விஜயகாந்தை வரவேற்கிறேன்! : சி.பி.எம். கட்சி எம்.எல்.ஏ. பால பாரதி

Must read

o

 சி.பி.எம். கட்சியின் எம்.எல்.ஏவான பாலபாரதி, தனது முகநூல் பக்கத்தில் “நல்லதோர் வீணை செய்தே..” என்று நேற்று ஒரு பதிவு போட்டிருந்தார்.  “மக்கள் நலக்கூட்டணியில் தே.மு.தி.க.இணைந்ததை விமர்சித்துத்தான் இப்படி எழுதிியருக்கிறார்”  என்று கருதப்பட்டது.  இது குறித்த செய்தியை நாமும் வெளியிட்டோம்.
அதோடு அவரை தொடர்பு கொண்டு பேசினோம். அதற்கு அவர்,  “தொலைக்காட்சியில் பேசிய ஒருவரை குறிப்பிட்டே அந்த பதிவை எழுதினேன்.  தவிர அந்த பதிவு நேற்று எழுதப்பட்டது. கூட்டணி அறிவிக்கப்பட்டது இன்று. பிறகு எப்படி தே.மு.தி.கவை விமர்சிப்பதாகும்” என்றார்.
மேலும், “கட்சி தொடர்பான எனது கருத்துக்களை முகநூலில் நான் எழுதுவதில்லை. எங்கள் கட்சியில் ஃபோரம் இருக்கிறது. அதில்தான் பேசுவேன்.கருத்துக்களை வெளியிடும் உரிமை எங்கள் கட்சியில் நிறையவே இருக்கிறது. பிறகு ஏன் நான் முகநூலில் எழுத வேண்டும்” என்றும் கேள்வி எழுப்பினார்.

More articles

2 COMMENTS

Latest article