astrology_symbol-satyam1
(9.3.2016முதல் 15.3.2016 வரை…. மாசிமாதம் 26ம்தேதி புதன்கிழமை முதல் பங்குனிமாதம் 2 ம் தேதிசெவ்வாய்கிழமை வரை..)


தங்கள் பலன் அறிய உங்கள் ராசியின் பெயர் மீது கிளிக் செய்க !

மேசம் ராசி நேயர்களே
சந்திரன் உங்கள் ராசிக்கு லாபஸ்தானத்தில் இருக்கிற நிலையில் இந்தவாரம் தொடங்குகிறது தொழில் நன்றாக இருக்கும் பொருளாதார விசயத்தில் குரு வக்கிரம் பெற்றும், லாபஸ்தானதிபதி சனி பகவான் எட்டாம் இடத்திலும் இருக்கிறபடியால் வரவுக்கும் செலவுக்கும் செலவுகள் சரியாக இருக்கும்.
தனஸ்தானாதிபதி சுக்கிரன் லாபஸ்தானத்தில் இருப்பது நன்மையை அளிக்கும். எதிர்பாராத பணவரவுகள் வந்து சேரும்.
தற்போது அஷ்டம சனி உச்சத்தில் இருக்கிற காலம் எனவே எதிலும் எச்சரிக்கையாக இருக்கிற வேளை எதிலும் நிதானமாக செயல்படுங்கள், முக்கிய முடிவுகளை ஒத்தி போடுங்கள்
குலதெய்வ வழிபாடு , அம்மன் வழிபாடு, சனிபகவான் வழிபாடு ஆகியன பிரச்சனைகளில் இருந்து தங்களை தற்காத்து கொள்ள உதவும். எள் தானம் செய்யவும்..மாற்றுத்திறனாளிகளுக்கு முடிந்த உதவிகளைசெய்யவும்.
ரிஷப ராசி நேயர்களே…!
உங்கள் ராசியதிபதி பத்தாம் இடத்திலும், சந்திரன் அதனுடன் இணைந்து இருக்கிற நிலையில் இந்தவாரம் தொடங்குகிறது. தொழிலில் புதுய மாற்றங்களை உருவாக்குவீர்கள், அது நன்கு லாபங்களை ஈட்டித்தரும், உத்தியோகம் புரிபவர்களுக்கு பதவி உயர்வு,மேலதிகாரிகளின் பாரட்டுக்களை பெற்றுதரும்.
நான்கில் குரு,ராகு சேர்க்கை தாய்க்கு சிறு சிறு மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். அதே நேரம். தாய்,மகன் இருவருக்கும் இடையில் இருந்த மனக்கசப்புகள் விலகும்.
ஏழில் இருக்கும் செவ்வாய்,சனி சேர்க்கை திருமணம் ஆனவர்களுக்கு மனைவி வழி உறவுகள் மூலம் செலவுகளை உருவாக்கும். பொறுமையும்,நிதானத்தையும் கடைப்பிடிப்பது நல்லது.
தனஸ்தானதிபதி பத்தாம் இடத்தில் இருப்பது நல்ல அமைப்பாகும். சிறிய முயற்சியிலேயே அதிக லாபம் கிடைக்கும். அதே நேரம் கண்டச்சனி நடப்பதால் வாகன ரீதியாக செலவு ஏற்படும். புதிய வாகனங்கள் வாங்கும் எண்ணம் இருந்தால் ஒத்திப்போடவும். கூட்டு தொழில் வேண்டாம் எதிலும் யோசித்து செலவு செய்வதுநல்லது.
சனிபகவானின் வழிபாடும் ஆஞ்சநேயர் வழிபாடு, விநாயகர் வழிபாடு நன்மைதரும்.!
மிதுன ராசி நேயர்களே..!
உங்கள் ராசியதிபதி ஒன்பதிலும் ,சந்திரனும் ஒன்பதில் இருக்கின்ற நிலையில் இந்த வாரம் தொடங்குகிறது இது ஒரு அற்புதமான அமைப்பு தொழில் சிறக்கும். வராக்கடன் வசூலாகும் பெரியமனிதர்கள் தானாகவே முன்வந்து உதவுவார்கள்.
மூன்றில் இருக்கும் குரு,ராகு திடீர் அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும். அதன் மூலம் எதிர்பாரத பணவரவுகள் உண்டு. அதேவேளையில் சகோதர உறவுகளிடம் பொறுமையையும் நிதானத்தையும் கடைப்பிடிக்கவும்.
ஆறில் இருக்கும் செவ்வாய் ,சனி வெற்றிகளை குவிக்கும். போட்டியே இல்லாத சூழ்நிலையை இது உருவாக்கும். தனஸ்தானதிபதி, லக்கினாதிபதி, பாக்கியாதிபதி மூன்றும் ஒன்பதில் கோணம் அமைப்பு உங்களுக்கு கீர்த்திகளை பெற்றுதரும் மகாலட்சுமி வழிபாடு மிக நன்மையை தரும்.!!
