karuppaiyah

 

நியூயார்க்: 28.08.15

மெர்ஸ் என்கிற மத்திய கிழக்கு சுவாச நோய்க்கான(MERS-Middle East Respiratory Syndrome) புதிய தடுப்பு மருந்தைஅமெரிக்க வாழ் தமிழரான கருப்பையா முத்துமணி தலைமையிலான மருத்துவ அணி கண்டுபிடித்து சாதனை புரிந்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனிய பல்கலைகழத்தின் ஆராய்ச்சியாளர்கள் கடந்த ஆறு வாரங்களுக்கும் மேலாகமெர்ஸ் நோய்க்கான தடுப்பூசியை கண்டு பிடிப்பதற்கான ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.  தற்போது அந்த முயற்சியில் வெற்றி கண்டுள்ளார்கள்.

மெர்ஸ்(MERS) நோயால் பாதிக்கப்பட்ட  ரீசஸ் இன குட்டைவால் குரங்குகளுக்கு செயற்கையான முறையில்  டி.என்.ஏசெலுத்தி அந்நோயை குணபடுத்தியுள்ளனர்.

ஒட்டகத்தின் ரத்தத்தில் உள்ள ஆண்டிபாடிகள் இந்த மெர்ஸ் நோயை தடுக்கும்  வல்லமை கொண்டது எனவும்ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

இது குறித்து  ஆராய்சியாளர்கள் வெளியிட்ட அறிக்கையில், “ 2012 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை மத்திய கிழக்குஐரோப்பா, தென் கொரியா மற்றும் அமெரிக்க நாடுகளில் 1300 மேற்பட்டோர் பாதிக்கபட்டுளனர். 400 க்கும்மேற்பட்டோர்கள்  உயிரிழந்திருக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளனர்.

இந்த தடுப்பூசியை கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர் அணிக்கு தலைமை வகித்தவர், அமெரிக்க வாழ்  தமிழரான கருப்பையா முத்துமணி  ஆவார்.

இவர் பிலடெல்பிய பல்கலைகழகத்தின் நோயியல் மற்றும் ஆய்வக மருத்துவத்திற்கான உதவி பேராசிரியராக பணியாற்றுகிறார்.

கொடிய நோயான மெர்ஸூக்கு தடுப்பூசி கண்டுபிடித்த அணியின் தலைவராக தமிழர் இருந்திருப்பது நமக்கெல்லாம் பெருமை அல்லவா?

கருப்பையா முத்துமணியை வாழ்த்துவோம்!