12065702_10153315592845756_2981354608502783946_n

ழக்கத்திற்கு மாறான ஒரு வித்தியாசமான மாலை வேளை. ஜன்பத் சரவண பவனில் வழக்கம்போல் உப்புமாவைச் சாப்பிட்டுவிட்டு பில்ட்டர் காபியைக் குடித்துக் கொண்டிருந்தேன்.

அப்போது எதிர்பாராத ஒன்று நடப்பதைக் கண்டேன். மிடுக்காக உடையணிந்த ஒருவருடன் அழுக்கான ஆடையணிந்திருந்த நான்கு குழந்தைகள் மிக மகிழ்ச்சியுடன் உள்ளே நுழைந்தார்கள்.   அவர் ஒரு பேரிதயம் படைத்த மனிதர் என்பதும், தெருவில் திரியும் அக்குழந்தைகளின் திருப்திக்காக சாப்பாடு  அளிக்கவும்,  அந்த குழந்தைகளுக்கு சிறிது நேர மகிழ்ச்சி தரவும் அவர்களை அழைத்துவந்துள்ளார் என்பதும் எனக்குத் தெளிவாகத் தெரிந்தது. இவ்வாறாக நிகழ்வது அபூர்வமே.

பொதுவாக மெக்டலாட் அருகே வெளிநாட்டவர்கள் இப்படி, குழந்தைகளுக்கு பர்கர் வாங்கித் தருவதை அடிக்கடிக் காணமுடியும். ஆனால் இது அவ்வாறல்ல. அந்த மனிதர் மற்றும் அக்குழந்தைகளைப் பற்றி எனது மனதில் ஏற்பட்ட சிறிய யுத்தத்திற்குப் பின் அவர் செய்யும் அந்த நற்செயலுக்காகப் பாராட்டுவதற்காகச் சென்றேன்.

அப்போது அவர், தான் ஒரு மருத்துவர் என்றும் ஏழைக்குழந்தைகளுக்கும், வசதி படைத்த குழந்தைகளுக்குமிடையே மருத்துவமனையிலும், வெளியிலும் வித்தியாசம் பார்ப்பதில்லை என்றும் கூறினார். அக்குழந்தைகள் காசு வேண்டும் என்று கேட்க அவரோ அக்குழந்தைகள் மனதில் என்றும் பதியும் அனுபவத்தைத் தர எண்ணியதன் விளைவே இது.

அவர், “அரசுகள் வரும் போகும், ஆனால் இக்குழந்தைகளின் விதி என்றும் மாறுவதில்லை. அப்பகுதி அருகில் தொழிலாளர்களாக வேலை பார்த்துக்கொண்டிருக்கும் இக்குழந்தைகளின் பெற்றோர்கள் தம் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பாமல்  வேலைக்கு அனுப்புகிறார்கள்” என்றார்.

ஓட்டல் நிர்வாகத்தினர் குழந்தைகளை அன்புடன் வரவேற்றனர். அதிகம் சத்தம் போடக்கூடாது என்று அவர்களைக் கேட்டுக் கொண்டார்கள்.\  சாப்பிட வந்தவர்களில் பலர் அந்நிகழ்வைக் கவனித்தாலும் அதனைப் பற்றி எதுவும் சிந்தித்தாகத் தெரியவில்லை. என்னைப் போன்ற சிலர் பெருமனது படைத்த அந்த மனிதரைப் பாராட்டினோம்.

அந்த மனிதரைப்போல் செய்ய எனக்கு  தைரியமில்லை என்பதற்காக வெட்கப்பட்டேன். அந்தக் குழந்தைகளைவிட அவர் அதிகம் மகிழ்ச்சியாகக் காணப்பட்டார்.

எளிதாக… குறைந்த செலவில் கிடைக்கும் இந்த மகிழ்ச்சியை மேலும் பலரும் அனுபவிக்க நமக்கு அவர் தூண்டுகோளாக இருக்கிறார் என்று நம்புகிறேன்.

(என்னுடைய சாதாரண தொலைபேசியை வைத்துக்கொண்டு இந்த அளவிற்குத்தான் புகைப்படம் எடுக்க முடிந்தது.)

new

  • ராஜன் மிஸ்ரா https://www.facebook.com/asitranjanmishra?fref=photo