12122829_1061013563938324_4151649870474471089_n

இந்த தேர்தலையும் தெரிஞ்சுக்குவோம்

நடிகர் சங்க தேர்தல் விவகாரம்தான் நம்மை ஆக்கிரமித்திருக்கிறது. இந்த நிலையில் நாம் அவசியம் அறிய வேண்டிய தேர்தல் விசயம் ஒன்று இருக்கிறது.  அது, சமூபத்தில் நடந்த மியன்மர் தேர்தல்.  படித்துப்பாருங்கள்…

உலகிலேயே பெரிய ஜனநாயகநாடு என்று பெருமை கொள்கிறோம். ஆனால் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் அங்கிருந்தபடியே வாக்களிக்க இன்னும் வாய்ப்பு அமையவில்லை.

பிரான்ஸ் நாட்டு தேர்தலில் உலகெங்கிலும் உள்ள அந்நாட்டு மக்கள் வாக்களிக்கிறார்கள். பிரான்ஸ் குடியுரிமை பெற்று பாண்டிச்சேரியில் வசிப்பவர்களுக்காக தனி வாக்குச்சாவடி அமைப்பதை அவ்வப்போது செய்திகளாக படித்திருப்போம்.

சரி.. பிரான்ஸ் பணக்கார நாடு, தொழில் நுட்ப விசயங்களில் முன்னேறிய நாடு. ஆகவே அவர்களால் அப்படிச் செய்ய முடிகிறது என்று சமாதானப்படுத்திக்கொள்வோம்.

ஆனால் நம்மிலும் ஏழை நாடான மியான்மர் தேர்தலுக்காக வெளிநாடுகளிலும் வாக்குச்சாவடி அமைத்துள்ளது அந்த நாடு. வெளிநாடுகளில் உள்ள தூதரகங்களில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

ஆனால் நாம் பேசிக்கொண்டே இருக்கிறோம்.