விழுப்புரம் மாவட்டத்தில் தி.மு.க வெல்லுமா? இப்படியும் ஒரு கணக்கு!

Must read

images
 
தேர்தல் வந்துவிட்டால்  செல்வாக்கு, செல்வம், சாதி.. என எல்லா கணக்குகளும் ஆராயப்படும்.
அப்படி ஒரு சாதிக்கணக்கு போட்டுக்கொண்டிருக்கிறார்கள் விழுப்புரம் மாவட்டத்தில்.
பொதுவாகவே மேற்கு மாவட்டத்தில், வன்னிய இனத்தைச் சேர்ந்தவர்களுக்குத்தான் அதிகமான வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக விழுப்புரத்தில் ஏழு தொகுதிகளில் வன்னிய இனத்தவர் நிறுத்தப்பட்டுள்ளனர். ஆனால் தி.மு.க. தரப்பில் இரண்டு தொகுதிகளில் மட்டுமே இந்த இன வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
கணிசமான வன்னிய இன மக்கள் வாழும் இம் மாவட்டத்தில், இது தி.மு.கவுக்கு மைனஸ் என்று ஒரு பேச்சு உலவுகிறது.
அதே நேரம் தி.மு.க தரப்பில் இப்படிச் சொல்கிறார்கள்: : “தேர்தலில் சாதியும் ஒரு முக்கிய விசமாக இருக்கும்தான். ஆனால் சாதி மட்டுமே முக்கியம் அல்ல. வெற்றிக்கு பல காரணங்கள் இருக்கின்றன.
விழுப்புரம் மாவட்டத்தில் வன்னியர் நின்றால் வெற்றி என்றால், பா.ம.தானே வெற்றி பெற வேண்டும். அது நடக்கப்போவதில்லையே. ஆகவே சரியான வேட்பாளர்களைத்தான் தலைமை நிறுத்தியிருக்கிறது” என்கிறார்கள் நம்பிக்கையுடன்.

  • ஏ. அசோக்

More articles

Latest article