tata

ரத்தன் நவால் டாடா பிறந்தநாள்

1937 ஆம் ஆண்டு இதை நாளில் மும்பையில் பிறந்தவர் ரத்தன் நவால் டாடா. இந்தியாவின் மிகப்பெரிய தொழிற்திரளான டாடா குழுமத்தை மிகப்பெரும் நிறுவனமாக உருவாக்கியவர். டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், டாடா பவர், டாடா கல்சல்டன்சி சர்வீஸஸ், டாடா டீ, டாடா கெமிக்கல்ஸ், தி இந்தியன் ஹோட்டல்ஸ் கம்பெனி மற்றும் டாடா டெலிசர்வீசஸ் என்று டாடா நிறுவனத்தின் சாம்ராஜ்யம், மிக்பெரியது.

 

theeru

தீருபாய் அம்பானி பிறந்தநாள்

தீரஜ்லால் ஹிராசந்த் அம்பானி என்கிற தீருபாய் அம்பானி 1932ம் ஆண்டு இதே நாள் பிறந்தார். மிக வறிய குடும்பத்தில் பிறந்து பெரும் தொழிலதிபராக உருவானவர். இவர் தனது உறவினருடன் சேர்ந்து மும்பையில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை ஆரம்பித்தார். இதை 1977 ஆம் ஆண்டில் வரையறுக்கப்பட்ட பொது நிறுவனமாக்கினார். அதன் பிறகு ஏறுமுகம்தான்.

உலக பணக்காரர்கள் வரிசையில் இடம் பிடித்தவர் தீருபாய். இவரது மறைவுக்குப் பிறகு இவரது மகன்கள் அனில் மற்றும் முகேஷ் ஆகியோர் கைத்து சொத்துக்கள் வந்தன. இப்போது இவர்களும் உலக பணக்காரர்கள் வரிசையில் இடம் பிடித்திருக்கிறார்கள்.

index

 

எஸ். பாலசுப்ரமணியன் பிறந்தநாள்

விகடன் இதழ் குழுமத்தின் ஆசிரியராகவும் வெளியீட்டாளராகவும் இருந்த எஸ். பாலசுப்ரமணியன் 1936ம் ஆண்டு இதே நாளில்தான் பிறந்தார்.  ஜெமினி ஸ்டுடியோஸ் என்கிற திரைப்பட நிறுவனத்தின் உரிமையாளராகவும் இருந்தார். சென்னை லயோலா கல்லூரியில் படித்து இளங்கலைப் (பி.காம்) பட்டம் பெற்றார். விகடன் குழுமத்தில், 1956 ஆம் ஆண்டில் இணைந்த இவர் தந்தை எஸ்.எஸ். வாசன் மறைவுக்குப் பிறகு விகடன் குழுமத் தலைவராகப் பொறுப்பேற்றார்.

தமிழக முதல்வராக எம்.ஜி.ஆர். இருந்தபோது, அமைச்சர், எம்.எல்.ஏ.,க்களை விமர்சித்து, ‘ஆனந்த விகடன்’ இதழில் கார்ட்டூன் வெளியிடப்பட்டது. இதற்காக, ‘சட்டசபைக்கு வந்து விகடன் ஆசிரியர் பாலசுப்ரமணியன் மன்னிப்பு கோர வேண்டும்’ என, அப்போதைய சபாநாயகர் பி.எச்.பாண்டியன் உத்தரவிட்டார். இதை மறுத்ததால் சிறைவாசம் அனுபவித்தார் பாலசுப்ரமணியன். அதோடு, சட்டமன்ற உத்தரவு தவறு என சுப்ரீம் கோர்ட்வரை சென்று வாதாடி வெற்றி பெற்றார். பத்திரிகை சுதந்திரத்தின் குறியீடாக பாலசுப்ரமணியன் கருதப்படுகிறார்.