pppppppppppppppppp

 

ன்னட எழுத்தாளர் கால்புர்கி கொலை மற்றும் தாத்ரியில் மாட்டுக்கறி உண்டதாக ஒருவர் கொலை செய்யப்பட்டது ஆகிய சம்பவங்களைக் கண்டித்து, இந்தியா முழுவதுமுள்ள படைப்பாளிகள் தங்களது கண்டனத்தைத் தெரிவித்து வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக சாகித்ய அகடமி விருது பெற்ற படைப்பாளிகள், அந்த விருதை  திருப்பி அளித்து வருகிறார்கள்.

பிரபல ஆங்கில கவிஞர் கேகி என்.தருவல்லா, ராஜஸ்தானி மற்றும் இந்தி இலக்கியவாதி நந்து பரத்வாஜ், கன்னட எழுத்தாளர்கள் வீரபத்ரப்பா, கே.நீலா, ஆர்.கே.குடுகி மற்றும் காசிநாத் அம்பால்கி  உட்பட பலர் இதில் அடங்குவர்.

“ஆனால்   விருது பெற்ற தமிழக படைப்பாளிகள் யாரும் விருதை திருப்பி அனுப்பவில்லையே” என்ற ஆதங்கக் குரலையும் பலர் எழுப்பி வருகிறார்கள்.

இந்த நிலையில், “விருது என்பது வாள் போன்றது. சமூக நீதிக்கான போராட்டத்துக்கு விருது அவசியம்” என்று வைரமுத்து பேசினார்.  இதற்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்த நிலையில், நேற்று சென்னையில்  செல்போன் கடை ஒன்றை திறந்துவைத்தார், திரைப்பட பாடலாசிரியரும் விருது பெற்றவருமான வைரமுத்து.

இதற்கான அழைப்பிதழில்,  “பத்மபூஷன் விருது பெற்ற வைரமுத்து” என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த கடை திறப்புவிழாவுக்கான போஸ்டர்கள், நாளிதழ் விளம்பரங்களிலும் “பத்மபூஷன்” இடம் பெற்றிருந்தது.

“விருதை பெற்றவர்கள் திருப்பி அனுப்பிக்கொண்டிருக்கும் வேளையில், அதை கிண்டல் செய்வது போல வைரமுத்துவின் பெயருக்கு முன்னால் விருதை குறிப்பிட்டிருக்கிறார்களே” என்று பலரும் ஆதங்கத்தைத் தெரிவித்தார்கள்.

இதற்கிடையே, “முதலில் பத்மபூஷன் என்று குறிப்பிடாமல்தான் வைரமுத்துவின் பெயர் அழைப்பிதழில் போடப்பட்டது. இதைப் பார்த்து வைரமுத்து ஆத்திரமடைந்தார். உடனடியாக வேறு அழைப்பிதழ் தயாரியுங்கள். தவிர போஸ்டர்கள், தினசரி விளம்பரங்களிலும் பத்மபூஷன் விருது  பெற்ற கவிப்பேரரசு வைரமுத்து  என்றுதான் வரவேண்டும்” என்று ஆவேசப்பட்டாராம்.

இந்த நிலையில் பால சாகித்ய அகாடமி விருது பெற்ற ரியா விதாஷாதான் நினைவுக்கு வருகிறார். 17 வயது கர்நாடக பள்ளி மாணவியான  இவர்,  கால்புர்கியில் எழுத்தாளர் கொல்லப்பட்ட  சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது விருதை திருப்பி அனுப்பினார்!