம் சூடுபிடித்திருக்கிறது. அதோடு பரஸ்பர குற்றச்சாட்டுக்களும் தூள் பறக்கிறது.
விசு, தனது பாணியில் பல பாயிண்ட்டுகளை குறிப்பிட்டு, உறுப்பினர்களு்ககு ஒரு கடிதத்தை அனுப்பி வருகிறார். இதில் விக்கிரமன் மற்றும் அவரது அணியினர் மீது கடும் குற்றச்சாட்டுக்களை சுமத்தி இருக்கிறார்.
 

அந்த பரபரப்பான கடிதம்..
அந்த பரபரப்பான கடிதம்..

அந்த பரபரப்பான கடிதத்தில் விசு குறிப்பிட்டிருப்பதாவது:
“திரு. விக்கிரமன் அவர்களே,
இயக்குநர்களுக்கு என்றுதனி சங்கம் உண்டு. அதில் நீங்கள் தலைவராக இருக்கிறீர்கள்.  இப்போது எழுத்தாளர் சங்க தலைவர் பதவிக்கும் போட்டியிடுகிறீர்கள்.இதில் வென்றுவிட்டால், இரு சங்கங்களுக்கும் தலைவராக இருப்பீர்களா?  கிட்டதட்ட 500 பேருக்கும் மேல் உறுப்பினர்கள் கொண்ட நமது சங்கத்தில் உங்களைத்தவிர தலைவர் பொறுப்புக்கு தகுதியானவர்கள் வேறு யாரும் இல்லையா?
பல இணை துணை இயக்குநர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் பிரச்சினை ஏற்படுவது  அவரவர் இயக்குநர்களால்தான்.  நூறு நாட்கள் ஓடிய என் நாடகத்தை திரைப்படமாக எடுத்து என் பெயரை இருட்டடிப்பு செய்த இயக்குநரும் இந்த இண்டஸ்ட்ரியில் கம்பீரமாக வளைய வந்தவர்தான்.  அந்த சமயத்தில் நான் எவ்வளவு புழுங்கி இருக்கிறேன் எந்று எனக்குத் தெரியும். அது மாதிரி சமயங்களில்  பிரச்சினையுடன்  எழுத்தாளர்கள் உங்களை நாடி வரும்போது, இயக்குநர்கள் சங்க தலைவராக முடிவு எடுப்பீர்களா, எழுத்தாளர் சங்க தலைவராக முடிவு எடுப்பீர்களா?
நானும் இயக்குநர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு வலுக்கட்டாயமாக நிறுத்தப்பட்டவன்தான்.அதில் ஜெயித்தால் எழுத்தாளர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று க்குறுதி கொடுத்தேன்.  அந்த மாதிரி ஏதாவது வாக்குறுதி உண்டா மிஸ்டர் விக்ரமன்?
எழுத்தாளர் சங்கம், கடனில் தத்தளித்த நிலையில் நான் பொறுப்புக்கு வந்தேன். ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக் முடியாத நிலை.  ஆனால் இப்போது வங்கியில் இருப்பு இருக்கிறது. ஊழியர்களுக்கு சம்பளம் மட்டுமல்ல இன்கிரிமென்ட்டும் தருகிறோம். இந்த நிலைக்கு சங்கம் வந்ததற்கு காரியதரிசி பிறைசூடனுக்கும்  பங்கு உண்டு. அவரை வெளியேற்றஏன் துடிக்கிறீர்கள்?
இப்போது உங்கள் அணியில் இருக்கிறாரே விசி குகநாதன்..  கடந்த. பெப்சி தேர்தலின் போது, அவருக்காக கடுமையாக உழைத்தோம். விஜயன் என்கிற மலையை எதிர்த்து அவரை நிற்கவைத்து வெற்றிபெற வைத்தோம்.  அவர், வெற்றி பெற்றவுடன் செய்த முதல்வேலை.. எங்களை விட்டு பிரிந்ததுதான். அதன் பிறகு அவர் மீது 3 கோடி ஊழல் என்று புகார் வந்தது” என்று பல்வேறு விசயங்களைகூறி கடிதம் எழுதியிருக்கிறார் விசு. இது எழுத்தாளர் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நாளை தேர்தல் நடக்க இருக்கும் நேரத்தில் இந்த கடிதம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.