wifi_router
ம்ப்யூட்டர், இண்டர்நெட் இன்றைய நவீன வாழ்வின் அத்தியாவசியத் தேவைகள். அதுவும் இணையதளங்களில் உலவுவதற்கு  தங்கு தடை ஏதுமில்லாத இண்டர் நெட் இணைப்பு அவசியம்.  எவ்விதக் கேபிள்களும் இல்லாமல் அதிவேகமாய் இண்டர்நெட் உலகை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துபவைதான் வை- பை இணைப்புகள்.
ஒரு வை-பை தொடர்பிலிருந்து பலரும் பல இணைப்புகளைப் பெறமுடியும். அதற்கு ரௌட்டர் என்ற சாதனம் பயன்படுத்தப்படுகிறது. இந்த ரௌட்டரை வீட்டின் எந்தப் பகுதியில் வைத்தால் சிக்னல்கள் என்று சொல்லக்கூடிய ரேடியொ அலைவரிசைகள் தங்கு தடையின்றி கிடைக்கும் என்பதை லண்டன் இயற்பியலாளர் கண்டுபிடித்துள்ளார்.
ஒரு ரௌட்டரிலிருந்து மிகத்துல்லியமான சிக்னல்களைப் பெற வேண்டுமானால் அச்சாதனத்தைப் பொருத்துகின்ற இடம் மிகவும் முக்கியமானது. இதில் இயற்பியலைவிட கணக்கின் பங்கு முக்கியமானது என்கிறார் .இந்த ஆய்வில் ஈடுபட்ட லண்டன் இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த  ஜாசன் கோல்.
ஒரு ரௌட்டரிலிருந்து வெளிவரும் சிக்னல்கள் அறையின் சுவர்களினால் தடுப்புகள் ஏற்பட்டு சிக்னலின் வலிமை குறைவதை  அவர் கண்டுபிடித்துள்ளார். இதற்காக ஒரு வீட்டின் பல பகுதிகளில் ரௌட்டரை அமைத்து சிக்னலின் வலிமையை பரிசோதித்துள்ளார். இறுதியில் எவீட்டின் நடுப்பகுதியில் ரௌட்டரை அமைக்கும்போதுதான்  ரேடியோ அலைகளில் எவ்வித தடைகளும் இன்றி சீரான அளவில் கிடைப்பதாக கண்டறிந்துள்ளார்.
வை-பை ரேடியோ அலைகள் ஆபத்தானாதா?
வை- பை ரேடியோ அலைகள் ஆபத்தானவை என்ற கருத்து நிலவுகிறது. ஆனால், இதிலிருந்து வெளிவரும் ரேடியோ அலைகள் மிகமிக குறைவான வீரியத்தை கொண்டவைகளே. இந்த வை-பை ரேடியோ அலைவரிசை என்பது வீடுகளில் பயன்படுத்தப்படும் மைக்ரோ ஓவனிலிருந்து வெளிவரும் அலைவரிசை தாக்கத்தை விட 1 லட்சம் மடங்கு குறைவானது.
இதிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சு என்பது நாம் வழக்கமாக பயன்படுத்தும் சாதனங்களிருந்து  வெளிவருவதற்கு ஈடானதுதான்.
வை-பை கதிர்வீச்சு தொடர்பும் உடல் நலப் பாதிப்பும் குறித்த ஆய்வை உலக சுகாதார அமைப்பு நடத்தி உள்ளது. அதில் உடல் நலனுக்கு எவ்விதப் பாதிப்புகள் ஏற்படும் என ஆய்வு செய்யப்பட்ட்தில் ஒரு ரௌட்டரிலிருந்து வெளிவரும் சிக்னல் என்பது 20 நிமிட செல்போன் உரையாடலின்போது வெளிப்படும் கதிர்வீச்சுக்கு இணையானது என தெரிவித்துள்ளது.