0
.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மதுரை விமான நிலையத்தில்  இன்று  பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தபோது, “எப்படியாவது தங்கள் அணியில் தே.மு. தி.க.வை சேர்த்து விட வேண்டும் என்று தி.மு.க.வும், பாரதீய ஜனதாவும் செய்த முயற்சிகளை அனைவரும் அறிவார்கள்.
தி.மு.க. தரப்பில் தே.மு.தி.கவுக்கு 500 கோடி ரூபாயும் , 80 தொகுதிகளும் தருவதாக பேரம் பேசினார்கள். பாரதீய ஜனதா தரப்பில் ஒரு மேல்சபை எம்.பி.பதவி, மத்திய மந்திரி பதவி என்று பேரம் பேசினார்கள். ஊழல் பணத்தால் பேரம் பேசினார்கள்” என்று வைகோ கூறினார்.
அரசியல் வட்டாரத்தில் இது பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலைப்போலவே, இந்த சட்டமன்றத் தேர்தலுக்கும் யாருடன் கூட்டணி என்பதை அறிவிக்காம் இழுத்தடித்தார்.  தி.மு.கவுடன் மறைமுகமாக தே.மு.தி.கவுடன் பேரம் நடந்ததாக செய்திகள் வந்தன. அதே போல பாஜகவுடன் பேரம் நடந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் தே.மு.தி.கவின் கூட்டணி கட்சியான ம.தி.மு.கவின் தலைவர் வைகோவே, பேரம் நடந்ததாக கூறியிருப்பது முக்கியத்துவம் பெருகிறது.
மேலும், கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.கவுடனும், பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவுடனும் கூட்டணி அமைக்க எந்தமாதிரியான பேரம் நடந்திருக்கும் என்ற கேள்வியையும் இது எழுப்பி உள்ளது.
இதற்கிடையே, வைகோ சொல்வது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று தி.மு.க. கொதித்திருக்கிறது. வைகோவுக்கு நோடாடீஸூம் கொடுத்துள்ளது.
இந்த நிலையில் விஜயகாந்தின் மனைவியும, தே.மு.தி.க. மகளிர் அணி தலைவியுமான பிரேமலதாவிடம் வைகோ கூறியது குறித்து பத்திரிகையாளர்கள் கேட்டனர்.  அதற்கு அவர், “எனக்கு எதுவும் தெரியாது. வைகோ கூறியது பற்றி அவரிடம்தான் நீங்கள் கருத்து கேட்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
தனது மனைவி பிரேமலதாவின் ஆலோசனையின் பேரியலேயே விஜயகாந்த் செயல்பட்டுவருதாக உறுதியாக கூறப்படுகிறது. இந்த நிலையில் விஜயகாந்த்திடம் தி.மு.க. நடத்திய பேரம் பற்றி தனக்கு தெரியாது என்று பிரேமலதா கூறுவதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
பேரம் பேசிய இவர்களை உதறி தள்ளிவிட்டு ஒரு ஊழலற்ற ஆட்சி அமைய விஜயகாந்த் இன்றைக்கு புறப்பட்டு இருக்கிறார். ஊழலற்ற ஆட்சியை அமைக்க நாங்கள் பாடுபடுகிறோம். இவ்வாறு வைகோ கூறினார்.