விஜயகாந்த் டெபாசிட் இழப்பது உறுதி ராமதாஸ் பேட்டி

Must read

ra11
 
உளுந்தூர்பேட்டையில் பா.ம.க.வை எதிர்த்து போட்டியிடும் விஜயகாந்த் டெபாசிட் இழப்பது உறுதி என்று டாக்டர் ராமதாஸ் பேட்டி அளித்துள்ளார்.
இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள 231 பாமக வேட்பாளர்களுக்கும் எப்படி பிரசார யுக்திகளை வகுப்பது, வாக்கு சேகரிப்பின் போது பொது மக்களை கவருவது எப்படி என்பன உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இந்த பயிற்சிக்கூட்டத்தில் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், மாநில தலைவர் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்துக்கு வந்த ராமதாஸ் நிருபர்களிடம் கூறும்போது, “உளுந்தூர்பேட்டையில் பா.ம.க.வை எதிர்த்து போட்டியிடும் விஜயகாந்த் டெபாசிட் இழப்பது உறுதி. எங்கள் கட்சிக்கு கூடுதல் பலம் சேர்க்கவே வேட்பாளரை மாற்றி புதிய வேட்பாளராக வக்கீல் பாலுவை அறிவித்து உள்ளோம்” என்றார்.

More articles

Latest article