சேதுபதி, சீனு
சேதுபதி, சீனு

ஜினி நடித்து வெளியாகி சக்கைபோடு போட்ட படம் “தர்மதுரை”. இப்போது இதே பெயரில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்க, சீனுராமசாமி இயக்கத்தில் புதிய படம் உருவகிறது.

ஸ்டுடியோ 9 புரொடக்ஷன் நிறுவனத்தின் சார்பில் சலீம் வெற்றித் திரைப்படத்தை தயாரித்த RK சுரேஷ் அடுத்து உருவாக்கும் படம் இது.

படத்துக்கு முதலில் “தர்மன்” என்றுதான் இயக்குநர் பெயர் சூட்டியிருந்தார். கதைக்கு இன்னும் பொருத்தமாக “தர்மதுரை” இருக்கும் என்று அவர் ஃபீல் பண்ண.. “ ஏற்கெனவே அதே தலைப்பில் ரஜினி நடித்திருக்கிறாரே” என்று பேச்சு எழுந்திருக்கிறது.

முன்பே, ரஜினி நடித்த “மாப்பிள்ளை” உட்பட சில படங்கள் மீண்டும் வேறு நடிகர்கள் நடிப்பில் வந்திருந்தாலும் படக்குழுவினருக்கு ஒரு தயக்கம் இருந்திருக்கிறது.

மேலேசியாவில் இருக்கும் ரஜினியை மிகுந்த முயற்சிக்குப் பிறகு தொடர்புகொண்டு சொல்லியிருக்கிறார்கள்.

ரஜினி மகிழ்ச்சியான ரீயாக்ஷன் காட்டியிருக்கிறார்: “குட்.. வெரிகுட்! ஹீரோ யார்” என்று
ஆர்வத்துடன் கேட்டிருக்கிறார். “விஜய் சேதுபதி” என்று சொன்னவுடன், “ரொம்ப சந்தோஷம்! விஜய் சேதுபதி அற்புதமான நடிகர்.. அவருக்கு என் பாராட்டுக்கள்.. படம் வெற்றி அடையவும் மனமார்ந்த வாழ்த்துகள்!” என்று கூறியிருக்கிறார்.

இதைச் சொல்லி சொல்லி பூரிக்கிறது பட யூனிட்.

படத்தின் கதை என்னவாம்?

”தேனி பக்கம் கிராமத்தில் ஆரம்பிக்கும் கதை.. நகரத்தில் முடிகிறது. கிராம வாழ்க்கையையும், நகர வாழ்க்கையையும் இயல்பாகச் சொல்லும் படம். “தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மறுபடி வெல்லும்” என்பதுதான் கான்செப்ட்” என்கிறார்கள்.

பொறுத்தமான டைட்டில்தான்!