astrology_symbol-satyam1
(17.02.16 முதல்  23.02.16:  மாசிமாதம் 05ம்தேதி புதன் கிழமை முதல் மாசிமாதம் 11ம்தேதி செவ்வாய்கிழமைவரை..)

தங்கள் பலன் அறிய உங்கள் ராசியின் பெயர் மீது கிளிக் செய்க !

மேசம் ராசி நேயர்களே
உங்கள் ராசியதிபதி செவ்வாய் பகவான்  ஏழிலும் குருபகவான் வக்கிரம் பெற்று ஐந்தில் இருக்கும் நிலையில் இந்த வாரம் தொடங்குகிறது.
நான்காமிடத்து சந்திரபகவான் இரண்டில் தனஸ்தானத்தில் இருக்கின்றபடியால் இந்த வாரம் பொருதார நிலை நன்றாக இருக்கும்.தொழில்  சிறப்புறும். . ஐந்தில் இருக்கும் வியாழன்குழந்தைகளுக்கு சிறு சிறு உடல் நிலை பாதிப்புகளை உண்டு பன்னும் தட்சிணாமூர்த்திக்கி அர்ச்சனை செய்வது நல்லது.
ஏழில் செவ்வாய் இருக்கும் காலத்தில் செவ்வாய் வீட்டில் சனிபகவான் இருப்பது உகந்தது அல்ல.  மனைவிக்கு  உடல் உபாதைகள் ஏற்படும். ஒரு சிலருக்கு பெரும் மருத்துவ செலவு ஏற்படும் நிலை உருவாகலாம்.  சனிபகவானுக்குரிய பரிகாரம் செய்வதனால் பாதிப்புகளை குறைக்கலாம்.
புதன் சுக்கிரன் சேர்க்கை நல்லது. தொழிலில் வித்தியாசமான அனுகுமுறைகளை கையாண்டு வெற்றிகளை குவிப்பீர்கள்,வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
லாபத்தில் ஒரு பங்கை ஏழைகளுக்கு உதவுங்கள் பூர்வ புண்ணியம் பலம் பெறும்.
இந்த வாரம் ராசியான கிழமை ஞாயிறு,திங்கள்.  ராசியான நிறம் மஞ்சள். வழிபடவேண்டிய கடவுள்  சனிபகவான்.!
ரிஷப ராசி நேயர்களே…!
இந்தவாரம் உங்கள் ராசியதிபதி ஒன்பதில்கோணம் பெற்றும், மூன்றாம் இடத்து அதிபதி சந்திரன் ஜென்மத்தில் இருக்கின்றசூழ்நிலையில் தொடங்குகிறது
இது ஒரு நல்ல அமைப்பாகும்.   தொழில்ரீதியாக மாபெரும் மாற்றங்களை இந்த வாரம் உங்களுக்கு கொடுக்கும். நான்காமிடத்து குரு, ராகுசேர்க்கை தாய்க்கு ஆரோக்கிய பாதிப்புகள்ஏற்படுத்தும். தாயின் நட்சத்திரம் கொண்டு ராகு பகவானுக்கு பாலாபிஷேகம்,அர்ச்சனை செய்யவும் பாதிப்புகள் குறையும்.
ஆறாமிடத்து செவ்வாய் தொழில் ரீதியாக இதுவரை தடைபெற்று வந்த அனைத்தும் விலக்கச் செய்வார் நீண்டநாட்களாக முடியாமல் இருந்த இடம் இந்த வாரம் முடிந்துவிடும்.
ஏழாமிடத்து சனிபகவானால் கவலை கொள்ள தேவையில்லை உங்கள் ராசிக்கி கர்மதன்மாதிபதி ஆதிபத்தியம் பெறுவதால் உங்களை காத்துதான் நிற்பார்.
ஜாதகத்தில் சனி திசை நடந்தால்கவனம் சனி பகவானுக்குரிய பரிகாரங்களை செய்துவிடுங்கள் ஒன்பதில் புதன்,சுக்கிரன் சேர்க்கை மிகுந்த நன்மையளிக்கும்.
