₹200 நோட்டுகள் ஏ.டி.எம்.களுக்கு வர இன்னும் 3 மாதங்கள் ஆகும் – ரிசர்வ் வங்கி

Must read

புதிய 200 ரூபாய் நோட்டுக்கள் ஏ.டி.எம். களுக்கு வர இன்னும் மூன்ற மாதங்கள் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூபாய் நோட்டு மதிப்பு நீக்க நடவடிக்கையைத் தொடர்ந்து பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக, புதிய 2000 ரூபாய் நோட்டுகள் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டன. அதைத் தொடர்ந்து 50 ரூபாய் நோட்டும் வெளியாகும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் புதிய 200 ரூபாய்நோட்டை அறிமுகப்படுத்தும் அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. இந்த நோட்டுக்கள் ஆகஸ்ட் 25ம் தேதி முதல் அறிமுகமாகும் என்றும் கூறப்பட்டது. இதையடுத்து ரூ. 200 நோட்டும் புழக்கத்துக்கு வந்தது.

இந்நிலையில், புதிய 200 ரூபாய் நோட்டுக்கள்  ஏ.டி.எம்.களுக்கு வர இன்னும் மூன்று மாதங்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

More articles

Latest article