Jpeg
Jpeg

சென்னை:

வெள்ள நீரில் மூழ்கிய காரை உடனடியாக இயக்கினால் காப்பீட்டு தொகை பெற முடியாது என்ற தகவல் வெளியாகியுள்ளது கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத வகையில் பெய்த மோசமான மழையால் சென்னையில் பேரழிவில் சிக்கியுள்ளது. பல பகுதிகளில் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. சில பகுதிகளில் வீடுகளின் முதல் தளம் வரை நீர் தேங்கியது. வெள்ள நீரில் பல கார்கள் முழுமையாக மூழ்கி மிதந்து கெ £ண்டிருக்கிறது. மேலும் சாலைகளில் ஏற்பட்ட பள்ளம், தேங்கியுள்ள மழை நீரில் பல கார்கள் செயலிழந்து சிக்கியுள்ளது. இந்த சமயத்தில் சேதமடைந்த கார்களுக்கான காப்பீடு பெற தாங்கள் தகுதியுள்ளவரா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள மறக்க வேண்டாம்.

முன்னதாக இந்த ஆண்டில் மழை காலத்திற்கு ஐசிஐசிடு லாம்பர்டு ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் ஒரு அறிவுரை வழங்கியிருந்தது. ‘‘ நீர் தேங்கியுள்ள பகுதிகளில் கார்களை ஓட்டிச் செல்வதை தவிர்க்க வேண்டும். நீரில் மூழ்கிய வ £கனங்களை தள்ளியோ அல்லது வேறு வழியிலோ உடனடியாக இயக்க முயற்சிக்க வேண்டாம். ஒரு முறை முயற்சித்தால் கூட அது இன்ஜினில் பெரும் சேதாரத்தை ஏற்படுத்தும்’’. எஸ்எம்எஸ் மூலம் இந்த அறிவுரை அளிக்கப்பட்டது.

இதேபோல் ‘‘மழை, புயல் போன்றவற்றால் வெள்ளப் பெருக்கும் ஏற்படும் சூழ்நிலையில் கூடுதல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வாடிக்கையாளரின் இழப்பை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆலோசகர்கள் மூலம் எஸ்எம்எஸ், ஃஎப்எம் ரேடியோ, துண்டு பிரசுரங்கள், ஏஜென்சிகள் மூலம் ஆண்டுதோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது’’ என பஜாஜ் அலையான்ஸ் இன்சூரன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

காப்பீட்டாளரின் இழப்பீட்டு அளவை குறைப்பதற்காகவே இத்தகைய ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. தனியார் இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதவாது: தேங்கியுள்ள வெள்ள நீரில் முதல் அல்லது இரண்டாவது கியரில் கிளட்சை பயன்படுத்தாமல் வாகனத்தை இயக்க வேண்டும். வெள்ள நீரில் முழுமையாக சிக்கிக் கொண்டுவிட்டால் தொடர்ந்து இன்ஜினை இயக்க கூடாது. இதன் பிறகு காரை தள்ளிக் கொண்டோ அல்லது இழுத்துக் (டோவ்) செய்து கொண்டு பணிமனைக்கு கொண்டுச் செல்ல வேண்டும். உடனடியாக பேட்டரி இணைப்பை துண்டிக்க வேண்டும். பணிமனையில் துரு பிடிப்பதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேவைப்பட்டால் ஆயிலை மாற்ற வேண்டும். வெள்ள நீர் புகுந்ததால் பிரேக் ஒயர்கள், டிஸ்க் போன்றவை பாதித்திருக்கும். அதனால் பிரேக்கை பரிசோதனை செய்ய வேண்டும். அடுத்து சேதாரத்திற்கான அதிக வாய்ப்புள்ள ரேடியேட்டரை பரிசோதனை செய்ய வேண்டும். பயணிகள் இருக்கும் பகுதிக்குள் வெள்ள நீர் புகுந்துவிட்ட பிறகு வாகனத்தின் சாவி செயல்பாட்டில் இல்லாமல் செய்ய வேண்டும். இன்ஜின் இயங்கவில்லை என்றாலும் சாவி ஆன் செய்யப்பட்டிருந்தால் மின்சார கசிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

அதோடு சுத்தியல் அல்லது கல் ஒன்றை கார் உரிமையாளர்கள் தயாராக வைத்திருக்க வேண்டும். ஒரு வேளை கார் கதவு பூட்டு திறக்க முடியவில்லை என்றால் கண்ணாடியை உடைக்க பயன்படுத்தலாம். பாலிசி எடுத்தவர் நீர் தேங்கிய சாலையில் காரை இயக்கியிருந்தாலோ, நீர் இன்ஜினில் புகுந்தவுடன் காரை இயக்கியிருந்தாலோ காப்பீட்டு தொகை பெருவதில் சிக்கல் ஏற்படும். இதன் மூலம் இன்ஜினில் ஏற்படும் சேதாரத்திற்கு இழப்பீடு பெற இயலாது. மற்ற பாதிப்புகளுக்கு மட்டுமே இழப்பீடு பெற முடியும். வழக்கமாக உள்ள கார் இன்சூரன்ஸ் பாலிசிகள் மூலம் வெள்ள நீரால் ஏற்படும் இழப்புகளுக்கு இழப்பீடு பெற முடியாது.

இந்த பாலிசியோடு, பருவ நிலைக்கு ஏற்ப கூடுதல் திட்டங்களை பாலிசியில் இணைத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் வெள்ளம் அல்லது விபத்து ஏற்பட்டு கார் நிற்கும் சாலையிலேயே வாரம் முழுவதும் 24 மணி நேரமும் உதவிகள் கிடைக்கும்