பத்தாமிடத்து சூரியன்,கேது சேர்க்கை அரசாங்க ரீதியாக சில பிரச்சனைகள்வரும் அதை சமாளித்து வெற்றி கொள்வீர்கள்,பாதிப்பு இல்லை.
இந்த வாரம் ராசியான கிழமை வியாழன். ராசியான நிறம் பச்சை, வழிபடவேண்டிய கடவுள் தட்சிணாமூர்த்தி….
மிதுன ராசி நேயர்களே..!
உங்கள் ராசியதிபதி எட்டாம் இடத்திலும், தனஸ்தானாதிபதி பண்ணிரன்டில் மறைந்தும் காணப்படுகிறார்எனவே
எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது மூன்றாம் இடத்து குரு,ராகு சேர்க்கை முரட்டுத்தனமான தன்னம்பிக்கைகளை கொடுக்கும்ஆனால் அது ஆபத்தானது எதிலும் இந்த வாரம் அவசரப்படாதீர்கள்.
ஆறாம் இடத்து செவ்லாய் ஐந்தில் இருக்கிறார் குலதெய்வ வழிபாடுகள் செய்யவும்.
ஆறில் சனி இருப்பது பலம். எதையும் எதிர்கொள்ளும் மனதிடத்தை கொடுக்கும்
எட்டாமிடத்து புதன்,சுக்கிரன் சேர்க்கை பெண்கள் ரீதியில் கவனம் தேவை அவர்கள்மூலமாக தொந்தரவுகள், செலவுகள்ஏற்பட வாய்ப்பு. ஒன்பதாம் இடத்து சூரியன்,கேது சேர்க்கைதந்தைக்கி சில உடல்ரீதியாக தொந்தரவுகள் கொடுக்கும்,ஆயுள் தீர்க்கம்
சூர்யபகவானுக்கு அர்ச்சனை செய்யுங்கள்.
இந்த வாரம் ராசியான கிழமை புதன்.  ராசியான நிறம் நீலம்.  வழிபடவேண்டிய கடவுள் பைரவர்.
கடக ராசி நேயர்களே…!
இந்தவாரம் உங்கள் ராசியதிபதி ரிசபத்தில் உச்சம் பெற்றும், லாபஸ்தானாதிபதி ஏழில் கேந்திரம் பெற்று ராசியை பார்ப்பதில் அற்புதமான யோகமாகும்.
தொழில் நன்கு வளர்ச்சியடையும் புதிய தொழில் தொடங்குவீர்கள்,
தனஸ்தானத்தில் வியாழன்,ராகுசேர்க்கை எவ்வளவுதான் வருமானம் வந்தாலும் அதே வத்தில் செலவுகளையும் உண்டுபன்னுவார். ஆனால் அது சுப செலவாகவே இருக்கும். யோகாதிபதி நான்கில் கேந்திரம் தாய்வழி உதவிகள் கிடைக்கும் தாய்வழி சொத்துக்கள்வந்துைசேரும் ஐந்தில் அட்டமாதிபதி இருப்பது உகந்தது அல்ல தாய்மாமனை பாதிக்கும்
சனபகவான் இருப்பது செவ்வாய் வீடுஎன்பதால் உங்கள்சகோதரனையும் பாதிக்கும்.
ஏழில் கேந்திரம் பெற்று புதன்,சக்கிரன் சேர்க்கை ராசியை பார்ப்பதானால் எதிர்பாரத பணவரவுகள் வந்துசேரும்.
ஆடம்பர பொருட்களை அணந்து மகிழ்வீர்கள். எட்டாமிடத்து சூரியன் உஷ்ண சம்பந்தமான பிரச்சனைகளை கொடுக்கம், உணவுவிசயத்தில் கவனம் தேவை.
இந்த வாரம் ராசியான கிழமை ஞாயிறு. ராசியான நிறம் இளம் சிவப்பு. வழிபடவேண்டிய கிரகம் செவ்வாய்.!
