ஓலா, உபர்
வருமானத்தை வாரி வழங்கிய
ஓலா, உபர் கார் ஓட்டுநர்களின் வருமானம் வீழ்ச்சி

 
உபர் போன்ற நிறுவன்ங்களின் கார்களை ஓட்டியவர்களின் வருமானம் ஒரு காலத்தில் உச்சத்தில் இருந்த்து. ஆனால் இன்றோ அவர்களின் வருமானம் மிகவும் சொற்பமாய்ச் சுருங்கி விட்ட்தாக புலம்புகிறார்கள் அந்த ஓட்டுனர்கள்.
புனேயில் வசித்து வரும் பிரமோத் நாராயணன்,  கடந்த 18 ஆண்டுகளாய் சொந்தமாய் வாடகை கார் ஓட்டி வந்தவர். அப்போது அவரின் மாத வருமானம் ரூ.18 ஆயிரத்தை தாண்டமுடியவில்லை.
இந்நிலையில், உலகம் முழுவதும் புதிய வியாபார  ஆப்ஸ் உத்தியுடன்  கொடிகட்டிப்பறக்கும் ஓலா, உபர் நிறுவன கார்கள் இந்திய சாலைகளிலும் ஓடத்தொடங்கின.அதன்பின்,ஓலா நிறுவனத்தின் கீழ் இவருடைய காரையும் ஓட்டுவதற்கு தன்னுடைய காரையும் பெயரையும் பதிவுசெய்து கொண்டார். இதற்குப்பின்னர் பிரமோத்தின் வருமானம் மாதம் ரூ.80 ஆயிரம் முதல் ரூ.90 ஆயிரத்தை எட்டியது. இரண்டே ஆண்டுகளில் அவருடைய வருமானம் எகிறத் தொடங்கியது.
அதேபோல்தான் டெல்லியில் கணவரைப்பிரிந்து தனியாக வாழ்ந்துவரும் பூனம் என்ற பெண்மணியின் கதையும். 2 மாதக் கர்ப்பத்துடன் சாலைகளில் எலுமிச்சை, சோளம் என விற்பனை, கால் செண்டர் மற்றும் பகுதிநேரப் பணிகள் என கடுமையாய் வேலைபார்த்தும் மிகுந்த கஷ்டத்துடன் வாழ்க்கையை நடத்தி வந்தவர். அடுத்து அவர் கார் ஓட்டக் கற்றுக் கொண்டார்.அதன்பின் ஒரு கார் ஓட்டுனராக தனது  பணியை மாற்றிக் கொண்டார்.
பூனம், ஒரு தனியார் நிறுவனத்தில் கார் ஓட்டியாகச் சேர்ந்து அனுபவங்களையும், ஓரளவு வருமானத்தையும் பெற்றுவந்தார். அப்போதுதான் உபர் நிறுவனத்தில் கார் ஓட்டும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.  சில மாதங்களிலேயே அவருடைய மாதவருமானம்  ரூ.90 ஆயிரம் வரை கிடைத்திருக்கிறது.இப்படி அடிமட்ட வருமானத்தில் வாழ்ந்த இந்த இருவரைப்போன்ற ஏராளமான கார் ஓட்டிகளின் வருமானத்தை உச்சம் தொட வைத்திருந்திருக்கிறது ஓலா, உபர் கார் நிறுவனங்கள்.
ஆனால் இந்த காரோட்டிகளின் வசந்த காலம் நீண்டகாலத்துக்கு நிலைத்து நிற்கவில்லை. மீண்டும் பழைய சொற்ப வருமானத்துக்கே வந்து விட்டது அவர்களின் வாழ்க்கை.
தற்போதெல்லாம் தினசரி ரூ.600 முதல் ரூ.700 கிடைப்பது என்பதே பெரும்பாடாக இருக்கிறதாம். இதில் மாதம் தோறும் கார் வாங்கிய தவணை கட்டுவதற்கே பெரும் சிரமப்பட வேண்டியிருக்கிறதாம். குழந்தைகளுக்கு பள்ளிக்கட்டணம் கூட கட்டமுடியாமல்  சிலர் என நிறுத்தியுள்ளனர். அவர்களையும்,  மனைவியையும் வேலைக்கு அனுப்ப வேண்டிய சூழலில் இருப்பதாக வருத்தப்படுகிறார் பிரமோத் நாராயணன்.
அதிகாலை 3 மணிக்கு எழுந்து சாலைகளிலில் கார் ஓட்டத்துவங்கி நள்ளிரவு வரை உழைக்கும் பூனத்தின் வருமானம் சற்று பர்வாயில்லை. ஆனாலும் முன்னர் கிடைத்த வருமானம் மூன்றில் ஒரு பகுதியாகிவிட்டதே என கவலைப்படுகிறார். இது இவர்கள் இருவரின் கவலை மட்டுமல்ல.  இந்தியா முழுவதும் ஓலா, உபர் கார் ஓட்டிகளின் வாழ்வில் படர்ந்திருக்கிற ஒட்டுமொத்த துயரம்.இதற்கு என்ன காரணம்?
