12316121_981914298533540_3919372112235721114_n

 

1874ம் ஆண்டு இதே நாளில்தான்,  இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் பிறந்தார். ‘போரில் உறுதி; தோல்வியில் எதிர்ப்பு; வெற்றியில் கண்ணியம்; அமைதியில் நல்லெண்ணம்’ – இதுவே ஒரு மாபெரும் வரலாற்றின் தாரக மந்திரம்” என்றவர் சர்ச்சில். அதைத் தனது வாழ்க்கையில் கடைபிடிக்கவும் செய்தார்.

பத்திரிகையாளராக தனது வாழ்க்கையைத் துவக்கிய  சர்ச்சில், ராணுவத்தில் வீரராக சேர்ந்து  தளபதியாக  உயர்ந்தார். அடுத்ததாக அரசியலில்  காலடி எடுத்து வைத்த அவர், நிதி அமைச்சரானார். பிறகு,  இரண்டு முறை இங்கிலாந்துப் பேரரசின் பிரதம மந்திரியாக பதவகித்தார்.

அவர் ஆற்றிய போர் உரைகள் மட்டும் 20 நூல்களாக வெளிவந்திருக்கின்றன.

மேலும் சில முக்கியநிகழ்வுகள்:

🔻ஸ்காட்லாந்து தேசிய தினம் 🔻பார்போடஸ் விடுதலை தினம்(1966) 🔻வளைகுடாப் போர் முடிவுக்கு வந்தது(1995)