சிம்ம ராசி நேயர்களே….!
இந்த வாரம் உங்கள் ராசியதிபதி ஏழில் கேந்திரம் பெற்றும், தனஸ்தனாதிபதி ஆறில் மறைந்து இருக்கும் சூழ்நிலையில் இந்த வாரம் தொடங்குகிறது.    ஜென்மத்தில் குரு,ராகு சேர்க்கையும் ஏழில் சூரியன்,கேது சேர்க்கையும் உகந்தது அல்ல.
அதே வேளையில் ஜாதகத்தில் அனைத்து கிரகங்களும் பலம் பெற்று பாக்கியாதிபதி திசை நடந்தால் எவ்வித பாதிப்புகளும் இருக்காது நன்மைகளை நடக்கும்.
மூன்றில்செவ்வாய் கோபத்தை குறத்த்து நிதானமாக யோசித்து பேசுவது,முடிவெடுப்பது நல்லது.   குடும்பத்துடன் ராமேஸ்வரம் சென்று  திலஹோமம் செய்துவரவது நல்லது.
இந்த வாரம் ராசியான கிழமை திங்கள். ராசியான நிறம் வெள்ளை. வழிபடவேண்டிய கடவுள் சக்கரத்தாழ்வார்.!!
கன்னிராசி நேயர்களே…!
இந்த வாரம் உங்கள் ராசியதிபதி ஐந்தில் கோணம் பெற்று தனஸ்தானாதிபதியுடன் இனைந்து இருப்பது நன்மை. தொழில் நன்றாக இருக்கும்.   புதிய வாகனம்,மனை வாங்குவீர்கள்.  குடும்பத்தில் சுபகாரியங்கள் நடந்து கொண்டே இருக்கும்
ஆலய கும்பாவிஷேசங்கள் உங்கள் தலைமையில் நடைபெறும் சமுதாயத்தில் உங்கள்மதிப்பு கூடும் இந்த வார கிரக சேர்க்கைகளால் அஷ்டமாதிபதி இரண்டில் இருப்பதால் சிலர்உங்களை ஏமாற்றவும் கூடும் ஆதலால் கவலைப்படவும் மாட்டீர்கள்.
மூன்றில் இருக்கும் சனி மனதில் உற்சாகத்தையும்,தன்னம்பிக்கையையும கொடுக்கும் ஆறில் சூரியன் கேது பிரச்சனைகளை தாங்களாகவே உருவாக்கி கொள்வீர்கள் எனவேபொறுமையாக செயல்படுவது நல்லது.
இந்த வாரம் ராசியான கிழமை புதன்,வியாழன் ராசியான நிறம் நீலம். வழிபடவேண்டிய கடவுள் சொககநாதர்.
துலாம் ராசி நேயர்களே..!
உங்கள் ராசியதிபதி நான்கிலும்,தனஸ்தானாதிபதி ஜென்மத்திலும் இருக்கிறார்.   சந்திரஷ்டமத்தில் இந்த வாரம் தொடங்குகிறது. ஒரு பிரச்சனை முடிந்தால் மற்றொரு பிரச்சனைவந்துசேரும் ஆனாலும் லக்கினத்தில் இருக்கும் செவ்வாய் எதையும் எதிர்கொள்ளும் மனபலத்தை கொடுக்கும்.
நான்கில் புதன் சுக்கிரன் உறவுகளிடம் இருந்துஉதவிகள்கிடைக்கும்.
ஐந்தில் சூரியன் கேது சேர்க்கை முன் ஜென்ம பாவங்கள் விலக இக்காலத்தை பயன்படுத்தி கொண்டு பரிகாரம் செய்தால் முழுப்பயனையும் நாம் அடையலாம்..
பதினொன்றில் குரு,ராகு சேர்க்கை தீயவழிகளில் அதிகம் பணம் விரயம் செய்ய நேரிடும். அதை  தவிர்ப்பது நல்லது.