சர்வதேச புகழ் பெற்ற ஓலா, உபர் வாடகை கார் நிறுவனங்கள் இந்தியாவில் கடை விரித்தவுடன் இச்சேவைக்காக தங்களுடைய கார்களையும் கார் ஓட்டும் பணிக்காகவும் ஆர்வத்துடன் ஓடிப்போய் பதிவுசெய்தனர். இதனால் ஓலாவில் பதிவுசெய்யப்பட்ட ஓட்டுனர்க்ளின் எண்ணிக்கை 40 ஆயிரம் ஆனது. அதேபோல்தான் உபர் நிறுவனத்திலும் பெரிய எண்ணிக்கையிலான ஓட்டுனர்கள் தங்கள் பெயரினையும் கார்களுடன் பதிவு செய்தனர்.  சிலர் இரண்டு நிறுவன்ஙகளிலும்கூட தங்களின் பெயரினை பதிவு செய்தனர். இப்படி கார் ஓட்டிகளாய் பதிவு செய்தவர்கள் புதிதாய் கார் வாங்குவதற்கான வழிமுறைகளை மிக எளிதாய்ச் செய்து கொடுத்தன இந்த இரு நிறுவன்ங்களும். எனவே பதிவு செய்த ஓட்டுனர்கள் அனைவருக்கும் மாத தவணையில்  செலுத்தும்  வசதியுடன் புதிய கார்கள் கிடைத்தன. ஓலா நிறுவனம் ஒட்டுனர்களுக்கு தனிநபர்க் கடன்களையும், அவர்களின் பிள்ளைகளுக்காக கல்விக் கடன்களையும் அளிக்க முனவந்தன.
உபர் நிறுவனம் மாநில அரசுகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு ஏராளமான கார் ஓட்டுனர்களை தொழில்முனைவோராக மாற்றியது.  இந்த இரு நிறுவனங்களும் போட்டிப்போட்டுக் கொண்டு தன்னுடைய ஓட்டுநர்களுக்கு சலுகைகளையும், விரும்பிய நேரத்தில் பணிக்குச் செல்லலாம் என்ற வாய்ப்பினையும் தந்தது.இதனால் காரோட்டிகளுக்கு நல்ல வருமானத்தையும் தரும் நிறுவனங்களாக இவை விளங்கின. இதனால் இங்கு  கார்களுடன் வந்து குவிந்த ஓட்டுனர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரிக்கத் தொடங்கியது.
இந்த அதிக கூட்டம்தான் வருமானத்துக்கு உலை வைக்கத் துவங்கி விட்டது. தங்களிடம் பதிவுசெய்துள்ள அனைத்து ஓட்டுனர்களுக்கும் அந்நிறுவன்ங்களால் வேலை கொடுக்க முடியவில்லை. மேலும் ஒவ்வொரு சவாரிக்கும் ஊக்கத் தொகையாக ரூ.200 வழங்கப்பட்டு வந்த்து. ஆனால் அது தற்போது வேறுமாதிரி மாற்றப்பட்டுவிட்டது எங்கிறார் உபர் நிறுவன ஓட்டுனர் ராகுல். கடுமையான போக்குவரத்து நெரிசலில் 4 சவாரிகள் சிரமப்பட்டு ஓட்டினால்  ஓட்டுனருக்கு ரூ 2400ம,  6 மணி நேர சவாரிக்கு 3000, எட்டு மணி நேர சவாரிக்கு ரூ.3500, 10 மணி நேர சவாரிக்கு ரூ.4000 கிடைக்கும். கடுமையான வாகன நெரிசலில் அதிகமான சவாரிகள் எடுத்து முழு ஊக்கத் தொகையினை எவராலும் பெறமுடியவில்லை என்கிறார் உபரின்  ராகுல்.
ஆனால்  ஓலாவில் ஒரு குறைந்தபட்ச தொகைக்கு உத்தரவாதம் இருந்தது.அதாவது ஒவ்வொரு சவாரிக்கும் குறைந்தது ரூ.400 கிடைக்க வாய்ப்பிருந்தததாம் ஆனால் தற்போது ஓலா நிறுவனமும் அதனைக் குறைத்துவிட்டதாம்.
மேலும் ஓட்டுனர்களின் எண்ணிக்கை அதிகரிப்பாலும் அவர்களுக்கான வருமானம் குறையத் தொடங்கி விட்டது.புனே போன்ற சிறிய நகரங்களில் தேவைக்கு அதிகமாக  ஓலா மற்றும் உபர் போன்ற வாடகை கார்களின் எண்ணிக்கை இருப்பதும் ஒரு முக்கியக் காரணம். கூடுதல் வருமானத்துக்காக இரவு நேரங்களில் அதிகநேரம் உழைக்க வேண்டியிருக்கிறது. இது நீண்டகாலத் தீர்வாகாது. இன்னும் புதிதுபுதிதாய் ஓலா, உபர் நிறுவனங்களில் தங்கள் கார்களை பதிவு செய்வதை சில காலம் நிறுத்தி வைக்கலாம். ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குப்பிறகு இப்பதிவினைத் தொடரலாம். வாகன எண்ணிக்கையை ஒரு வரம்புக்குள் வைத்திருக்க வேண்டும் என்கிறார்கள் ஓலா மற்றும் உபர் நிறுவன காரோட்டிகள்.
எதுவாக இருந்தாலும் தேவைக்கு அதிகமாய் உற்பத்தி அதிகரித்தால் அதன் விலை குறையும் (டிமாண் அண்ட் சப்ளை )– இது எளிமையான பொருளியல் பாடம். இதற்கு ஓலாவும், உபரும் மட்டும் விதிவிலக்கல்ல..!