கடக ராசி நேயர்களே…!
ராசிநாதன் எட்டில் இருக்கிற நிலையில்.. சந்திராஷ்டமத்துடன் இந்தவாரம் தொடங்குகிறது. எனவே கவனமாக செயல் பட வேண்டிய நேரம். புது முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.
இரண்டில் இருக்கும் குரு,ராகு விரயத்தை ஏற்படுத்துவார். தேவையற்ற செலவுகளை குறையுங்கள்.
ஐந்தில் செவ்வாய்,சனி சேர்க்கை பூர்வீக சொத்துக்களில் பாகப்பிரிவினை பேச்சுக்களை தற்போது எடுக்காதீர்கள். குழந்தைகளிடம் விட்டு கொடுத்து செல்வது நல்லது .
ஞாயிற்றுகிழமைக்கு மேல் தொழில் நன்றாக இருக்கும் சந்திரபகவானின் வழிபாடுமிகச்சிறப்பை தரும்.
சிம்ம ராசி நேயர்களே….!
உங்கள் ராசியதிபதியும், சந்திரனும் ஏழாம் இடத்தில் இருக்கிற நிலையில் இந்த வாரம் தொடங்குகிறது இது திக்பல அமைப்பாகும் தொழில் நன்றாக இருக்கும். கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் புகழ் கூடிவரும்.
அதே நேரம், ராசியலயே குரு வக்கிரம் பெற்று ராகுவுடன் இணைந்து இருப்பதால் குழப்பங்கள் உருவாகும் தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்மைபயக்கும்.
நான்கில் செவ்வாய் சனி சேர்க்கை எதிலும் தடங்கள்கல் கொடுத்து பின் நடக்கும் ஏழில் நான்குகிரகம் அமையப்பெற்றதால் மனைவிக்கு உடல் ரீதியாக சில பாதிப்புகள், கணவன் மனைவி இடையில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படும். விட்டுக் கொடுத்து செல்வது நல்லது
கேதுபகவானின் வழிபாடும், அர்ச்சனையும் அதை நிவர்த்தி செய்யும்
கன்னிராசி நேயர்களே…!
ராசிஅதிபதியும், லாபாதிபதி சந்திரனும் இணைந்து ஆறில் இருக்கிறார்கள். இது உகந்தது அல்ல. செலவுகள் அதிகரிக்கும் தொழில் சுமாரக இருக்கும் வரவுக்கு மிஞ்சிய செலவுகளால் இந்தவாரம் சிரமங்களை கொடுக்கும். கவனமுடன் செயல்படுவது நல்லது.
மூன்றில் செவ்வாய் சனி சேர்க்கையும் கெடு பலன்களையே தரும். அலைச்சல், டென்சன், முன்கோபம் என ஆட்டிப்படைக்கும். பொறுமை… பொறுமை ஒன்றே எதையும் எதிர்கொள்ளும் சக்தியை கொடுக்கும்.
புதுமுயற்சிகளை தவிர்த்துவிடுங்கள். தொழில் ரீதியாக யாரை நம்பியும் பணம் தர வேண்டாம்.
குல தெய்வ வழிபாடு சிறப்பை தரும். சனி, ஞாயிற்று கிழமைகளில் சந்திராஷ்டமம் இருப்பதால் அதன்பின் வரும் நாட்களில் இருந்து நன்றாக இருக்கும் பைரவர் வழிபாடு சிறப்பை தரும்.
துலாம் ராசி நேயர்களே..!
ராசிநாதனும் சந்திரனும் இணைந்து ஐந்தில் கோணம் பெற்று இருக்கிற நிலையில் இந்த வாரம் தொடங்குகிறது. இது நல்ல அமைப்பு தொழில் நன்றாக இருக்கும். உங்கள் திறமையை பலரும் பாராட்டுவார்கள். புதிய பொருட்கள், இடம் வாங்குவீர்கள்
புதியதோர் வாழ்க்கை சூழலில் அடியெடுத்து வைப்பீர்கள். அனைவரின் அன்பை பெற்று திகழ்வீர்கள் கலைத்துறை சார்ந்தவர்களுக்கு புகழ் தேடிவரும்.
இந்த வாரம் அதிர்ஷ்டம் உங்கள் வீட்டிலையே குடியிருக்கும். சனி பகவானுக்கு அர்ச்சனை செய்யவும்…. அம்மன் வழிபாடு நன்மை தரும்…
விருட்சக ராசி நேயர்களே..!
ராசியதிபதி ராசியிலயே இருந்தும் சந்திரன் ஐந்தில் கேந்திரம் பெற்று இருக்கிற நிலையில் இந்தவாரம் தொடங்குகிறது. ஏழரை நாட்டு சனி நடந்தாலும் இந்த கோச்சார அமைப்பு இந்த வாரம் பெற்று இருப்பதால் தொழில் சிறக்கும், தொழில் புதிய புதிய மாற்றங்களை தேடுவீர்கள் அதில் வெற்றியும் பெறுவீர்கள்.
