
ஸ்ரீநகர்,
ஸ்ரீநகர் என்.ஐ.டி.யில் இருந்து 2,000 வெளிமாநில மாணவர்கள் சொந்த ஊருக்கு திரும்பி சென்றனர். அவர்கள் திரும்பி வருவார்கள் என்று பதிவாளர் தகவல் தெரிவித்து உள்ளார்.
ஸ்ரீநகர் என்.ஐ.டி.யில் பதட்டமான நிலை ஏற்பட்டதை தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் போலீஸ் மற்றும் மத்திய துணை ராணுவப்படை காவலில் ஈடுபட்டு உள்ளது. இதற்கிடையே வெளிமாநில மாணவர்கள் சாரசாரையாக கல்லூரியை விட்டுவெளிக் கொண்டு இருக்கின்றனர்.
சில மீட்டர் தூரத்தில் காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த உள்ளூர் மாணவர்கள் தங்களுடைய தேர்வை அமைதியான சூழ்நிலையில் எழுதிவருகின்றனர். வளாகத்தில் நடைபெறும் பரபரப்பான நடவடிக்கைகளை கருத்தில் கொள்ளாமல் அவர்கள் தங்களுடைய தேர்வை எழுதி வருகின்றனர். 2500 மாணவர்களில் சுமார் 30 சதவித மாணவர்களே நேற்றைய தேர்வில் கலந்துக் கொண்டனர். பிற மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்து உள்ளனர். அவர்கள் வீட்டிற்கு செல்ல தயார் ஆனார்கள்.
பின்னர் 2-வது முறை நடைபெறும் தேர்தலில் கலந்துக் கொள்ள அவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. ஸ்ரீநகர் என்.ஐ.டி.யில் சுமார் 2700 மாணவர்கள் பல்வேறு பிரிவுகளில் படித்து வருகின்றனர். அவர்களில் 30 சதவித பேர் காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவார்.
மாணவர்கள் தங்களுடைய வீட்டிற்கு சென்றுவிட்டால் அவர்கள் வரும் நாட்களில் நடைபெறும் தனிதேர்வில் கலந்துக் கொள்ளலாம் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. வெளிமாநிலத்தை சேர்ந்த மாணவர் ராகுல் பேசுகையில், “எங்களுடைய கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படாத நிலையில் வெளிமாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் தேர்வை புறக்கணிக்க முடிவு எடுத்து உள்ளோம். அனைத்து வெளிமாநில மாணவர்களும் வீட்டிற்கு திரும்ப முடிவு எடுத்து உள்ளோம். சுமார் 1,500 – 2000 மாணவர்கள் தங்களுடைய வீட்டிற்கு புறப்பட்டு சென்றுக் கொண்டு இறுக்கிறார்கள். எங்களுக்கு தேர்வு பின்னர் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது,” என்று கூறிஉள்ளார்.
தேர்வுக்கு முன்னதாக வீட்டிற்கு செல்ல சுமார் 1200 மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர் என்று என்.ஐ.டி. தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வெளிமாநிலங்களை சேர்ந்த சுமார் 500 மாணவர்கள் நேற்று மாலையில் வளாகத்தைவிட்டு வெளியேறிவிட்டனர். காயம் அடைந்த இரண்டு மாணவர்கள் வான்வழியாக தங்களுடைய வீட்டிற்கு செல்வதற்கு என்.ஐ.டி. ஏற்பாடு செய்துக் கொடுத்து உள்ளது. என்.ஐ.டி. பதிவாளரும், விரிவுரையாளருமான பயாஸ் அகமது மிர் பேசுகையில்,
“அனைத்து மாணவர்களுக்கும் தேர்வு என்பது கட்டாயமானது. ஒவ்வொரு செமஸ்டரிலும் நடைபெறும் மூன்று தேர்வுகளில் முதன்மையானது. சுமார் 2,500 மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் சுமார் 30 சதவித மாணவர்களே தேர்வுக்கு வந்தனர். தேர்வில் கலந்துக் கொள்ளாத மாணவர்கள் இரண்டாவது வாய்ப்பை தேர்வு செய்து இருப்பார்கள்,” என்று கூறிஉள்ளார். ஊர் சென்றுவிட்டு மாணவர்கள் திரும்பியதும் 2-வது தேர்வு நடைபெறும் என்று குறிப்பிட்டு உள்ளார்.
வெளிமாநில மாணவர்கள் தங்களுடைய நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளனர். “என்.ஐ.டி. இங்கிருந்து மற்றொரு பகுதிக்கு மாற்ற வேண்டும். நிர்வாகம் மற்றும் தடியடி நடத்திய போலீஸ் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற எங்களுடைய நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம், எங்களுடைய கோரிக்கை எதுவும் ஏற்கப்படவில்லை.” என்று ராகுல் கூறிஉள்ளார்.
Patrikai.com official YouTube Channel