வீடு இல்லாத பெண்ணுக்கு தெருவில் நடந்த பிரசவம்: புதுடெல்லியில் நடந்த பரிதாபம்

Must read

புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் ஒரு  நடந்தது.
இது குறித்த விவரம் வருமாறு:
ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பப்லுவும், அவரது மனைவி லஷ்மியும் தினக் கூலிகள்.

இவர்கள் தங்களது 2 குழந்தைகளுடன் 7 ஆண்டுகளாக நடைபாதையில் தான் வசித்து வருகின்றனர். கடந்த புதனன்று நடைபாதையில் இடம் இல்லாததால், கர்ப்பிணியான 34 வயது லஷ்மி, தன் குடும்பத்தாருடன் தெருவில் உறங்கினார்.

நள்ளிரவு பிரசவ வலி ஏற்பட்டு துடித்தார். அப்போது அங்கிருந்தவர்கள் உதவியுடன் பிரசவம் பார்க்கப்பட்டு குழந்தை பிறந்தது.
குழந்தை பிறந்து 18 மணிநேரமாகியும் தொப்புள் கொடி அகற்றப்படவில்லை. இது தாய் மற்றும் சேய் ஆகியோருக்கு ஆபத்து என்பதால், அருகிலிருந்த மருத்துவமனைக்கு சிலர் தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த அவர்கள் தாயையும் குழந்தையையும் மருத்துவமனையில் அனுமதித்து தொப்புள் கொடியை பிரித்து எடுத்தனர். இருவரும் தற்போது காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

உத்திரப்பிரதேசத்தில் மாடுகள் தங்குவதற்கும் ஓய்வு எடுப்பதற்கும்கூட தனி இட வசதி செய்து தரப்பட்டுள்ளது. என்ன கொடுமை இது ? இந்த பாவப்பட்ட மனிதர்களுக்கு தெருவே முகவரி. நடைபாதையே வாழ்க்கை.

More articles

Latest article