லைட்ஸ் ஆஃப்: “என் படம் ஜெயிச்சுருச்சே!” : வருத்தப்படும் வித்தியாச இயக்குநர்

Must read

light1

ரியாதைக்குறைவான தலைப்பில் படம் எடுத்து தோல்வி அடைந்த “சிவ” இயக்குநர், அடுத்ததாக நம்பர் நடிகையை வைத்து “நானும் முரடன்தான்” என்ற படத்தை இயக்கினார். சமீபத்தில் வெளியான இந்த படம் பரவலான வரவேற்பை பெற்றிருக்கிறது.  ஆனால் இயக்குநரோ அப்செட்டில் இருக்கிறார்.

இயக்கிய படம் ஜெயித்தால் மகிழ்ச்சிதானே அடைய வேண்டும்?

காரணம் இருக்கிறது. இந்த பட ஷூட்டிங் நடந்தபோதே இயக்குநருக்கும், நம்பர் நடிகைக்கும் பற்றிக்கொண்டது.

இடையில் கேரளா சென்று திருமணமும் செய்து கொண்டார்கள். இதற்கிடையே, நடிகை வீட்டில் வருமானவரி ரெய்டு நடந்தபோது, அவரது சில சொத்துக்கள் இயக்குநரின் பெயருக்கு மாற்றப்பட்டது பற்றி அதிகாரிகள் கேட்க, “அவர் என் ஹஸ்பெண்ட்” என்று பதிலிறுத்தார் நடிகை.

இந்த “நானும்..” படம் ரிலீஸான பிறகு தங்களது திருமணத்தை வெளியுலகுக்கு அறிவிக்கலாம் என்று முடிவு செய்திருந்தது ஜோடி.

ஆனால் படம் வெற்றி அடையவே, தொடர்ந்து புதிய வாய்ப்புகள் நடிகைக்கு வர… “ரெண்டு வருசம் கழிச்சு மேட்டரை ஓப்பன் பண்ணலாம்” என்று கட்டளை போட்டுவிட்டார் நடிகை.

இதனால்தான் காதல் கணவரான டைரக்டர் அப்செட் ஆகியிருக்கிறார்.

“ஏற்கெனவே நாலைந்து பேரை காதலர் போஸ்டிங்குக்கு தேர்ந்தெடுத்து கழற்றிவிட்ட நடிகை. அதே கதி நமக்கும் வந்துடுமோனு பயப்படுறார் டைரக்டர். ஏன்னா, இந்த படம் இல்லேன்னா அடுத்தபடம்கூட நடிகையே தயாரிக்க இவர் இயக்குநரா வலம் வரலாம். ஆனால் காதல் கணவர் என்கிற போஸ்டிங் போய்விட்டால் என்ன செய்வது…” என்கிறார்கள் கோலிவுட்டில்.

டைரக்டரின் வருத்தம் நியாயமாகத்தான் படுகிறது!

 

More articles

Latest article