Nallakannu

ந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான தோழர் நல்லகண்ணுவின் பிறந்தநாள் இன்று.

தமிழ்நாடு விவசாய சங்கத்தின் செயலாளர், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் என பணியாற்றிய தோழர் நல்லகண்ணு, 1991 ஏப்ரலில் மதுரையில் நடந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் தமிழ் மாநில செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2005ல் அப்பொறுப்பில் இருந்து விடுபட்ட பிறகு தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர்.

பலருக்கும் தெரியாத தகவல், தோழர் நல்லகண்ணு, கவிதையும் எழுதுவார். இரண்டு முக்கியமான கட்டங்களில் அவர் அவர் எழுதி கவிதைகள் குறிப்பிடத்தக்கது. தோழர் ஜீவா மறைந்தபோதும், தனது மாமனார்

அன்னசாமி படுகொலை செய்யப்பட்ட சமயத்திலும் அவர் எவுதிய கவிதைகளைப் படித்தால் கண்ணீர் பெருகும்.

(அன்னசாமி தன் மாமனார் என்பதால் அவர் கவிதை எழுதவில்லை.  ‘மருதன் வாழ்வு’ கிராம மக்களின் முன்னேற்றதுக்குப் பாடுபட்ட ஒரு கம்யூனிஸ்ட் தோழரின் மரணம் என்பதற்காகவே எழுதினார்.)

தலித் மக்களின் விடுதலைக்காக பாடுபட்ட அன்னசாமி கொலை செய்யப்பட்டபோது அப்பழியை தலித் மக்கள் மீது திசை திருப்ப ஆதிக்க சாதிகள் சதி செய்ய.. அதை தீரத்துடன் தடுத்தவர் நல்லகண்ணு.

எப்போதுமே அவர் எளிமை விரும்பி. மனப்பாறையில் ஒருமுறை பிரம்மாண்டமாக  மேடையிட்டு பேசுவதற்கு நல்லகண்ணவை அழைத்தார்கள்.

மைக்கைப் பிடித்த நல்லகண்ணு பேசிய முதல் வார்த்தை, “நாட்டு மக்களோட கஷ்டத்தை இத்தனை அலங்கார விளக்குப் போட்டா பேசுவது’  என்பதுதான்.

நல்லகண்ணு, தனது பிறந்தநாளை கொண்டாடியதே இல்லை. ஆனால் அவரது 80ஆவது பிறந்த நாள் விழாவை கொண்டாட கட்சி முடிவு செய்தது. நல்லகண்ணுவால் மறுக்க முடியாமல் ஒப்புக்கொண்டார்.

அந்த பிறந்தநாள் விழாவில்,  ஒரு கோடி ரூபாயை வசூலித்து அளித்து தோழரின் சேவைக்கான தியாகத்துக்கான மரியாதையைச் செலுத்த விரும்பியது.

அந்த விழா மேடையில் யாருக்கோ விழா எடுப்பது போல அமர்ந்திருந்த தோழர், பேசும்போது, ஒரு கோடி ரூபாயை கட்சி நிதிக்காக திரும்ப அளித்து, அனைவரையும் நெகிழச் செய்துவிட்டார்.

சமீபத்திய சென்னை வெள்ளத்தில் நல்லகண்ணுவின் வீடும் பாதிக்கப்பட்டது. அவரை மீட்கச் சென்ற போது, “இந்தப் பகுதியில் இருக்கும் அனைவரையும் மீட்ட பின்பு என்னை மீட்க வாருங்கள்” என்றார்.

இன்றும் கட்சி தருகிற சொற்ப ஊதியத்தில் தன் தேவைகளைப் சுருக்கிக்கொண்டு மக்களக்காக  போராடிக்கொண்டே இருக்கிறார்.