" வைகோ இதுவரை காசு வாங்கவில்லை என சத்தியம் செய்ய தாயாரா?"- சந்திரகுமார் கேள்வி

Must read

12991001_10153759463718303_3210474077586302769_n
 
தே.மு.தி.கவில் இருந்து நீக்கப்பட்ட சந்திரகுமார் மறுமலர்ச்சி தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற புதிய கட்சியை துவக்கியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியபோது, “தே.மு.தி.க. தொண்டர்கள் எங்கள் பின்னால் அணிவகுத்துவிட்டார்கள். நாங்கள்தான் உண்மையான தே.மு.தி.க” என்றார்.
மேலும் அவர் பேசியபோது, “நீ எங்கு போனாலும் நாங்கள் முற்றுகையிடுவோம்
நீ எங்களை விமர்சிக்க என்ன தகுதி இருக்கு உன்னை தலைவனாக ஏற்று கொண்டோமா
நாங்கள் தனியா குடித்தனம் வந்துட்டோம் எங்களை பற்றி எங்கள் கட்சி கேட்கட்டும் நாங்கள் பதில் சொல்கிறோம் நீ யாருய்யா எங்களை கேட்பது.
வைகோ மறுமகன் 450 கோடி ரூபாய் ஒரு நிறுவனத்தில் வாங்கியுள்ளார் பார்த்திபன் சொல்கிறார். மூன்று எனது மற்றும் என்  குடும்ப சொத்துக்களின் கணக்கை கொடுக்கிறேன் அதே போல் வைகோ அரசியலில் நுழைந்தது முதல் இன்று வரை சொத்துக்கணக்கை கொடுக்க தயாரா?
கிட்டத்தட்ட 86 கோடி ரூபாய் சொத்து பதிவு செய்யப்பட்டுள்ளது எப்படி வந்தது. நாங்கள் அமைதியாக இருக்கிறோம். இனியும் பேசினால் இப்போது சொன்னதை ஆதாராமாக கூறுவோம்.
இது சாம்பிள் தான் இனியும் பேசினால் சிங்கப்பூரில் என்ன நடந்தது, மும்பையில் என்ன நடந்தது, பெங்களூருவில் என்ன நடந்தது என எல்லாவற்றையும் வெளியிட வேண்டி வரும் அத்தனை கதை இருக்கிறது.  அதனால் வாயை மூடிக்கொண்டு அமைதியாக இருங்கள், நாங்கள் தனியாக கட்சி ஆரம்பித்துவிட்டோம் நாங்கள் எங்கள் வேலையை பார்க்கிறோம்.” என்று சந்திரகுமார்  ஆவேசமாக பேசினார்.
 
 

More articles

Latest article