snow storm
வாஷிங்டன்:
அமெரிக்காவை வரலாறு காணாத கடுமையான பனிப் புயல் தாக்கி வருகிறது.
அமெரிக்காவில் நேற்று முதல் கடுமையான பனிப் புயல் வீசி வருகிறது. குறிப்பாக மத்திய அட்லான்டிக் மண்டலத்தில் 3 அடி உயரத்துக்கு பனிக் பொழிவு இருந்துள்ளது.
அதேபோல் அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன்னிலும் வரலாறு காணாத பனிப் பொழிவு கிழக்கு கடற்கரை பகுதியை நோக்கி மையம் கொண்டுள்ளது. மதிய நேரத்திலேயே நகர் முழுவதும் பனிப் போர்வை போர்த்தியது போல் புயலின் தாக்கம் உள்ளது. அர்கான்சாஸ், டென்னிசி ஆகிய இடங்களில் பனிப் பொழிவில் சிக்கி கார்கள் மோதிக் கொண்டன. இதில் 6 பேர் இறந்துள்ளனர்.
2 முதல் 3 அடி வரை உயரம் வரை அனைத்து இடங்களில் பனிக் கட்டிகள் கொட்டி கிடக்கிறது. மணிக்கு 30 முதல் 50 மைல் வேகத்தில் பனி கலந்த காற்று வீசுகிறது என தேசிய வானிலை மையம் அறிவித்துள்ளது. பிலதேல்பியா மற்றும் நியூயார்கில் பனிப் புயல் ஓய்வதற்குள் 12 முதல் 18 அங்குளம் பனிப் பொழிவு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தலைநகரில் இருந்து 13 கி.மீ., தொலைவில் உள்ள விர்ஜினா தேவாலயத்தில்  மிகப் பெரிய பனிக் கட்டி விழுந்து அங்குள்ள சாலையை அடைத்துள்ளது. 20 மாநிலங்களை சேர்ந்த 85 மில்லியன் மக்களுக்கு பனிப் புல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் மட்டும் 7,100 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் 7 ஆயிரம் விமானங்கள் தாமதமாக இயக்கப்படுகிறது. நாட்டில் உள்ள அனைத்து விமானநிலையங்களிலும் இதே போன்ற நிலை தான நீடிக்கிறது. ஏற்கனவே கடந்த 2010ம் ஆண்டு 1.8 அங்குள பனிப்பபொழிவு வாஷிங்டன்னில் இருந்துள்ளது. தற்போது 28 அங்குளம் வரை இருக்கும் எனத் தெரிகிறது