Tamilnadu bomb threat
 
நேற்று, சென்னை பள்ளி ஒன்றில் குண்டு வெடிக்கப்போவதாக வந்த வதந்தியை அடுத்து பெரும் பதட்டம் ஏற்பட்டது. இது போன்ற சூழலில் பள்ள நிர்வாகம் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து, சிறப்பான பதிவொன்றை முகநூலில் எழுதியிருக்கிறார் விகாரந்த். அவரது பதிவு..
“சென்னை கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்து, அந்த பகுதியே அல்லோலபட்டது… காவல்துறையும் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்களும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். என்ன செய்வதென்று அறியாத பள்ளிகளும் மாணவர்களை வெளியே அனுப்பிவிட்டார்கள். செய்தி அனைவருக்கும் பரவ.. பெற்றோர்கள் பதறியடித்துக்கொண்டு பள்ளிகளுக்கு படையெடுத்தனர்.
சிறிது நேரத்துக்கு பிறகு நிலைமை கட்டுக்குள் வந்து, வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்று தெரியவந்தது…
அனால் பள்ளிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட குழந்தைகள் எங்கே செல்வது என்று தெரியாமல் தவித்து நின்றதுதான் பரிதாபம். அவர்களிடம் பணம் கிடையாது. அலைபேசி கிடையாது. எப்படி பெற்றோர்களை தொடர்புகொள்வார்கள் ?
செய்தியை கேள்விப்பட்டு பள்ளிகளுக்கு தொடர்புகொண்ட பெற்றோர்களுக்கு பீப் ஒலியே கிடைத்த செய்தி … தன் குழந்தைகளை தேடி வந்த பெற்றோர்களுக்கும் சரியான தகவல் கொடுக்க பள்ளிகளில் ஆள் கிடையாது.
பள்ளிகளில் மாணவர்களுக்கு Emergency Preparedness எனும் அவசரகால தயார்நிலை பற்றி அறவே தெரியாது… சொல்லி கொடுத்திருந்தால்தானே தெரிய.. Evacuation என்கிற முறையான வெளியேற்ற நடவடிக்கையும் தெரியாத ஆசிரியர்களை கொண்ட பள்ளிகள்.
எந்நேரமும் தங்கள் குழந்தையின் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில்தான் அரசாங்கம் இன்னும் அவர்களை வைத்திருக்கிறது என்பதை அறியாத பெற்றோர்கள்.
நிலநடுக்கம் வந்த என்ன செய்யணும்… நாம் இருக்கும் கட்டிடம் தீப்பற்றி எரிந்தால் என்ன செய்யணும்.. தீவிரவாத தாக்குதலை சமாளிப்பது எப்படி.. எப்படி… பாதுகாப்பாக ஒரு கட்டிடத்தை விட்டு வெளியேறுவது எவ்வாறு.. முதலுதவி செய்வது எப்படி.. மற்ற விபத்துகள் ஏற்பட்டால் எப்படி எதிர்கொள்ளுவது, உடனிருப்பவர்களை எவ்வாறு காப்பாற்றுவது.. என்று எதையும் பழக்காமல்… பிறந்த உடனே தன் மதத்தை குழந்தைகள் மேல் திணிப்பதில் இங்கு பெரும்பாலான பெற்றோர்களுக்கு குறி..
லட்சகணக்கில் பணத்தை வாங்கி குவிக்கும் பணக்கார பள்ளிகளில் கூட இந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லை. (Safety precaution measures).
குழந்தைகளுக்கு அறிவுக்கு ஒவ்வாத கடவுளர் புராணங்களை சொல்லிகொடுப்பதை விட்டுவிட்டு அவர்களின் உயிரை பாதுகாக்கும் முறைகளை கற்றுகொடுங்கள்.
முகம் தெரியாத நபர் ஒருவனால் ஒரு ரூபாய் செலவு செய்து இங்கு ஒரு லட்சம் பேரை பதட்டமடைய செய்ய வைக்க முடியும் என்பதற்கு காரணம் நம் அறியாமையே. போதுமான கல்வியறிவை வைத்துக்கொண்டு இன்னும் அறியாமையில் தவிப்பது நம் சமூகத்தின் குறைபாடே.
குழந்தைகளுக்கு நிலநடுக்கத்தை சமாளிக்க Drop Cover Hold முறையை சொல்லிகொடுங்கள்… தீ விபத்தின் போது Fire Extinguishers இயக்குவது எப்படி என்று பழக்குங்கள், Fire Exit எதற்கு என்று புரியவையுங்கள், Assembly point ல் பாதுகாப்பாக கூடுவது பற்றி விளக்குங்கள். Crisis அதாவது நெருக்கடி நிலையை எப்படி சமாளிப்பது என்று அறிய தாருங்கள். Evacuation Drill எதற்கு முக்கியம் என்று சொல்லுங்கள். முதலுதவி (First Aid) செய்ய கற்றுகொடுங்கள். ஆபத்தின் போது மற்றவர்களுக்கு உதவும் முறைகளை பற்றி பயிற்சியளியுங்கள்.
மாறி வரும் சமூக சூழலில் தன்னை மேம்படுத்திக்கொள்ளாத எந்த மனித சமூகமும் அழிவின் பாதையிலேயே பயணிக்கும்.”