இரண்டில் இருக்கும்சனிபகவான் முன்கோபத்தை உண்டு பன்னுவார் நிதானமாக செயல்படுவது நல்லது
இந்த வாரம் ராசயான கிழமை சனி,ஞாயிறு.  ராசியான நிறம் ஆரஞ்ச்
வழிபடவேண்டிய கடவுள்சனிபகவான்,  சிவன்.
விருட்சக ராசி நேயர்களே..!
உங்கள் ராசியதிபதி பன்னிரன்டில் மறைந்தும் தனஸ்தானாதிபதி பத்தில் வக்கிரம் பெற்றிருக்கிற நிலையில் இந்தவாரம் தொடங்குகிறது
ஏழரை நாட்டு சனிபகவான் முதல் சுற்று நடப்பவர்களுக்கு கல்வியில் தடங்கள்கள் வரலாம் சனிபகவானுக்கு அர்ச்சனை செய்யவும்
இரண்டாம் சுற்று நடப்பவர்களுக்கு பொங்கு சனிதான் அதனால் பாதிப்புகள் இருக்காது தொழில் நன்றாக இருக்கும்
கூட்டுதொழில் தவிர்ப்பது நல்லது . மூன்றில் புதன் ,சுக்கிரன் சேர்க்கை பழைய பொருட்களை விற்று புதிய பொருட்களை வாங்குவீர்கள்
நான்கில் சூரியன் கேது உணவு விசயத்தில் கவனம் தேவை வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரலாம் கவனம். வியாழன், வெள்ளி கிழமை களில் சந்திராஷ்டமம் இருப்பதால் கவனம். திருநள்ளாறு சென்று வருவது மிக்கநலம்.
இந்த வாரம் ராசியான கிழமை புதன். ராசியான நிறம் மஞ்சள். வழிபட வேண்டிய கடவுள் ஆஞ்சநேயர்.!
தனுசு ராசி நேயர்களே…!
இந்தவாரம் உங்கள் ராசயதிபதி ஒன்பதில் வக்கிரம் பெற்றும்,தனஸ்தானாதிபதி பன்னிரன்டில் மறைந்தும் காணப்படுகிறது.   பொருளாதாரம் ஏற்றத் தாழ்வுடன் இருக்கும். முக்கயமுடிவுகளை ஒத்தி போடுவது நல்லது
இரண்டில் புதன் சேர்க்கை என்பது கலைத்துறையில் உள்ளவர்களுக்கு பொன்னான நேரம் புதிய புதிய வாய்ப்புகள் உருவாக்கும்.
மூன்றில் சூரியன் கேது சேர்க்கை  தொழில் துணிச்சலுடன் செயல்பட நினைப்பீர்கள் அது இந்த வாரத்திற்கு ஒத்துவராது எனவே நிதானமாக பொறுமையாக செல்வது நல்லது.
ஒன்பதில் குரு,ராகுசேர்க்கை தந்தை வழி றவுகளுடன் சில பிரிவினைகளுக்கு இது வழிவகுக்கும் எனவே முடிந்தளவு விட்டுக்கொடுத்து செல்வது நல்லது
பதினொன்றில் இருக்கும் செவ்வாய் பகவான் நன்மைகளையே செய்வார்.   பழைய வீட்டை புதுப்பீர்கள். மறைந்த சனி பாதிப்புகளைதராது. ஆஞ்சநேயர் வழிபாடு சிறப்பை தரும்.சனி,ஞாயிற்றுகிழமைகளில் சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை.
இந்த வாரம் ராசியான கிழமை புதன்.  ராசியான நிறம் வெள்ளை, நீலம். வழிபடவேண்டிய கடவுள் ஆஞ்சநேயர்.!
மகர ராசி நேயர்களே…!
