கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் இழப்பீடுக்கு விண்ணப்பிக்கும் முறை

Must read

சென்னை:
கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 50,000 இழப்பீடு பெற  விண்ணப்பிக்கும் முறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் சார்பில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வாரிசு தாரர்களுக்கு ₹50,000 நிதி உதவி வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வாரிசுதாரர்கள் அரசின் இழப்பீட்டு  உதவித் தொகை பெறுவதை எளிமையாக்கும் வகையில் http:www.tn.gov.in என்னும் இணையத்தளத்தில் what’s new என்ற பகுதியில் Ex-Gratia for Covid-19 என்ற இணைப்பைத் தேர்வு செய்து இணையம் மூலம் விண்ணப்பம் செய்து உதவித்தொகையைப் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More articles

Latest article