பத்தாம் இடத்தில் குரு,ராகு சேர்க்கை தொழில் ரீதியாக புதிய நட்புக்களையும் அதன்மூலம் புதிய தொழில் வாய்ப்புகளையும் ஏற்படுத்தும்.
நான்கில் நான்குகிரகம் சேர்க்கை பெற்று இருக்கிறது தாய்வழி உறவைச் சர்ந்தவர் ஒருவர் தீடிரென இழப்பை சந்திக்கலாம்.
சனி பகவானுக்கு அர்ச்சனையும், துர்க்கை அம்மன் வழிபாடும் நன்மைகள் அளிக்கும்..
தனுசு ராசி நேயர்களே…!
ராசிநாதன் ஒன்பதிலும், சந்திரன் மூன்றிலும் இருக்கிற நிலையில் இந்த வாரம் தொடங்குகிறது இதுவரை தொழிலில் இருந்த தடைகள் விலகும் , மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் திருமணதடைகள் விலகி சுபகாரியங்கள் நிகழும்.
மூன்றில் நான்கு கிரகங்கள் அதீத தன்னம்பிக்கையை கொடுக்கும், புத்துணர்ச்சியோடு பல காரியங்களில் ஈடுபட்டு வெற்றியை ஈட்டுவீர்கள் உங்கள் உதவியால் நெருங்கிய உறவினர்கள் பலன் அடைவார்கள்.
ஒன்பதில் குரு,ராகுசேர்க்கை தந்தைக்கி சிறு மருத்துவ செலவுகள் கொடுக்கும் பெரிதாக பாதிப்பு இல்லை சக்கரத்தாழ்வார் வழிபாடு நன்மையை தரும்
மகர ராசி நேயர்களே…!
ராசிஅதிபதி பதினொன்றிலும், சந்திரன் தனஸ்தனாத்தில் இருக்கின்ற நிலையில் இந்த வாரம் தொடங்குகிறது தொழில் ரீதியாக, பொருளாதாரா ரீதியாக எந்த குறைகளும் இருக்காது. புதிய புதிய வாய்ப்புகள் தேடிவரும் பயன்படுத்தி கொள்ளுங்கள்.
எட்டாம் இடத்தில் ராகு,குரு சேர்க்கை உள்ளதால் உங்கள் வாழ்க்கைத் துணைக்கு உடல் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உண்டு. அவரவர் ஜாதகப்படி திசாபுத்திகளுக்கு ஏற்ப உரிய வழிபாடுகள் செய்யவும். உளுந்து,கொண்டக்கடலை தானம் செய்யவும்
அம்மன் சன்னிதியில் முடிகாணிக்கை செய்வது உத்தமம்.. சிவ வழிபாடு நன்மைதரும்
கும்ப ராசி நேயர்களே..!
ராசியதிபதி பத்தாம் இடத்திலும், சந்திரன் ஜென்மத்திலும் இருக்கிற நிலையில் இந்த வாரம் தொடங்குகிறது.. சமுதாயத்தில் புதிய அந்தஸ்து,பொறுப்புகள் தேடிவரும் காலம் இது. உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு தலைமை பொறுப்பு ஏற்கும் நேரம் இது. தொழில் மற்றும் அனைத்து வகையிலும் ஏற்றங்கள்தரும்.
பத்தாம் இடத்தில் செவ்வாய் ,சனி சேர்க்கை தொழில் ரீதியாக வெளிமாநில வெளிநாடு பயணங்கள் மேற்கொள்வீர்கள் புதிய ஆட்களின் நட்புக்கள் உங்களை மேலும்வளரச்செய்யும்
ஏழில் குரு,ராகு சேர்க்கை இருப்பதால் ராகுவிற்கு பீரித்தி செய்யுங்கள் நன்மைகள் தரும்.. உளுந்து தானம் செய்யவும்..
மீனராசி நேயர்களே..!
உங்கள் ராசி அதிபதி ஆறில்வக்கிரம் பெற்றும் சந்திரன் மறைவு ஸ்தானத்தில் இருக்கின்ற நிலையில் இந்த வாரம் தெடங்குகிறது. தொழில் சுமாராக இருக்கும். தொழிலில் அதிக முதலீடுகள் போடவேண்டாம். மாணவர்களுக்கு ஞாபகமறதி அதிகரிக்கும்.
புதன் பகவானுக்கு அர்ச்சனை செய்யவும். செவ்வாய் ,சனி சேர்க்கை ஒன்பதில் கோணம் பெற்றிருப்பதால் தந்தைக்கு மருத்துவ செலவுகள் செய்ய வேண்டி வரலாம்.
சனி பகவானுக்கு அர்ச்சனையும், துர்க்கை அம்மனுக்க சிவப்புபட்டு அணிவித்த வழிடவும் பாதிப்புகள்குறையும்.

Goto Top