ஹென்றி வொர்ஸ்லே
ஹென்றி வொர்ஸ்லே

 

லண்டன்: இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் மூத்த துருவ பயணி ஹென்றி வொர்ஸ்லே. 55 வயத £ன இவர் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி. இவர் ஒரு சாதனை முயற்சியாக அன்டார்டிகா  கண்டத்தை தனி ஆளாக கடக்க முடிவு செய்தார்.
யாருடைய ஆதரவும், உதவியும் இல்லாமல் தன்னந்தனியாக கடும் பணி, கடும் குளிர் நிறைந்த இந்த ஆபத்தான பயணத்தை மேற்கொள்ள ஹென்றி துணிச்சலாக இந்த முடிவை எடுத்தது பலருக்கும் ஆச்சர்யத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியது.
மறைந்த மூத்த துருவ பயணியான எர்னஸ்ட் சேக்கல்டன் கண்டுபிடித்த பாதையை தனது பயணத்துக்காக இவர் தேர்வு செய்தார். கடந்த நவம்பர் மாதம் இவர் இந்த பயணத்தை தொடங்கினார்.  மொத்தம்  71 நாட்களில் 913 மைல் தூரத்தை இவர் கடந்திருந்தார். இவரது சாதனையை முடிக்க இன்னும் 30  மைல் தூரம் மட்டுமே இருந்தது.
இந்த சமயத்தில் தான் அவரிடம் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஒரு சோக செய்தி வ ந்தது. ‘‘எனது உடல் நிலை மிகவம் மோசமடைந்துவிட்டது. அதனால் எனது சாதனை பயணத்தை  முடித்துக் கொள்வதாக அறிவிக்கிறேன்’’ என தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து அன்டார்டிகாக போக்குவரத்து மற்றும் தளவாட பயண அலுவலர்கள் வான் வழியாக சென்று ஹென்றியை மீட்டு  அவர்களது யூனியன் கிளேசியர் தளத்துக்கு அழைத்து வந்தனர். பின்னர் சிலே புன்டா அரேன £ஸில் உள்ள கிலினிகா மேகாலேன்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரது உடல்  உறுப்புகள் செயலிழந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் உயிரிழந்தார்.
அன்டார்டிகா துருவ பயணத்தின் நூற்றாண்டு விழாவை கொண்டாடவுள்ள சமயத்தில் இது போன்ற சோகம்  நடந்துள்ளது என் துருவ பயணிகள் பலரும் கவலையடைந்துள்ளனர்.
இவரது மரணத்துக்கு மூத்த துருவ பயணிகள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். முன்னாள் ராணுவ வீரர்களின் குடும்ப நலனுக்காக இவர் ஒரு லட்சத்து 42 ஆயிரம் டாலர்  சேகரித்து ‘என்டவர்’ நிதிக்கு’ நன்கெ £டையாக வழங்கியிருந்தார்.
அன்டார்டிகாவில் 15 முறை பயணம் செய்த அமெரிக்க துருவ பயணி டவுக் ஸ்டவுப்  கூறுகையில்,‘‘எங்களது தலைமுறையின் சிறந்த துருவ பயணி அவர். மனித நேயம் மிக்கிவர்.  அவர் மேற்கொண்ட பயணம் மிகவும் ஆபத்தானது. எனினும் அவரது அனுபவம் அவரது  பயணத்துக்கு துணை நிற்கும் என்று கருதினோம். ஆனால் இந்த பயணம் துரதிர்ஷ்டவசமாக  முடிந்துவிட்டது’’ என்றார்.
முன்னதாக ஹென்றி தனது சாதனை பயணத்தை துவக்கும் முன் கூறுகையில், ‘‘எனது முந்தைய பயணத்தில் ஒரு  குழுவினரில் அங்கமாகவே நான் இருந்தேன். ஆனால் என்னுடைய இந்த தனிமை பயணத்தில்  அனைத்து முடிவுகளையும் நானே எடுப்பேன்’’ என்றார்.
‘‘ ஹென்றி வொர்ஸ்லேயில் மரணம் எனது இதயம் உடைந்து போகும் அளவுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது’’ என்று அவரது மனைவி ஜோன்னா தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து இளவரசர் வில்லியம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,‘‘ ஹென்றி வொர்ஸ்லேயின் இழப்பை அறிந்து நான் மிகவும் கவலை அடைந்துள்ளேன். தைரியமும், உறுதிப்பாடும் மிக்க அந்த மனிதரோடு இணைந்து இருந்தது எனக்கு பெருமையாக உள்ளது.
ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற பிறகும், துருவ பயணங்களின் மூலம் ராணுவத்தினரின் குடும்பத்திற்கு சுயநலம் இல்லாமல் பல சேவை புரிந்தார். எனது நண்பரை இழந்துள்ளேன். எனினும் அவரை முன்னுதாரணமாக கொண்டு அவரது சேவைகள் தொடரும் வகையில் செயல்படுவோம். பயணத்தின் போது எனக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்தை எனது அரண்மனைக்கு ஹென்றி அனுப்பியிருந்தார்’’ என்றார்.