உங்கள் ராசியதிபதியும்,தனஸ்தானதிபதியும் பதினொன்றில் இருப்பது நல்ல அமைப்பாகும்.   தொழில் ரீதியாக பொருளாதார ரீதியாக நன்றாக இருக்கும்.   அஷ்டமாதிபதி இரண்டில்இருப்பது வராக்கடன்கள் வசூலாகும், எட்டாம் இடத்தில் குரு ராகுசேர்க்கைதான் சாதகமற்றது எனவே எதிலும் யாரையும் நம்ப வேண்டாம்
நம்பிக்கையானவர்களால் ஏமாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது  மனைவிக்கு உடல் ரீதியாக பிரச்சனைகள் ஏற்படலாம் அவர்களின் நட்சத்திரப்படி துர்க்கை அம்மனுக்கு அர்ச்சன செய்யவும்
பத்தாம் இடத்து செவ்வாய் தொழில்ரீதியாக அலைச்சலை கொடுக்கும்.  அதிலும் லாபங்களையும் சேர்த்து கொடுககும் எனவே செவ்வாயால் பாதிப்பு இல்லை.  திங்கள்,செவ்வாய்கிழமைகளில் ச்திராஷ்டமம் உள்ளதால் கவனம்.
இந்த வாரம் ராசயன கிழமை வியாழன்,சனி ராசியான நிறம் மஞ்சள்,நீலம்.  வழிபடவேண்டய கடவுள் புற்று உள்ள நாகசன்னிதி.!
கும்ப ராசி நேயர்களே..!
இந்த வாரம் உங்கள் ராசியதிபதி பத்திலும்,  தனஸ்தானாதிபதி குரு ஏழில் வக்கிரம் பெற்று ஜென்ம ஸ்தானத்தையும் பார்ப்பதுநைன்மையே.  தொழில் வளர்ச்சி அதிகரிக்கும், எதிர்பாராமல்கிடைக்கும்  ஒரு நண்பரின் அறிமுகம் புதிய தொழிலுக்கு வழிவகுக்கும் நன்மையாக இருக்கும்..
ஒன்பதாம் இடத்து செவ்வாய் போட்டி தடைகளை உடைத்தெறிந்து வெற்றிகளை குவிக்க உதவும்.  மறைந்த புதன்,சுக்கிரன் சேர்க்கை கலைத்துறையில் உள்வர்களுக்கு மிகுந்தநன்மையளிக்கும்
புதிய புதிய வாய்ப்புகள் தேடிவரும் . பத்தாம் இடத்து சனிபகவான் அயல்நாட்டு பிரயாணங்கள் சிலருக்கு கொடுக்கும் அது தொழில் ரீதியாக லாபங்களை ஈட்டும்
இந்த வாரம் ராசியான கிழமை செவ்வாய்,புதன்.   ராசியானநிறம்
கருநீலம்,பச்சை வழிபடவேணடிய கடவுள் முருகன்.
மீனராசி நேயர்களே..!
உங்கள் ராசியதிதபதி ஆறிலும்,தனஸ்தானாதிபதி செவ்வாய்பகவான் எட்டாம் இடத்தில் இருக்கிறர்கள்.  சந்திரா லக்கினமும் உகந்ததாக இல்லை எனவே இந்த வாரம் நிதானத்துடன்செயல்படுவது நல்லது. புது முயற்சிகளில் ஈடுபடுவதை ஒத்தி போடுங்கள்.
லாபாதிபதியும்,விரயாதிபதியும் ஒன்பதில் கோணம் பெற்று இருக்கிறது.  வரவுகளும்,செலவுகளும் சரிசமமாக இருக்கும்..
புதன் சுக்கிரன் சேர்க்கை லாபஸ்தானத்தில் இருப்பது நன்மை தொழில் நன்றாக நடக்கும்.    ஆறாமிடத்து சூரியன் பன்னிரன்டில் மறைவது  எதிரிகளால் நன்மை உருவாகும்.  அவர்களாகவே உங்களுக்குஉதவ முன்வருவார்கள்
இந்த வாரம் ராசியான கிழமை திங்கள். ராசியான நிறம் வெள்ளை. வழிபட வேண்டிய கடவுள் மகாலட்சுமி.

Goto Top