வாடகைக்குத்தான் விட்டோம்!:  ஃபீனிக்ஸ் சொல்லும் குமார கணக்கு!

Must read

luxe

சென்னை:

சென்னை வேள்ச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மாலில்  உள்ள 11 திரையரங்குகளை முதல்வர் ஜெயலலிதாவின் உடன் பிறவா சகோதரி சசிகலா குடும்பத்தினர் வாங்கியதாக வெளியான தகவலை, பீனிக்ஸ் மாலை நிர்வகிக்கும் கிளாசிக் மால் டெவலப்மெண்ட் நிறுவனம் மறுத்துள்ளது.

சென்னை வேளச்சேரியில்  உள்ளது ஃபீனிக்ஸ் மால். இங்கு  உள்ள 11 திரையங்குகள் சமீபத்தில் விற்கப்பட்டதாக தகவல் வெளியானது.  முதல்வர் ஜெயலலிதாவின் உடன் பிறவா சகோதரி சசிகலாவின் நெருங்கிய உறவினர்களின்  ஜாஸ் சினிமாஸ் நிறுவனம் 1000 கோடி ரூபாய்க்கு வாங்கியிருப்பதாகவும் தகவல் வெளியானது.

இப்போது இந்தத் தகவலை பீனிக்ஸ் மாலை நிர்வகிக்கும் கிளாசிக் மால் டெவலப்மெண்ட் நிறுவனம் மறுத்துள்ளது.      இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

“குறிப்பிட்ட 11 திரையரங்குகளையும் ஜாஸ் நிறுவனம் 1000 கோடி ரூபாய்க்கு விலைக்கு வாங்கியதாக ஊடகங்களில் வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானவை  திரையரங்குகள் 5 ஆண்டு காலத்திற்கு வாடகைக்குதான் விடப்பட்டுள்ளன.

ஒப்பந்த காலம் முடிந்ததும் இந்த திரையரங்குகள் அனைத்தும் கிளாசிக் மால் டெவலப்மெண்ட் நிறுவனத்திடமே வந்து சேரும் என்றும்  அந்த அறிக்கையில்  கூறப்பட்டுள்ளது.

“இந்த தகவலை குமாரசாமிகள் நம்பலாம்.. மற்றவர்கள் நம்பமாட்டார்கள்” என்று கிண்டலாக கூறுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article