2

வைகோ தம்பியின் காயம்

 ந்தப்படத்தைப் பாருங்கள்…

கடந்த சில மாதங்களுக்கு முன்னர்,தமிழ்நாட்டின் ஒரு கிராமத்தில் ஆண்-பெண் இரு பாலர்கள் படிக்கும் பள்ளிக்குச் செல்லும் வழியில் இருந்த சாராயக் கடையை அகற்றக் கோரி ஊர்மக்கள் திரண்டு நடத்திய அறவழி ஆர்ப்பாட்டத்தில்-காவல்துறையின் தாக்குதலில் படு காயமடைந்த அக்கிராம பஞ்சாயத்து தலைவரின் புகைப்படம் தான் இது.

நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் தாக்கப்பட்டார்,அடிக்கப்பட்டார்,நொறுக்கப்பட்டார்-என்று ஓயாது ஒப்பாரி வைத்ததோடு,தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த வகையிலும் உதவாத அந்த நிகழ்வை நேரடி ஒளிபரப்பு வேறு செய்த தமிழக ஊடகங்களில் எத்தனை ஊடகங்கள்,சமுதாயத்தை சீரழிக்கும் டாஸ்மாக் சாராயக் கடைக்கு எதிரான போராட்டங்களை வெளியிட்டன?

மக்களோடு மக்களாக களத்தில் நின்று தாக்குதலுக்கு ஆளான-அந்தப் பஞ்சாயத்து தலைவர் பெயர்: வை.ரவிச்சந்திரன்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வின் உடன்பிறந்த தம்பி.

    1 G Durai Mohanaraju   https://www.facebook.com/durai.mohanraj.9?fref=photo